மேஷம் ராசிக்கார்கள் எந்த ராசிகாரர்களை திருமணம் செய்யக்கூடாது ?

Advertisement

மேஷ ராசி திருமண பொருத்தம் | Mesha Rasi Porunthum Natchathiram

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் மேஷ ராசிக்காரர்கள் எந்த ராசிகாரர்களை திருமணம் செய்யவேண்டும் என்று அதற்கு பொருந்தும் நட்சத்திரங்களை பற்றி பார்க்கலாம். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பொருந்தும் ராசிகள் இருப்பார்கள், அதோட பஞ்சபூதங்களின் செயல்பாடுகள் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அந்தவகையில், மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கார்த்திகை போன்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திருமணம் செய்யக்கூடாத நட்சத்திரங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

திருமண பெயர் பொருத்தம்

மேஷம் ராசி திருமண பொருந்தும் நட்சத்திரம்:

மேஷ ராசியில் பிறந்தவர்கள் பொதுவாகவே திருமண பொருத்தங்கள் பார்க்கும் பொழுது எந்த நட்சத்திரத்தில் திருமண செய்ய கூடாது என்று ஜோதிடம் கணித்து உள்ளது. மேலும் அஸ்வினி பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொருந்தாத நட்சத்திரங்களை தெளிவாக காணலாம் வாங்க.

அஸ்வினி பொருந்தாத நட்சத்திரம்:

அஸ்வினி என்பது கேது பகவானின் நட்சத்திரம் என்பதால் அவர்களின் பகை கிரகங்கள் சூரியன் சந்திரன் என்பதால் இந்த கிரங்களை அதிபதியாக கொண்ட நட்சத்திரத்தில் உள்ளவர்களை திருமணம் செய்ய கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அதோடு கேதுவை அதிபதியாக கொண்ட ஜாதகத்தை உடையவர்களையும் திருமணம் செய்ய கூடாது என்றும் சொல்லப்படுகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண்களை அஸ்வினி நட்சத்திரத்தை உடையவர்கள் திருமணம் செய்ய கூடாது.

அஸ்வினி நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம்:

  • அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்  பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம் போன்ற நட்சத்திரத்தில் உள்ள பெண்களை திருமணம் செய்துகொள்ளவேண்டும். 
  • அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பெண் பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம் இந்த ராசியில் உள்ள ஆண்களை மட்டுமே திருமணம் செய்துகொள்ளவேண்டும். 

பரணி பொருந்தாத நட்சத்திரம்:

பரணி நட்சத்திரமானது சுக்கிரபாகவனை நட்சத்திர அதிபதியாக கொண்டுள்ளது. சுக்கிர நட்சத்திரத்தை உடையவர்களுக்கு சூரியன், சந்திரன், சுக்கிரன் போன்ற நட்சத்திரத்திரத்தை அதிபதிக கொண்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்ள கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

பரணி நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம்:

  • பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி போன்ற நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை  திருமணம் செய்வது நல்லது. 
  • பரணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்  புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி போன்ற நட்சத்திரத்தை பிறந்த ஆண்களை திருமண செய்வது நல்லது. 

கார்த்திகை பொருந்தாத நட்சத்திரம்:

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சூரியன் ஆகும். சூரியனின் பகை கிரகங்களான சுக்கிரன் மற்றும் சனியை அதிபதியாக கொண்ட நட்சத்திரத்தை கொண்டவர்களை திருமணம் செய்துகொள்ள கூடாது.

கார்த்திகை நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம்:

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2 போன்ற நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை மட்டும் திருமணம் செய்வது நல்லது. 

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்  சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது நல்லது. 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement