எந்த திசையில் காகம் கத்தினால் என்ன பலன் கிடைக்கும்..?

Advertisement

Kagam Karaiyum Thisai Palan

இன்றைய பதிவில் காகம் கரையும் திசைக்கான பலன்களை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் சிறுவயதில் இருந்தே காகத்தை பார்த்திருப்போம். நம் வீட்டின் பக்கத்திலோ அல்லது நம் வீட்டு கூரையிலோ காகம் கத்தினால் நம் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்று பெரியவர்கள் கூறுவார்கள். காகம் கரைவதால் நல்ல சகுனமும் இருக்கிறது கெட்ட சகுனமும் இருக்கிறது என்று கூறுவார்கள். அந்த வகையில் காகம் எந்த திசையில் கத்தினால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்கள் வீட்டை பார்த்து காகம் அடிக்கடி கரைவதற்கு காரணம் என்ன தெரியுமா.?

காகம் கரையும் திசை பலன்கள்: 

காகம் கரையும் திசை பலன்கள்

காகம் சனிபகவானின் வாகனம் என்று கூறப்படுகிறது. அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை அமாவாசை அன்று காகங்களுக்கு உணவு அளித்து நம் முன்னோர்களை வணங்கி வருகின்றோம்.

அதனால் காகம் சில திசைகளில் கரைந்து நமக்கு நடக்க போகும் சில விஷயங்களை முன்கூட்டியே தெரிவிக்கிறது என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

கிழக்கு திசை: 

காகம் நம் வீட்டில் கிழக்கு திசையில் கத்தினால் நாம் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் என்று நம்பபடுகிறது. உங்கள் முயற்சியின் மூலம் உங்களுக்கு லாபம்  கிடைக்கும்.

மேற்கு திசை:

மேற்கு திசையில் காகம் கரைந்தால் உங்களை தேடி ஒரு இனிய செய்தி வரும். உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்பு ஏற்படும். செல்வம் சேரும் வாய்ப்பு இருக்கிறது.

வடக்கு திசை:

காகம் வடக்கு திசையில் கத்தினால் உங்கள் வீட்டில் சில இடையூறுகள் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களுடன் சில வாக்குவாதங்கள் உண்டாகும். நீங்கள் செய்யும் செயல்களில் சில தடங்கல் ஏற்படும்.

காகம் எச்சம் உங்கள் மீது பட்டால் அதற்கான பலனை தெரிந்துகொள்ளுங்கள்..!

தெற்கு திசை: 

தெற்கு திசையில் காகம் கரைந்தால் நாம் நினைத்த காரியம் நல்ல முறையில் நடந்து முடியும் என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கு புதியதாக சில நட்புறவுகள் கிடைக்கும்.

தென்கிழக்கு திசை: 

காகம் தென்கிழக்கு திசையில் கத்தினால் சண்டை காரணமாக விலகி இருக்கும் உறவுகள் மறுபடியும் உங்கள் குடும்பத்தில் வந்து சேருவார்கள். நீண்ட நாட்களாக இருந்த பகை விலகும்.

தென்மேற்கு திசை: 

தென்மேற்கு திசையில் காகம் கரைந்தால் உங்கள் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும்.

வடகிழக்கு திசை: 

வடகிழக்கு திசையில் காகம் கரைந்தால் உங்களிடம் இருக்கும் விலை மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போகும் வாய்ப்பு ஏற்படும்.

வடமேற்கு திசை:

காகம் வடமேற்கு திசையில் கத்தினால் நீங்கள் எடுத்த காரியங்களில் சில தடைகள் ஏற்படும். நீங்கள் எடுத்த வேலை முடிவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும்.

மேலும் காகம் எந்த திசையில் கரைந்தாலும் வீட்டிற்கு விருந்தினர் வருகை உண்டாகும்.

காகம் தலையில் தட்டினால் என்ன காரணம்?

இதையும் படியுங்கள்⇒ எந்த பறவை வீட்டிற்குள் வந்தால் மிகவும் அதிர்ஷ்டம் உங்களுக்கு தெரியுமா..?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement