சமயலறையில் இந்த பொருட்கள் இருந்தால் கஷ்டம் மேல் கஷ்டம் ஏற்படும்..

keeping these things at kitchen at bad luck in tamil

சமையல் அறையில் வைக்க கூடாத பொருட்கள்

வணக்கம் ஆன்மிக நண்பர்களே..! இந்துக்கள் வாஸ்து சாஸ்திரப்படி படி தான் செயல்களை செய்வார்கள். அதாவது வீடு கட்டுவதற்கு அடிகல் வைப்பதிலிருந்து வீட்டு ஒவ்வொரு அறையும் வாஸ்து சாஸ்திரப்படி படி தான்  வைப்பார்கள். வீட்டில் இந்த பொருட்கள் இருக்க கூடாது என்று அறிந்திருப்போம். ஆனால் சமையலறையில் எந்தெந்த பொருட்கள் இருக்க கூடாது என்று தெரியுமா..? அப்படி சில பொருட்களை இருந்தால் என்ன விளைவுகளை சந்திப்பீர்கள் தெரியுமா..? தெரியவில்லை என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு சமையலறையை வாஸ்துப்படி இப்படி வைத்துள்ளீர்களா .!

துடைப்பம்:

துடைப்பம்

பெரும்பாலான நண்பர்கள் வீட்டின் சமையலறையில் தான் துடைப்பத்தை வைத்திருப்பீர்கள். வாஸ்து படி வீட்டின் சமயலறையில் துடைப்பத்தை வைக்க கூடாது. சமையலறையில் துடைப்பம் இருந்தால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியாது. குழப்பங்கள் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருக்கும். அதுமட்டுமில்லாமல் பணம் கஷ்டம் ஏற்படும். அதனால் துடைப்பத்தை சமையலறையில் வைத்திருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தவும்.

கண்ணாடி:

கண்ணாடி

சமையலறையில் கண்ணாடி இருந்தால் வீட்டில் கெட்ட எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் உள்ளவர்களுடன் பிரச்சனை ஏற்படும். பிரச்சனை சுமுகமாக முடியாது. கணவன், மனைவி பிரிந்து போவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் சமையலறையில் கண்ணாடி இருந்தால் கழட்டி விடுங்கள்.

குப்பை தொட்டி:

குப்பை தொட்டி

அனைவரும் வீட்டில் குப்பை தொட்டி சமயலறையில் தான் வைத்திருப்பீர்கள். அணல் அந்த குப்பை தொட்டியை வாஸ்து படி வைத்திருக்கீர்களா..! குப்பை தொட்டியை வாஸ்து படி வைக்கணுமா என நினைத்து சிரிக்காதீர்கள்..! உண்மைதான் தாங்க குப்பை தொட்டியை வட கிழக்கு மூளையில் மட்டும் வைக்காதீர்கள். மற்ற எந்த திசையில் வேணுமானாலும் வைத்துக்கொள்ளலாம். முக்கியமாக குப்பை தொட்டியை மூடி வைக்க வேண்டும். குப்பை தொட்டியை வட கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் அமைதியே இருக்காது.

உடைந்த பொருட்கள்:

உடைந்த பொருட்கள்

சமையறையில் எப்பொழுதும் உடைந்த பாத்திரம் இருக்க கூடாது. சின்ன கீறல் பட்டு தெரிச்சிருந்தாலும் அந்த பாத்திரங்களை பயன்படுத்தாதீர்கள். இந்த மாதிரி பாத்திரங்கள் இருந்தால் கெட்ட எண்ணங்களை உருவாக்கும். வீடு முன்னேற்றம் அடைவதற்கு தடையாக இருக்கும்.

பூச்சி மருந்து:

சமையலறையில் பூச்சி மருந்துகளை வைப்பது மிகவும் ஆபத்தானது. மற்றும் வாஸ்து சாஸ்திரப்படி பூச்சி கொல்லி மருந்துகளை சமையலறையில் வைக்க கூடாது. அதுமட்டுமில்லாமல் எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தும். ஆகவே சமையலறையில் பூச்சி மருந்துகளை வைத்திருந்தால் அப்புறப்படுத்துங்கள்.

வீட்டில் கஷ்டம் ஏற்படாமல் இருக்க மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் சமைலறையில் வைத்திருந்தால் அப்புறப்படுத்துங்கள்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்