இந்த 6 பொருட்கள் வீட்டில் குறையக்கூடாது பணக்கஷ்டம் வர இதுவும் காரணம்

Advertisement

இந்த 6 பொருட்கள் வீட்டில் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..! Make sure these 6 items are not lacking at home..!

Make sure these 6 items are not lacking at home – நண்பர்களுக்கு வணக்கம்.. நமது வீட்டில் செல்வம் குறையாமல் என்றும் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் நமது வீட்டில் இருக்கும் முக்கியமான ஆறு பொருட்கள் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த ஆறு பொருட்கள் குறித்த சிறப்பான தகவல்களை பற்றி தான் நாம் இப்பொழுது படித்தறிய போகிறோம். ஆக உங்கள் வீட்டில் பணம் வரவு குறைவாக இருந்து, செலவுகள் அதிகமாக இருக்கிறது என்றாலும் சரி, வீட்டில் நிதி நிலை சரிந்துகொண்டே போனாலும் சரி அவற்றை மீண்டும் வளர்ச்சியடைய செய்ய உங்கள் வீட்டில் இங்கு கூறப்பட்டுள்ள ஆறு பொருட்கள் என்று குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அஞ்சறைப்பெட்டி:

அஞ்சறைப்பெட்டி

பூஜையறை ஒருவர் வீட்டிற்கு எவ்வளவு சக்தி கொடுக்குமோ அதே அளவிற்கு அவர்கள் வீட்டில் இருக்கும் சமையலறையும் அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு மனிதர்க்கும் உடல் வலிமை மற்றும் மன வலிமையை கொடுக்கும். அந்த சமையலறையில் இருக்க கூடிய அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது எப்பொழுதெல்லாம் குறைகிறதோ அப்போது எல்லாம் அவற்றை நிரப்பிக்கொண்டு இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் நமது வீட்டில் லட்சுமி கடாட்சம், குபேரருடைய அம்சம் அதிகமாக இருக்கும் இதனை நமது வீட்டில் பணம் வரவு அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாலை 6 மணிக்கு மேல் மறந்தும் இதை மட்டும் செய்து விடாதீர்கள் தரித்திரம் ஒட்டி கொள்ளும்

கல் உப்பு:கல் உப்பு

கல் உப்பு என்பதும் மகாலட்சுமி என்பதும் ஒன்று என்று ஜோதிட சாத்திரத்தில் கூறபடுகிறது ஆக இத்தகைய கல் உப்பு என்றும் வீட்டில் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய கல் உப்பை மண் பாத்திரங்களிலோ அல்லது பீங்கான் பாத்திரத்திலோ தான் கொட்டி வைக்க வேண்டும். இவ்வாறு வீட்டில் கல் உப்பு நிறைந்து இருந்தால் நமது வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். நிதிநெருக்கடிகள் ஏற்படாது.

அரிசி:அரிசி

அரிசியிலும் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்துள்ளது, மேலும் சுக்கிரனின் அம்சமும் பொருந்தும். ஆக இந்த அரிசியை வீட்டில் என்றென்றும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வீட்டில் அரிசியை குறிப்பிட்ட இடத்தில மட்டும் தான் வைக்க வேண்டும் அரிசி எடுக்கும் பாத்திரத்தை கவிழ்த்து வைக்க கூடாது. முறையாக பயன்படுத்த வேண்டும். அதேபோல் அரிசி எடுக்கும் போது சத்தம் இல்லாமல் எடுக்க வேண்டும். ஆக அரிசியும் வீட்டில் நிர்வாக இருக்கும்படி வைத்திருக்க வேண்டும்.

எண்ணெய் பொருள்:எண்ணெய் பொருள்

எண்ணெய் பொருட்கள் என்பது சனீஸ்வர பகவானுக்கு மிகவும் உகந்த பொருளாக பார்க்கப்படுகிறது. எண்ணெய் இல்லாமல் சமையல் செய்ய முடியாது. ஆக இந்த எண்ணெய் பொருட்களும் வீட்டில் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள் மற்றும் குங்குமம்:

மங்களகரமான விஷயங்கள் அனைத்திற்கும் அவசியம் பயன்படுத்தப்படும் பொருட்கள் தான் மஞ்சள் மற்றும் குங்குமம். இந்த மஞ்சள் குங்குமமும் வீட்டில் என்றும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் மஞ்சள் குங்குமம் குறையாமல் இருந்தால் செல்வ வளம் அதிகரிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த 2 பொருளை மட்டும் உங்கள் வீட்டில் இருக்கும் பீரோலுக்கு கீழ் வச்சி பாருங்கள்.. பணம் வரவு தானாக வரும்..!

தண்ணீர் குடம்:

இறுதியாக நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் தண்ணீர் குடம் நீங்கள் வீட்டில் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஏதாவது ஒரு குடமாவது சிலர் அல்லது காப்பர் குடத்தில் இருப்பது மிகவும் சிறந்தது. அத்தகைய குடங்களில் பிடித்து வைக்கப்படும் தண்ணீர் நிரம்பியே இருக்க வேண்டும். இது உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க உதவிகரமாக இருக்கும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement