செல்வத்தை வாரி வழங்கும் குபேர ஜல தீபம் ஏற்றும் முறை மற்றும் அதன் பலன்கள்..!

Advertisement

குபேர ஜல தீபம் ஏற்றுமுறை முறை மற்றும் அதன் பலன்கள் | Kubera Jala Deepam

ஆன்மிக வாசகர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் நமது வீட்டில் குபேர ஜல தீபம் ஏற்றுவது எப்படி? அதனை ஏற்றுவதினால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம். தீபத்தில் நாம் நிறைய வகையான தீபம் பார்த்திருப்போம். அகல் தீபம், கல் உப்பு தீபம், எலுமிச்சையில் தீபம் ஏற்றுவார்கள். ஆனால் யாரும் ஜலத்தில் தீபம் ஏற்றி இருக்க வாய்ப்புகள் குறைவு. குபேர ஜல தீபம் என்பது மிகவும் சிறப்பான ஒன்றாலும். தண்ணீரில் எறியக்கூடிய தீபம் தான் குபேர ஜல தீபம். இந்த தண்ணீர் தீபம் ஏற்றுவதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். சரி வாங்க குபேர ஜல தீபம் ஏற்றும் முறையை முதலில் பார்க்கலாம்.

 குபேர ஜல தீபம் ஏற்ற தேவைப்படும் பொருள்:

 • கண்ணாடி பவுல் – ஒன்று
 • திரிநூல் – ஒன்று
 • பிளாஸ்டிக் கவர் – ஒன்று
 • கலர் பொடி – ஏதாவது  ஒன்று
 • விளக்கேற்றும் எண்ணெய் – சிறிதளவு
 • தண்ணீர் – தேவையான அளவு
 • கல் உப்பு – சிறிதளவு

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சகல செல்வம் கொடுக்கும் குபேர பூஜை..!

குபேர ஜல தீபம் ஏற்றும் முறை – Kubera Jala Deepam:

ஸ்டேப்: 1

கண்ணாடி பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் இரண்டு கல் உப்பை சேர்த்து அந்த பவுல் முக்கால் அளவு நிரம்பும் வரை தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

தண்ணீர் ஊற்றிய பிறகு உங்களுக்கு பிடித்த கலர் பவுடரை அதில் சிறிதளவு சேர்த்து கலந்துவிடுங்கள்.

ஸ்டேப்: 3

பிறகு அதில் ஒரு 1/4 டம்ளர் விளக்கேற்றும் எண்ணெய்யை பவுலில்  ஊற்ற வேண்டும்.

ஸ்டேப்: 4

பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரை மேல் படத்தில் காட்டியுள்ளது பில் கட் செய்து, திரிநூலையும் அதேபோல் செட் செய்து கொள்ளுங்கள். திரிநூலை கவரில் செட் செய்தபிறகு விளக்கேற்றும் எண்ணெயை திரிநூலில் நன்றாக அப்ளை செய்து விடுங்கள்.

ஸ்டேப்: 5

பிறகு அந்த திரி நூலை பவுலில் வைத்து விளக்கேற்ற வேண்டும்.

குபேர ஜல தீபம் ஏற்றுவதினால் கிடைக்கும் பலன்கள் – Kubera Jala Deepam Benefits in Tamil:

 • வீட்டில் செல்வம் பெரும்.
 • கரிய தடை விளக்கும்.
 • மனக்கஷ்டங்கள், பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கும்.
 • வீடு லட்சுமி கடாட்சியமாக இருக்கும். குறிப்பிக்க வீட்டில் ஐஸ்வர்யம் உண்டாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குபேர மூலையில் என்ன வைக்கலாம்

எப்பொழுது ஏற்ற வேண்டும்?

வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று காலை அல்லது மாலை 6 மணிக்கு ஏற்றலாம். இந்த தீபத்தை பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டும். அதிலும் இந்த தீபம் தானாக அணையும் வரை வேண்டும். நீங்கள் இதனை எக்காரணம் கொண்டும் அணைத்துவிட கூடாது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement