கன்னி ராசி
வணக்கம் நண்பர்களே..! இன்றைய ஆன்மீக பதிவில் ராசிகளில் ஆறாவது ராசியான கன்னி ராசியின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அனைவருக்கும் திருமணத்தை பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதாவது நமக்கு காதல் திருமணமாக இருக்குமா அல்லது வீட்டில் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்குமா என்று பார்க்கலாம். மேலும் கன்னி ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரரை திருமணம் செய்தால் அவர்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ கன்னி ராசியின் பொது பலன்கள் மற்றும் குணங்கள்
கன்னி ராசிக்காரரின் திருமண வாழ்க்கை:
காலச்சக்கரத்தில் ஆறாவது இடத்தில் இருக்கக்கூடிய கன்னி ராசிக்காரர்கள் அன்பை வெளிப்படுத்துவதில் திறமை உள்ளவர்கள். எந்த செயலையும் நேராமையாக செய்வார்கள்.
இந்த ராசிக்காரர்கள் பொதுவாக லச்சணமாக இருப்பார்கள். ஆனால் கொஞ்சம் மந்தமாகவும் இருப்பார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் மகர ராசிக்காரரை திருமணம் செய்வதன் மூலம் இவருடைய வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
விருச்சிக ராசிக்காரரை கன்னி ராசிக்காரர்கள் திருமண செய்து கொள்ளலாம். இதனால் இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து சூழ்நிலையிலும் உறுதுணையக இருப்பார்கள்.
கன்னி லக்னம் 7– ஆம் அதிபதி உச்சம் ஆனதால் திருமணம் ஆன பிறகு நினைத்தது எல்லாம் நடக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு திருமணதிற்கு பிறகு வியாபாரம் செய்வது, வீடு, மனை வாங்குவது இதுபோன்ற விஷயங்கள் அமோகமாக இருக்கும்.
கன்னி லக்ன ராசிக்காரர்களின் மாமனார் வீட்டிற்கு அருகில் விளையாட்டு மைதானம், சிறுவர் பள்ளி, அல்லது கல்லூரிகள் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது.
கன்னி ராசிக்காரரின் சிலர் மாமியார் வீடு கடல் பகுதியில் இருக்கும்.
மாமியார் சற்று வெகுளியாகவும் சிலர் மிக புத்திசாலியாகவும் இருப்பார்கள். மாமனார் அதற்கு எதிர்மறையாக கோபக்காரராக இருப்பார்கள்.
கன்னி ராசிக்காரரின் மனைவி வீடு வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கும்.
கன்னி ராசிக்காரரின் களத்திர வீடு, கால புருஷ தத்துவப்படி 12- ஆம் வீடு ஆதலால் இவரின் மனைவி நன்றாக பயணம் செய்யும் ஆவல், நன்றாக செலவு செய்யும் ஆசை இருக்கும். அதுமட்டும் இல்லாமல் நன்றாக தூங்குவதற்கு விருப்பம் உடையவராக இருப்பார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் திருமணம் செய்யும் வாழ்க்கை துணையின் பெயர் T, N, S, R, L, Y, V இந்த எழுத்துக்களில் இருக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |