முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்..! Macha Sastram Tamil..!
Macha Sastram For Female In Tamil: வணக்கம் தோழிகளே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பெண்களுக்கு முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன அதிர்ஷ்டம் இருக்கிறது என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். பெண்களுக்கு இருக்கும் மச்சங்களை அறிவியல் அறிஞர்கள் பலர் இறந்துபோன சிவப்பணுக்களின் வெளிப்பாடுதான் இந்த மச்சம் என்று கூறுகிறார்கள். பெண்களுக்கு இருக்கும் மச்சமானது ஜோதிடத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. ஜோதிடத்தில் ஒருவரின் மச்சத்தினை வைத்தே அவர்களுடைய குண அதிசயங்களை கூற முடியும். மச்ச சாஸ்திரம் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருந்துகொண்டே இருக்கும் சாஸ்திரம் ஆகும். மச்சம் என்பது ஆயக்கலைகள் 64-ல் இருக்கின்ற அங்க லட்சண சாஸ்திரங்களில் ஒன்றுதான் இந்த மச்ச சாஸ்திரம். சிலருக்கு அதிர்ஷ்டம், பதவி, சொத்துக்கள், ஆடம்பரமான வாழ்க்கை வரும் போது அவர்களை எல்லாரும் மச்சக்காரன் என்று அழைப்பார்கள்.
சிலருக்கு பிறக்கும் போதே மச்சம் இருக்கும். சில பேருக்கு பிறந்து இடையில் மச்சமானது தோன்றும். பிறக்கும் போது தோன்றும் மச்சம் ஒவ்வொரு வித்தியாசத்தில் தோன்றும். இந்த மச்சம் வாழ்வில் என்றும் மறையாததனால் இதனை வாழ்வின் அங்க அடையாளமாய் கூறுகிறார்கள். மச்ச சாஸ்திரம் என்பது சிலருக்கு எப்போதும் நன்மைகளை அளிக்கக்கூடியதாக இருக்கும். மச்ச பலன்கள் ஆண் / பெண் இருவருக்கும் தனி தனியாக யோகங்களை கொடுக்கும். சரி வாங்க நண்பர்களே இப்போது மச்சம் பெண்களுக்கு எங்கு இருந்தால் என்னென்ன பலன்கள் என்பதை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளுவோம்..!
நெற்றியில் மச்சம் இருந்தால் என்ன பலன் / macha sastram for female in tamil:
பெண்களுக்கு குங்குமம் வைக்கும் இடத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணிற்கு உயர்ந்த பதவியிலும், பெரிய அந்தஸ்திலும் உள்ள கணவன் அமைய வாய்ப்புள்ளது. பெண்களுக்கு நெற்றியில் மச்சம் இருப்பதால் அவளுக்கு வாழ்க்கையில் எல்லா விதமான வசதி வாய்ப்புகளும் கிடைக்கும்.
நெற்றியில் வலது புறத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
பெண்ணிற்கு நெற்றியில் வலது புறத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம், தன்னம்பிக்கை, தைரியம் நிறைந்த பெண்மணியாக திகழ்வாள். எவர்க்கும் அடங்கி போகாத குணத்தினை கொண்டவர்களாய் இருப்பார்கள்.
பெண்ணிற்கு நெற்றியில் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் என்ன பலன்:
நெற்றியில் பெண்ணுக்கு இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவாள். அதே இடது புறத்தில் மச்சம் கருப்பாக இருந்தால் அற்பகுணம் உடையவர்களாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மூக்கின் மீது மச்சம் இருந்தால் என்ன பலன்:
பெண்ணிற்கு மூக்கின் மீது மச்சம் இருந்தால் நினைத்த காரியங்களை உடனே செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்களாய் இருப்பார்கள்.
பெண்களுக்கு மூக்கின் நுனி பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
மூக்கின் நுனி பகுதியில் பெண்ணிற்கு மச்சம் இருந்தால் அந்த பெண்ணிற்கு எதிர்காலத்தில் அமைய போகும் கணவன் மிகவும் செல்வந்தராய் இருப்பார்.
