கார்த்திகை தீபம் முறையாக ஏற்றுவது எப்படி..? | Karthigai Deepam Vilakku Etrum Murai

Advertisement

How to Celebrate Karthigai Deepam in Tamil 

இந்துக்கள் கொண்டாடும் மிகவும் முக்கியமான பண்டிகை, இந்த கார்த்திகை தீபத்திருநாள் தான். இந்த கார்த்திகை தீபம் திருவிழா பண்டைய காலத்தில் இருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது. தீபம் என்பது நம் உள்ளத்தில் உள்ள இருளைப் போக்கி ஒளியை பரவ செய்யும். தீபம் என்பது ஞானத்தின் அறிகுறி, மங்கலத்தின் சின்னம் ஆகும்.

இந்த கார்த்திகை தீபத்திருவிழா இன்றோ, நேற்றோ தோன்றியது அல்ல 1000 வருடங்களுக்கு முன்பே இந்துக்களால் கொண்டாடப்பட்ட ஒரு வழிபாடுதான், இந்த கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். தமிழ் மாதங்களிலே 8-வது மாதத்தில் வரக்கூடிய இந்த கார்த்திகை தீபமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிவன், முருகன், விஷ்ணு மூவரையும் வழிபடும் மாதமாக அமைந்ததுத்தான் இந்த கார்த்திகை மாதம். கார்த்திகை தீபத்தின் நோக்கமே நமது பாவங்களை போக்கி பிரகாசமாக ஆக்குவது தான்.

சோமவார விரதம் இருக்கும் முறை..! 

சிலர் இந்த கார்த்திகை தீப திருநாள் அன்று முதல் நாளே விளக்கேற்றி தொடர்ந்து மூன்று நாட்கள் விளக்கேற்றுவார்கள். சிலர் கார்த்திகை தீபத்திருநாள் அன்று விளக்கேற்றி தொடர்ந்து மூன்று நாட்கள் விளக்கேற்றுவார்கள், சிலர் கார்த்திகை மாதம் முழுவதும் வீடு வாசலில் விளக்கேற்றுவார்கள். இவ்வாறு விளக்கேற்றும் முறை பொறுத்தவரை அவர் அவர் பழக்கத்தை பொறுத்தது. சரி கார்த்திகை தீபத்திருநாள் அன்று முறையாக தீபம் ஏற்றுவது எப்படி என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

 Karthigai Deepam Vilakku Etrum Murai: 1

இந்த கார்த்திகை தீபத்திருநாள் அன்று வீடு மற்றும் பூஜை அறைகளை சுத்தம் செய்து, வீட்டின் தலைவாசல் படிக்கு மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.

Murai: 2

அன்றைய தினம் சிவன், முருகன் இருவரையும் நினைத்து விரதம் இருந்து அன்று மாலை பொழுது சாயும் நேரத்துக்கு முன்பாக, அதாவது 6 மணிக்கு தங்களது வீட்டின் நடுவாசல், கூடம், மாடிப்படிகள், வராண்டா, துளசி மாடம், கைப்பிடிச் சுவர்களில் அகல் விளக்கேற்ற வேண்டும்.

Murai: 3

வீடுகள் தோறும், தெருக்கள் தோறும், ஊர் முழுவதும் விளக்குகள் ஒளிர்வதால் அனைத்து இடங்களும் ஜோதிமயமாக, மங்களகரமாக காணப்படும். பூஜையின் போது சிவனுக்குரிய ஸ்தோத்திரங்கள் சொல்லி, பொரியுடன் வெல்லம் சேர்த்து உருண்டை செய்து படைப்பது சிறப்பு. தினைமாவிலும் விளக்கேற்றி வழிபடலாம்.

 Murai: 4

குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் அன்பு, நிதானம், மனஉறுதி, சகிப்புத்தன்மை, சம்யோகித புத்தி ஆகியவற்றை குறிப்பதாக நம் சான்றோர்கள் கூறுகின்றனர்.

இந்த குத்துவிளக்கினை, கார்த்திகை தீபம் திருநாள் அன்று வீட்டின் வாசலில் ஏற்றி, கோவில்களுக்கு சென்று கார்த்திகை தீப ஜோதி தரிசனம் செய்வதால் தடை, தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

மன அமைதியும், மன உறுதியும் ஏற்படும். இல்லத்தில் இருந்து தீயசக்திகள் நீங்கி, நமது மனம், சொல், செயல் அனைத்தும் சுத்தமாகும் என்பது நம்பிக்கை.

தீப விளக்கு ஏற்றி, அறியாமை இருள் அகன்று வளமான வாழ்வும் இறை அருளும் பெறுவோம்.

பூஜை விதிமுறைகள்:-

  • கார்த்திகை தீப ஒளி திருநாள் அன்று விளக்குகளை சுத்தம் செய்யக்கூடாது. எனவே முதல் நாளே வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் சுத்தம் செய்து, விளக்குகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பயன்படுத்த வேண்டும்.
  • என்னதான் வீட்டில் நிறைய அகல் விளக்குகள் இருந்தாலும், வருடம் வருடம் ஒரு சில புதிய விளக்குகளை வாங்கி விளக்கேற்ற பயன்படுத்த வேண்டும்.
  • வாசலில் குத்துவிளக்குகளை ஏற்றும் போது தாம்பூலம் அல்லது பலகையில் வைத்து தான் விளக்கேற்ற வேண்டும்.
  • மாடிப்படிகள், வராண்டா, கூடம் போன்ற இடங்களில் விளக்கேற்றுவதற்கு, கீறல் விழுந்த உடைந்த அகல் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement