எப்பேர்ப்பட்ட கடனையும் அடைக்க மார்ச் மாதத்தில் உள்ள இந்த 2 நாட்கள் மட்டும் போதும்..!

Advertisement

கடன் அடைக்க உகந்த நாள் எது..?

மனிதனாக பிறந்த அனைவருக்கும் அவரசித்திற்காக கடன் வாங்கும் பழக்கம் இருக்கும். அத்தகைய கடனை நாம் சில நாட்களில் திருப்பி செலுத்தாவிட்டால் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது. அதே அந்த கடனை திருப்பி செலுத்தாமல் மீண்டும் கடன் புதியதாக வாங்கினால் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும். நாமும் எப்படியாவது தீராத இந்த கடனை தீர்த்து விட்டு மகிழ்ச்சியாக கடன் தொல்லை இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைப்போம். உங்களுடைய எண்ணம் மிக விரைவில் நிறைவேறுவதற்கு இன்றைய ஆன்மீக பதிவு உங்களுக்கு உதவும் வகையில் இருக்கும். எப்படி என்றால் எப்பேர்ப்பட்ட கடனையும் அடைக்க மார்ச் மாதத்தில் மிகவும் முக்கியமான 2 நாட்கள் உள்ளது. ஆகையால் அது என்ன நாட்கள் அந்த நாட்களில் நாம் எப்போது கடனை அடைக்க வேண்டும் என்று விரிவாக தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும் கடன்கள் அடையும் வீண் செலவு குறையும்..

கடன் அடைக்க உகந்த நாள் 2023:

உங்களுக்கு உள்ள எப்பேர்ப்பட்ட கடனையும் படிப்படியாக குறைக்க மார்ச் மாதத்தில் உள்ள இரண்டு நாட்கள் மிகவும் நல்ல நாட்களாக இருக்கிறது. அதாவது கடனை திரும்ப செலுத்துவதற்கு மைத்திரி முகூர்த்தம் என்பது மிகவும் சிறப்பான ஒரு நாளாக உள்ளது.

இத்தகைய மைத்திரி முகூர்த்தம் மார்ச் மாதத்தில் 2 நாட்களில் வருகிறது. இந்த மைத்திரி முகூர்த்தம் மார்ச் மாதத்தில் 14-ஆம் தேதி செவ்வாய் கிழமை மற்றும் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மைத்திரி முகூர்த்தம் வருகிறது.

நீங்கள் மைத்திரி முகூர்த்தமான செவ்வாய்க்கிழமை மதியம் 1 to 02.30 மணிக்குள் உங்களுக்கு இரண்டு கடன் இருந்தால் இரண்டு கவரை எடுத்துக்கொண்டு அதில் உங்களால் முடிந்த 20, 50, 200 மற்றும் 500 ரூபாய் பணம் மற்றும் ஏலக்காய், கிராம்பு இவற்றையும் வைத்து கொள்ளுங்கள். இப்போது அதில் ஒரு பிரியாணி இலையில் கடன் தீர வேண்டும் என்று எழுதி அந்த கவரில் வைத்து விடுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ பணக்கஷ்டம் நீங்க இந்த பொருட்கள் எல்லாம் எப்போதும் குறையாமல் இருக்க வேண்டும்..!

கவரை தயார் செய்த பிறகு சுத்தமாக குளித்த விட்டு உங்களுடைய பூஜை அறையில் அந்த கவரை வைத்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

இதனை போலவே மார்ச் மாதம் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 8 to 09.15 மணிக்குள் செய்ய வேண்டும். கடனை நீங்கள் முழுமையாக அடைத்த பிறகு பணத்தினை வெளியே எடுத்துவிட்டு கவரை எரித்து விடுங்கள்.

இவ்வாறு செய்து வைத்து விட்டு நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைக்க முயற்சியினை விடாமல் செய்துகொண்டே இருந்தால் தான் கடன் விரைவில் அடையும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

குறிப்பு: இந்த ஆன்மீக குறிப்பை மட்டும் செய்தால் கடன் குறையாது. அதற்கான உழைப்பு மற்றும் முயற்சி கட்டாயம் அவசியம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement