அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் நித்தியகல்யாணி செடியின் மகிமை..!

Lucky Plant for Home in Tamil

அதிர்ஷ்டம் தரும் நித்தியகல்யாணி செடி – Lucky Plant for Home in Tamil

வீட்டில் அதிர்ஷ்டம் பெருக்க பலவகையான விஷயங்களை தொடர்ந்து செய்து வருவோம். அதனுடன் மேலும் அதிர்ஷ்டம் அளிக்கக்கூடிய ஒன்றாக நித்தியகல்யாணி செடி விளங்குகிறது. இந்த நித்தியகல்யாணி செடி அதிர்ஷ்டத்தை வாரி வழங்கக்கூடிய செடியாக சொல்லப்படுகிறது. இந்த செடியை வீட்டில் வளர்த்தால் நமக்கு என்ன அதிர்ஷ்டம் கிடைக்கும். என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த திசையை பார்த்து இந்த நித்தியகல்யாணி செடியை வளர்க்க வேண்டும். இதுபோன்று இந்த நித்தியாகலியணி செடி பற்றி ஆன்மிக தகவலை நாம் இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

பல இந்த நித்திய கல்யாணி செடியை சுடுகாட்டு பூ என்று கொச்சையாக சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த நித்தியகல்யாணி செடியின் உண்மையான அர்த்தம் என்னவென்றால் நித்தியம் என்பதன் பொருள் தினமும், கல்யாணம் என்பதன் பொருள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் மங்களகரமான சுப நிகழ்வு என்று. ஆக நாம் இந்த செடியை வீட்டில் வளர்பதினால் தினமும் மங்களகரமான சுபநிகழ்வுகள் நிகழும் என்று பொருள் ஆகும்.

செடியை எங்கு வளர்க்கலாம்:

நித்தியகல்யாணி

பொதுவாக நித்தியகல்யாணி செடியை உங்கள் வீட்டின் வாசல் ஓரங்கள் இருபுறமும் வளர்க்கலாம். இப்படி வீடு வாசலில் வளர்பதினால் உங்கள் வீட்டில் தினமும் மங்களகரமான விஷயங்கள் நடக்கும். உங்கள் வீடும் மங்களகரமாக லட்சுமிகடாட்சியமாக இருக்கும். மேலும் நமது வீட்டிற்கு தீய சக்திகள் எதுவும் அண்டாது.

இந்த நித்தியகல்யாணியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் வெற்றியின் அடையாளமாக சொல்லப்படுகிறது. ஆக உங்களுக்கு வெகுநாட்களாக தள்ளிச்சென்ற காரியங்கள் சீக்கிரம் நடைபெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்த நித்தியகல்யாணி செடியை தினமும் பறித்து உங்கள் பார்சிலோ, பையிலோ வைத்து கொண்டு அந்த காரியம் நடைபெறுவதற்க்கான செயல்களை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் அந்த காரியம் வெற்றி பெரும்.

இச்செடியை வீட்டின் வாசலில் வளர்பதினால் மற்றவர்களினால் ஏற்படும் கண் திருஷ்டி வருவதை இந்த நித்தியகல்யாணி செடி தடுக்கிறது.

வீட்டில் இருப்பவர்களுக்கு இருக்கும் மன அழுத்தம், கணவன் மனைவி பிரச்சனை, குடும்பபத்தினருடன் இருக்கும் கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு இது போன்ற பிரச்சனைகள் குறையுமாம்.

இந்த நித்தியகல்யாணி செடியை வீட்டில் வளர்த்தோம் என்றால் நமக்கு மருத்துவ செலவு குறையுமாம், அதாவது நமக்கு நோய்கள் அவ்வளவு சீக்கிரம் அண்டாதாம், காரணம் இந்த செடியில் இருந்து வரும் காற்றை நாம் சுவாசிப்பதினால் நமக்கு எந்த நோயிகளும் அவ்வளவு எளிதாக அண்டாதாம்.

மேலும் இந்த செடியை வீட்டில் வளர்ப்பதினால் செல்வ வளம் பேருக்கும், கடன் பிரச்சனை குறையும், வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்