குபேர மூலையில் என்ன வைக்கலாம் | Kubera Moolai

kubera moolayil enna vaikalam

குபேர மூலை என்றால் என்ன? அதன் பலன்கள்

Kubera Moolai: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் குபேர மூலையில் என்ன பொருள் வைக்கலாம் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி அறியலாம்.  வடகிழக்கு மூலையை ஈசானி மூலை என்றும் வடமேற்கு மூலையை வாயு மூலை என்றும் கூறுவார்கள். வடமேற்கு மூலைக்கும் மற்றும் வடகிழக்கு மூலைக்கும் இடையில் இருப்பது தான் குபேர மூலையாகும். சரி வாங்க குபேர மூலை பலன்கள் பற்றி பார்க்கலாம்.

குபேர மூலை என்பது எது?

குபேர மூலை எந்த திசையில் இருக்கிறது – குபேர மூலை:

  • வடக்கு திசை நோக்கிய குபேர மூலையாகியது குபேரர் கடவுளுக்கு உகந்தது. உதாரணத்திற்கு உங்கள் வீடு கிழக்கு நோக்கி இருந்தால் நீங்கள் கிழக்கு பார்த்து நின்று கொள்ளுங்கள். உங்களுக்கு இடப்பக்கமாக உள்ளது வட கிழக்கு மூலை மற்றும் உங்களுக்கு வலப்பக்கமாக உள்ளது தென் கிழக்கு மூலையாகும்
  • வடகிழக்கு மூலை ஈசானி மூலை, தென்கிழக்கு மூலை அக்னி மூலை, தென்மேற்கு மூலை கன்னி மூலை என்றும், வடமேற்கு மூலை வாயு மூலை என்றும் கூறுவார்கள்.
லக்ஷ்மி குபேர பூஜை செய்யும் முறை

Kubera Moolai – குபேர மூலையில் என்ன வைக்கலாம்?

  • குபேரரை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. அது போல குபேர மூலையில் பீரோவை வைத்தால் செல்வம் பெருகும்.
  • மேலும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் தங்களது Cash (காசோலையை) குபேர மூலையில் வைப்பதன் மூலம் தொழில் நன்கு வளர்ச்சி அடையும் செல்வமும் பெருகும்.
  • தொழிலில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் லாபம் பன்மடங்கு அதிகரிக்க குபேரற்கு பாலபிஷேகம் செய்வது சிறந்தது. வியாபாரம் தொய்வு பெறாமல் இருப்பதற்கு வருடத்தில் ஒருமுறை திருவண்ணாமலையில் உள்ள குபேர லிங்கத்தை வழிபடுவது நல்லது.

கிழக்கு பார்த்த வீடு குபேர மூலை – Kubera Moolai:

  • தங்களுடைய வாழ்க்கை மற்றும் தொழில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வடக்கு திசை நோக்கி பயணம் செய்யுங்கள்.
  • வீடு அல்லது மனை எது வாங்குவதாக இருந்தாலும் அதை வடக்கு திசை பார்த்து வாங்குங்கள். குபேரர் கடவுளை வியாழக்கிழமையில் வழிபடுவது சிறந்தது. அப்படி வழிபட்டால் பண பற்றாக்குறை வராது. மேலும் ஈசானி மூலை மற்றும் குபேர மூலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஈசானி மூலையை Empty-யாக வைத்திருக்க வேண்டும். வற்றாத செல்வம் பெருகுவதற்கு குபேர மூலை சிறந்தது
குபேர விளக்கு ஏற்றும் முறை..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்