உங்கள் வீட்டிற்கு இந்த பூச்சிகள் வந்தால் மிகவும் அதிர்ஷ்டம் தெரியுமா..!

Advertisement

Lucky Insects for Home in Tamil

வணக்கம் நண்பர்களே.. நமது வீட்டிற்குள் சில வகையான பூச்சிகள் வருவது உண்டு அதில் சில விஷப்பூச்சிகளாவும் இருக்கும். சில பூச்சிகள் உணவு தேடுவதற்கும் வருகிறது. அந்த வகையில் நாம் பார்க்க இருப்பது என்ன என்றால் நமது வீட்டிற்குள் எந்த பூச்சிகள் வந்தால் வந்தால் அதிர்ஷம். இதன் மூலம் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி அறியலாம் வாங்க..

வண்ணத்துப்பூச்சி வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்?

வண்ணத்துப்பூச்சி

Lucky Insects for Home in Tamil – உங்கள் வீட்டிற்கு கருப்பு நிறத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சிகள் வந்தால் நீங்கள் உங்கள் முன்னோர்களை சரியாக வழிபடவில்லை என்பதை இது குறிக்கிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் முன்னோர்களுக்கு சரியாக திதி கொடுப்பது, தற்பனை செய்வது இது போன்ற விஷயங்களை சரியாய் செய்துவிடுங்கள். இதனை செய்வதனை முன்னோர்கள் உங்கள் மீது கொண்ட கோபம் குறைந்து அவர்களது ஆசி உங்களுக்கு கிடைக்க கூடும்.

எறும்பு வீட்டிற்குள் வரிசையாக வந்தால் என்ன பலன்?

உங்கள் வீட்டிற்கு சிற்றெறும்பு அல்லது கரும்பு எறும்பு எந்த எறும்பாக இருந்தாலும் சரி. எறும்புகள்  கூட்டம் கூட்டமாக உங்கள் வீட்டிற்கு வரிசையாக வருகிறது என்றால் அது மிகவும் நல்ல விஷயம் தான். அதாவது உங்கள் நிருமகமான உறவு உங்கள் நொடி பொழுதும் உங்களை பற்றி நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தமாகும். இதனை உணர்த்தவே உங்கள் வீட்டிற்கு எறும்புகள் வரிசை வரிசையாக வருகிறது.

தேனீ வீட்டிற்குள் வந்தால் என்ன பலன்?

உங்கள் வீட்டிற்கு தேனீக்கள் வருகிறது அல்லது கூடு காட்டுகிறது என்றால் அதற்கு என்ன பலன்? தேனீக்கள் சாதரணமாக வீட்டிற்குள் வருவது என்பது நல்ல பலன்கள் அளிப்பதில்லை. அதாவது உங்கள் வீட்டில் திருட்டு நடக்க வாய்ப்புகள் உள்ளது. அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போது உங்கள் பணம் அல்லது பொருட்கள் திருட்டு போக அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆக நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக அன்றைய நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே தேனீக்கள் உங்கள் வீட்டிற்குள் வந்து உங்களை எச்சரிக்கிறது. தேனீ ஒருமுறை உங்கள் வீட்டிற்குள் வந்தால் பயம் வேண்டாம் ஆனால் தொடர்ந்து உங்கள் வீட்டிற்கு வருகிறது என்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பல்லி வீட்டில் இருந்தால் என்ன பலன்?

உங்கள் வீட்டில் பல்லி சாமி அறையில் இருந்தால் மிகவும் அதிர்ஷ்டமான விஷயம் ஆகும். அதாவது உங்கள் வீடு செல்வம் மற்றும் செழிப்போடு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வீட்டில் துளசி மாடம் இருந்து அங்கு பல்லி இருந்தால் சாட்சாத் அந்த விஷ்ணு மற்றும் மகாலட்சுமி உங்கள் வீட்டில் இருப்பதற்கான அர்த்தமாகும்.

எறும்பு பற்றிய நல்ல பலன்கள் மற்றும் கெட்ட பலன்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 எறும்பு வீட்டுக்குள் வந்தால் என்ன ஆகும் தெரியுமா? | எறும்பு வருவதன் உண்மையான காரணம் பற்றி தெரிந்துகொள்ளலாம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement