Kadan Prachanai Theera Vali
பணக்கஷ்டம் இல்லாதவர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. இந்த காலகட்டத்தில் அனைவருக்குமே பணக்கஷ்டம், கடன் தொல்லை போன்ற பிரச்சனைகள் இருக்கும். மனிதனாக பிறந்த அனைவருமே ஏதோ ஒரு சூழ்நிலையில் கடன் வாங்குகிறார்கள். நாளடைவில் அதை அடைப்பதற்கு கஷ்டப்படுகிறார்கள். சிலர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் கையில் தங்குவதே இல்லை என்று புலம்புகிறார்கள். கடன் தொல்லை நீங்கள் வேண்டும் என்று பல பரிகாரங்கள் செய்தும் பலன் கிடைக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!
நினைத்தது உடனே நடக்க இதை மட்டும் செய்துடுங்கள் 1 ரூபாய் வெற்றிலையில் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும் |
கடன் பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும்..?
கடன் பிரச்சனை அனைவருக்குமே இருக்கிறது. நாம் வாழும் இந்த உலகில் பலரும் படிப்பு செலவு, மருத்துவ செலவு, திருமண செலவு மற்றும் வீட்டு வாடகை என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகிறார்கள். இந்த கடன் பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் எத்தனையோ பரிகாரங்களை செய்து வருகிறார்கள்.
அவர்களுக்கு உதவும் வகையில் பொதுநலம்.காம் ஆன்மிகம் பதிவில் தினமும் ஒரு தகவலை பதிவிட்டு வருகிறோம்.
கடன் தொல்லை தீருவதற்கு நமக்கு சுக்கிர பகவானின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டும். அதேபோல வெற்றியை கொடுக்கும் பொருள் வெற்றிலை தான். வெற்றிலை மிகவும் சக்தி வாய்ந்த பொருள் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
காரணம் நம் வீட்டில் எந்த பூஜை செய்தாலும் அதில் வெற்றிலையும் கட்டாயம் இருக்கும். நாம் எந்தவொரு நல்ல விஷயத்தை செய்தாலும் அதில் கட்டாயம் வெற்றிலை இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால், அனுமனுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக சீதா தேவி அவர்கள் அனுமனின் தலையில் வெற்றிலையை வைத்து தான் ஆசிர்வாதம் செய்தார்கள். இதை வைத்தே வெற்றிலைக்கு ஆன்மீகத்தில் முக்கியத்துவம் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
கடன் பிரச்சனை காணாமல் போவதற்கு 5 மிளகு மட்டும் போதும்..! |
வெற்றிலை பரிகாரம்:
முதலில் சுத்தமான மற்றும் கிழியாமல் இருக்கும் 6 வெற்றிலைகளை கடையில் இருந்து வாங்கி கொள்ள வேண்டும். சுக்கிர பகவானுக்கு உகந்த எண் 6 என்பதால் 6 வெற்றிலைகளை எடுத்து கொள்ளவும்.
ஒரு மஞ்சள் நிற துணி அல்லது நகை வைத்து கொடுக்கும் ரோஸ் நிறத்தில் இருக்கும் துணியை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 6 வெற்றிலைகளை வைத்து அதனுடன் பாக்கு மற்றும் 1 ரூபாய் நாணயம் வைத்து மடித்து கொள்ள வேண்டும்.
பின் இந்த துணியை பூஜை அறையில் வைத்து கடன் தொல்லை நீங்க வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ள வேண்டும்.
பிறகு மடித்து வைத்துள்ள இந்த துணியை பணம் வைக்கும் இடங்களான பீரோ, கல்லாப்பெட்டி போன்ற இடங்களில் வைத்து விடவேண்டும். பின் 3 நாட்கள் கழித்து இந்த வெற்றிலையை நீங்கள் வயதானவர்களுக்கு கொடுத்து விடலாம். இதுபோல நீங்கள் 1 மாதம் செய்து வந்தால் உங்கள் வீட்டில் கடன் தொல்லை நீங்கி பணவரவு அதிகரிக்க தொடங்கும்.
இந்த 3 இடத்தில் வசம்பை வைத்தால் உங்கள் வீட்டில் பணம் கட்டுக்கட்டாக சேரும்..! |
ஏழைகளை பணக்காரர்களாக மாற்றும் வசம்பு பரிகாரம் |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |