குங்குமம் வைப்பதன் நன்மைகள்..! Kungumam Benefits In Tamil..!

kungumam in tamil

குங்குமம் வைப்பதால் சில ஆன்மீக விஷயங்கள்..! Kungumam Vaikum Murai..!

Kungumam In Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! பொதுநலம்.காம் பதிவில் மங்களகரமான பொருள் குங்குமம் பற்றிய சில ஆன்மீக தகவலை இன்றைய பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம். பெண்கள் குங்குமம் வைக்க வேண்டும் என்பது சாஸ்திரத்தின் வழக்கம். அனைத்து பூஜை சுப காரியங்களில் வைக்க கூடியது இந்த குங்குமம்.

திருமணம் ஆன பெண்கள் கண்டிப்பாக குங்குமம் வைக்க வேண்டும் என்பது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தும் இன்றும் இதை கடைபிடித்து வருகின்றனர். சரி வாங்க இப்போது குங்குமத்தின் சிறப்புகளை பற்றி முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

newதிருமண ரேகை பலன் | தார ரேகை பலன் | Marriage line in hand

குங்குமத்தின் மகிமைகள்:

இப்போது உள்ள காலத்தில் சுமங்கலி பெண்கள் குங்குமம் வைப்பதில் மிகவும் ஆர்வம் கொள்வதில்லை. குங்குமமிற்கு பதிலாக கடைகளில் விற்கக்கூடிய பொட்டுகளை மட்டுமே வைக்கின்றனர். பெண்கள் குங்குமத்தில் இருக்கக்கூடிய சிறப்புகளை தெரிந்துகொண்டால் கண்டிப்பாக இதை வைக்காமல் இருக்க மாட்டார்கள்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

குங்குமம் தயாரிப்பு முறை:

குங்குமம் எப்படி தயாரிப்பது என்றால் மஞ்சள், தண்ணீர், சுண்ணாம்பு, மற்றும் படிகாரம் போன்ற பொருள்களை வைத்து இந்த குங்குமத்தை தயாரிக்கின்றனர். குங்குமத்திற்கு சேர்த்த பொருள்கள் அனைத்தும் சிறிது நாள் கழித்து குங்குமம் இரும்பு சத்து நிறைந்ததாக மாறும்.

குங்கும சிறப்பு:

குங்குமத்தை மற்றொரு பெயரில் “கிருமிநாசினி” என்றும் கூறுகிறார்கள். அனைவரின் வீட்டு வாசலிலும் குங்குமம் வைப்பது பாரம்பரிய வழக்கமாகும்.

குங்குமம் வைக்கும் முறை:

குங்குமத்தை புருவத்தின் இரு புறத்தின் நடுவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் வைக்கலாம். திருமண பெண்கள் நெற்றியின் நடு பகுதியில் குங்குமத்தை இடுதல் வேண்டும். இதனால் உடல் சூடு குறையும். பெண்கள் குங்குமம் அணிவதால் காந்த சக்தி அதிகரிக்கும்.

newகுழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்..!

லக்ஷ்மி செல்வம் பெருகும்:

பெண்கள் தினமும் புருவத்தின் இடையில் குங்குமம் வைப்பதால் மஹாலக்ஷ்மியின் செல்வம் கிடைக்கும். காலையில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் நேரத்தில் நெற்றியில் குங்குமத்தை வைத்து பயிற்சி செய்தால் சூரியனின் சக்தி முழுமையாக கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

குங்குமத்தை எந்த விரலால் வைக்க வேண்டும்:

குங்குமத்தை பெரும்பாலும் வலது கையில் ஆள்காட்டி விரலால் தொட்டு இடுவது இயல்பு. ஆனால் குங்குமத்தை மோதிரம் அணியும் விரலால் மட்டும் இடுவது சரியான பண்பாடு. வீட்டில் எப்போதும் கட்டாயமாக குங்குமம் இருப்பது அவசியம்.

முக்கியமாக வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வந்தால் அவர்களுக்கு கையில் குங்குமம், மஞ்சள் கொடுத்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். குங்குமம் அணிவதால் கணவரின் ஆயுள் கூட அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

newவீட்டில் லட்சுமி கடாட்சம் வர என்ன செய்ய வேண்டும்? | Lakshmi kataksham tips in tamil
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்