மேல் / கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் பெண்களுக்கு என்ன பலன்:
பெண்களுக்கு மேல் மற்றும் கீழ் உதட்டினில் மச்சம் இருந்தால் மிகுந்த அதிர்ஷ்டமும் நல்லொழுக்கம் உடையவளாக இருப்பாள். அதோடு வாசனை திரவிய பொருள்களின் மீது அதிக பிரியமுடனும் சிறந்த கணவனை அடைந்தவர்களாய் இருப்பார்கள்.
மேல் வாய் பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
மேல்வாயில் மச்சம் உள்ள பெண்கள் உயர்ந்த எண்ணத்தினை உடையவர்களாய் இருப்பார்கள். இவர்களுக்கு பொறுமையும், அமைதியும் கூடவே பிறந்தது போன்று இருக்கும். இவர்களின் குண மற்றும் தோற்றத்திற்கு ஏற்ற மிக அழகான கணவன் அமைந்திடுவார்.
இடது கன்னத்தில் மச்சம் பெண்களுக்கு இருந்தால் என்ன பலன்:
இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உடையவளாய் இருப்பாள். இவர்கள் விரும்பியவற்றை செய்து முடிக்க பலர் காத்துக்கொண்டிருப்பார்கள்.
வலது கன்னத்தில் மச்சம் பெண்களுக்கு இருந்தால் என்ன பலன்:
வலது கன்னத்தில் மச்சம் பெண்களுக்கு இருந்தால் கஷ்டங்கள் பல வந்தாலும் அவற்றினை சந்தித்து வெற்றியினை அடையும் ஆற்றல் பெற்றவர்கள். துன்பம் மற்றும் இன்பத்தினை சம அளவிற்கு பார்ப்பவர்கள்.
கழுத்தில் வலது புறத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
பெண்களுக்கு கழுத்தில் வலது புறத்தில் மச்சம் இருந்தால் முதல் பிரசவ காலத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுப்பாள். கழுத்தில் வலது புறத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் புகுந்த வீட்டிற்கும், பிறந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தினை தேடி கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
பெண்களுக்கு தலை பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
தலை பகுதியில் மச்சம் இருக்கும் பெண்களுக்கு பேராசையும், பொறாமை குணமும் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் அவர்களுக்கு சந்தோசம், மன நிறைவு எதுவும் இருக்காது.
நெற்றியின் நடு பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
பெண்களுக்கு நெற்றியின் நடு பகுதியில் மச்சம் இருந்தால் அதிகார பதவியுடன் இருப்பாள். அவர்களுக்கு ஆடம்பரமான வாழ்வும் நினைத்த செயல்கள் அனைத்தும் வெற்றிப்பெறும். நெற்றியில் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் வறுமையுடன் இருப்பார்கள். வறுமையில் இருந்தாலும் நேர்மை குணத்துடன் இருப்பார்கள்.
காதுக்கும் கண்ணுக்கும் இடையில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
காதுக்கும் கண்ணுக்கும் இடையில் உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் பெண்களுக்கு மச்சம் இருந்தால் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருப்பார்கள். அதுவே வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை நிலை அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.
இடது தாடையில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
இடது தாடையில் மச்சம் உள்ள பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் நல்ல குணத்தினை உடையவர்களாக இருப்பார்கள். வலது தாடை பகுதியில் மச்சம் இருந்தால் பிறரால் வெறுக்கப்படுவார்கள்.
கண்களில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
கண் பகுதியில் மச்சம் இருந்தால் வாழ்க்கையானது ஏற்றம், இறக்கம் நிறைந்ததாக இருக்கும்.
மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
மூக்கின் மேல் பெண்களுக்கு மச்சம் இருந்தால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று கூறுகிறார்கள். இவர்கள் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியடையும். இவர்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை, அந்தஸ்து இருக்கும். மேலும் சமூகத்தில் மதிப்புடன் திகழ்வார்கள்.
காது பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
காதுகளில் மச்சம் இருந்தால் நிறைய செலவுகள் செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் செலவு செய்த பணம் வந்தடைந்து விடும். சமுதாயத்தில் இவர்களுக்கென்று தனி மதிப்பு இருக்கும்.
நாக்கு பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
பெண்களுக்கு நாக்கில் மச்சம் இருந்தால் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். இவர்களுக்கு ரசனை திறன் அதிகம் இருக்கும்.
கழுத்து பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்:
பெண்களுக்கு கழுத்து பகுதியில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷ்டம் அடிக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |