ஆண்களுக்கான மச்ச பலன்கள்..! Macham Palan For Male in Tamil..!

 Macha Palangal For Male in Tamil..!

Macham Palangal: இயற்கை முறையில் வரக்கூடிய மச்சம் நம் உடலில் எந்த`பகுதியில் வேணாலும் வரலாம். மச்சமானது இயற்கை கொடுத்த வரம் என்றும் சொல்லலாம். ஆண்கள் உடல் பகுதிகளில் ஒவ்வொரு இடங்களிலும் மச்சம் இருக்கும். ஆன்மீகத்தில் ஒருவருடைய மச்சத்தினை வைத்தே அவர்களுடைய முழு குண அதிசயங்களையும் அறிந்துவிடலாம். சில பேருக்கு பிறப்பிலே மச்சம் தோன்றும். சிலருக்கு பிறப்பிற்கு பின் மச்சமானது தோன்றும். மச்ச பலனானது பெண்ணிற்கு தனியாகவும், ஆண்களுக்கு தனியாகவும் உள்ளது. இதற்கு முந்தைய பதிவில் பெண்களுக்கு கையில் மற்றும் முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்பதை பற்றி பதிவு செய்துள்ளோம். அதனை தொடர்ந்து இந்த பதிவில் ஆண்களுக்கு உடல் பகுதியில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் உள்ளது என்பதை பற்றி தனித்தனியாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..! 

newபெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்..!

வலது புருவத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • ஆண்களுக்கு வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டகரம் கொண்ட வாழ்க்கை துணைவியார் அமைவார்கள்.

இரண்டு புருவத்திற்கும் இடையில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • இரு புருவத்திற்கு இடையில் மச்சம் உள்ள ஆண்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள்.

ஆண்களுக்கு நெற்றியின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • நெற்றியின் வலது புறத்தில் மச்சம் உள்ள ஆண்மார்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

வலது தொடை பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • வலது தொடை பகுதிகளில் மச்சம் உள்ள ஆண்களுக்கு பல வழிகளில் அதிர்ஷ்டமான பலன்கள் உங்களை தேடி வரும். அதிர்ஷ்டத்தை தேடி நீங்கள் செல்ல வேண்டாம்.

ஆண்களுக்கு இடது தொடை பகுதிகளில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • macham rasi palan: இடது தொடை பகுதிகளில் ஆண்களுக்கு மச்சம் இருந்தால் பொருளாதாரத்தில் பல இன்னல்கள் நேரிடும்.
newபெண்களுக்கு கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்..!

மூக்கின் மேல் பகுதியில் ஆண்களுக்கு மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • ஆண்களுக்கு மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் பதினாறு செல்வமும் பெற்று வாழ்வார்கள்.

ஆண்களுக்கு விதைப்பைகள் மீது மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • ஆண்களுக்கு விதைப்பைகள் மீது மச்சம் இருந்தால் தைரியம் அதிகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

உள்ளங்கால் பகுதியில் ஆண்களுக்கு மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • ஆண்களுக்கு உள்ளங்காலில் மச்சம் இருந்தால் வெளிப்பயணம் செய்வதை பெரிதும் விரும்புவார்கள்.

மூக்கின் இடது புறத்தில் ஆண்களுக்கு மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • ஆண்களுக்கு மூக்கின் இடது புறங்களில் மச்சம் இருந்தால் எந்த ஒரு விசயத்தினையும் நம்ப கூடியவர்களாக இருக்க மாட்டார்கள். மேலும் இவர்களுக்கு தவறான பெண்ணின் நட்பு சிநேகம் இருக்கும்.

ஆண்களுக்கு மூக்கின் வலது புறங்களில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • மூக்கின் வலது புறங்களில் மச்சம் உள்ள ஆண்கள் மனதில் நினைத்ததை உடனே செய்ய வேண்டும் என்று துடிப்புடன் இருக்க கூடியவர்கள்.

இடதுப்புற கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்: 

 • ஆண்களுக்கு இடப்புற கன்னத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் வறுமை மற்றும் உயர்வு இரண்டையும் மாறி மாறி அனுபவிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • ஆண்களுக்கு வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு தண்ணீரில் கண்டம் இருக்கும்.

இடது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • ஆண்களுக்கு இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வலது பாதத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • வலது பாதத்தில் மச்சம் உள்ள ஆண்கள் அனைத்து செயலிலும் விடாமுயற்சியுடன் இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

ஆண்களுக்கு இடது பாதத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • macham palan for male in tamil: இடது பாதத்தில் ஆண்களுக்கு மச்சம் இருந்தால் வாழ்க்கையில் எப்போதும் நிம்மதி இல்லாமல் இருப்பார்கள்.

இரண்டு காதிலும் மச்சம் இருந்தால் என்ன பலன்:

 • ஆண்மார்களுக்கு இரண்டு காது பகுதியிலும் மச்சம் இருந்தால் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
 • மேலும் இவர்களுக்கு பேசும் திறன், மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல், அனைத்து செல்வமும் அவரை வந்தடையும்.

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவு செய்கின்றோம் நன்றி வணக்கம்..! 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்