மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிறப்பு..! Meenakshi Amman Kovil Sirappugal..!

meenakshi amman kovil sirappugal in tamil

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிறப்பு..! Madurai Meenakshi Amman Temple History in Tamil

Meenachi Amman Temple History in Tamil மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிறப்பு – மதுரையின் மிக முக்கிய அடையாளம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவில் வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது. சுந்தரேஸ்வரர் என்ற பெயரிலுள்ள சிவபெருமானின் மனைவி மீனாட்சியின் பெயரிலேயே குறிப்பிடப்படுவது மற்றும் பெண் சக்தியை முன்னிறுத்தும் விதமாக அமைந்துள்ளது. இங்கு முதல் பூஜை மீனாட்சி அம்மனுக்கே. இக்கோவிலின் இறைவனான சிவ பெருமான் “சொக்கநாதர், சோமசுந்தரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார். அம்பாள் “மீனாட்சி, அங்கயற்கண்ணி” என அழைக்கப்படுகிறாள். பார்வதி தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றானது இக்கோவில்.

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்..! Thanjai Periya Kovil..!

சரி இந்த மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிறப்பு பற்றி இங்கு நாம் படித்தறிவோம் வாங்க..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிறப்பு:-

மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர்
அம்மன் மீனாட்சி, அங்கயற்கண்ணி
தல விருட்சம் கடம்ப மரம்
தீர்த்தம் பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி
பூஜை காரண ஆகமம்
புராண பெயர் ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு / madurai meenatchi amman temple history in tamil:-

இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. சுந்தரேஷ்வருக்கு மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இன்னும் பலர் பல வரலாற்று கதைகளை கூறுகின்றனர்.

பல்லி விழும் பலன் – நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்.?

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிறப்பு / Meenakshi amman kovil sirappugal in tamil:-

1. சிவபெருமான் நடனமாடியதாக சொல்லப்படும், ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தலமும் ஒன்று. இந்த ஐந்து பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகவும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர். இந்த தலத்தில் வலது காலைத் தூக்கி நடனமாடுகிறார்.

2. சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும்.

3. இத்தலத்தில் உள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.

4. ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

5. உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கலையழகு மிகுந்த மண்டபங்கள்:-

அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம், திருகல்யாண  மண்டபம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாக்கள்:-

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, முடிசூட்டுவிழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அமைப்பிடம்:-

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை நகரில் அமைந்துள்ளது. மதுரை மாநகரத்திற்கு செல்ல தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன.

27 நட்சத்திரக் கோயில்கள் பட்டியல் (27 Nakshatra Temples List)..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசன நேரம்:-

காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முகவரி:-

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மதுரை மாநகரம் மதுரை மாவட்டம் – 625 001.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்