கடன் அடைக்க சிறந்த நேரம் | கடன் அடைக்க உகந்த ஓரை
அனைத்து ஆன்மிக நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள்..! இன்றைய பதிவில் கடன் அடைப்பதற்கான நல்ல நேரம் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக நாம் வாங்கும் கடனை எந்த நேரத்தில் மற்றும் எந்தெந்த நாட்களில் அடைத்தால், நமக்கு மீண்டும் கடன் சுமை வராது என்பது நம்மில் பலரின் மனதிலும் உள்ள கேள்வியாகும். இந்த கேள்விக்கான பதிலைத்தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
கடன் அடைக்க நல்ல நேரம்:
முதலில் நாம் வாங்கும் கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற எண்ணம் நமது மனதில் உறுதியாக இருந்தாலே நமது கடன்களை சீக்கிரம் அடைத்துவிட முடியும்.
மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மற்றும் குறிப்பிட்ட நாட்களில் கடனை திருப்பி அளிக்க ஆரம்பித்தால் நீங்கள் வாங்கிய கடனை மிக விரைவிலேயே அடைத்துவிட முடியும் அது என்ன நேரம் மற்றும் நாட்கள் என்று பார்க்கலாம்.
கடனை அடைக்க உகந்த நேரம்:
முதலில் நீங்கள் வாங்கியுள்ள கடனை செவ்வாய் கிழமையில் செவ்வாய் ஓரையில் (காலை 6 மணியிலிருந்து-7 மணிக்குள், அல்லது மதியம் 1 மணியிலிருந்து -2 மணிக்குள்) திரும்ப கொடுக்க ஆரம்பித்தீர்கள் என்றால் கடனை சீக்கிரம் அடைத்துவிடலாம்.
கடனை அடைக்க உகந்த ஓரை:
செவ்வாய் கிழமை என்பது கடனை அடைப்பதற்கான நல்ல நேரம் ஆகும். அந்த செவ்வாய் கிழமை அன்று குளிகை மதியம் 12 மணியிலிருந்து – 1.30 மணிக்குள் வரும் அந்த நேரமே கடனை அடைக்க சிறந்த நேரமாகும்.
மேலும் சனி ஓரையும் நீங்கள் வாங்கிய கடனை திரும்பிக்கொடுக்க ஆரம்பித்தீர்கள் என்றால் கடனை சீக்கிரம் அடைத்துவிடலாம் மற்றும் கடன் வாங்கும் நிலைமையும் ஏற்படாது.
கடனை அடைக்க உகந்த நாள்:
அடுத்து கேது மற்றும் செவ்வாய் இணைந்த நேரமான மைத்ர முகூர்த்த நேரமும் கடனை அடைக்க சிறந்த நேரமாகும்.
அதேபோல ஞாயற்றுக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வரக்கூடிய சதுர்த்தி திதியும் கடனை அடைக்க சிறந்த நாள் ஆகும்.
கடனை அடைக்க உகந்த நாட்களில் மிக முக்கியமான நாள் எது என்றால் கரிநாள் ஆகும். ஒரு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று கரிநாட்கள் வரும் அந்த நாட்களை நீங்கள் வாங்கிய கடனை திரும்பிக்கொடுக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடனை அடைக்க மரண யோக நாட்களும் சிறந்த நாட்கள் ஆகும்.
கடனை அடைக்க உகந்த நட்சத்திரம்:
மேலும் சில நட்சத்திரங்கள் வரக்கூடிய நாட்களிலும் கடனை அடைப்பது மிகசிறந்த பலனை அளிக்கிறது. அவை என்னென்ன நட்சத்திரங்கள் என்றால் அஸ்வினி மற்றும் அனுஷம் ஆகிய இரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடனை திரும்ப கொடுக்க ஆரம்பித்தீர்கள் என்றால் கடனை சீக்கிரம் அடைத்துவிடலாம்.
மேலே கூறியுள்ள நேரம், நாட்கள், நட்சத்திரங்கள் மற்றும் ஓரை ஆகியவற்றில் நீங்கள் வாங்கிய கடனை அடைக்க உகந்த நாட்கள் மற்றும் நேரம் ஆகும்.
கடன் தொல்லை தீர இதை மட்டும் செவ்வாய்கிழமை செய்திடுங்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |