காரடையான் நோன்பு ஸ்லோகம் | Karadaiyan Nombu Slokam in Tamil..!
பொதுவாக ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களும் கார்த்திகை, பௌர்ணமி மற்றும் பிரதோஷம் என பல விரதங்களை எடுப்பார்கள். இத்தகைய விரதம் என்பது பொதுவாக நமக்கு தெரிந்த ஒன்று. ஆனால் இவை இல்லாமல் இன்னும் பல விரதங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு விரதம் இருக்கும் போது ஒவ்வொரு விரதத்தின் போதும் அதற்கான மந்திரங்களை கூறுவார்கள். அதில் சிலர் மந்திரங்களை பார்த்தும் மற்ற சிலர் பார்க்காமலும் கூறுவார்கள். அப்படி பார்த்தால் இத்தகைய மந்திரம் அனைத்தும் எல்லோருக்கும் தெரிவது இல்லை. அதனால் இன்று சுமங்கலி பெண்கள் எடுக்கும் காரடையான் நோன்பிற்கான ஸ்லோகத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
Karadaiyan Nombu Slokam in Tamil:
தோரம் க்ருஷ்ணாமி ஸுபகே ச
ஹரித்ரம் தாராம்யஹம்
பர்த்துஹூ ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
ஸுப்ரீத பவ ஸர்வதா
காரடையான் தியானம்:
ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம்
புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே
தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்
காமாக்ஷீம் ஆவாஹயாமி.
காரடையான் விரதம் மந்திரம்:
மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்
மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி
அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம்
ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |