புத்தி கூர்மை
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு அவர்கள் நினைத்த காரியத்தை முடிப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்துகொள்வோம். புத்தி கூர்மை என்பது அவர்கள் படிக்கும் திறனை வைத்து கணிக்கப்படுவதில்லை. எந்த செய்தியை பற்றி கேட்டாலும் சொல்வார்கள், பிரச்சனையை கையாளும் திறன் இவற்றை வைத்து அவர்களை கணிக்கிறோம். சில ராசிகளில் பிறந்த ஆண்கள் மற்றவர்களை விட மிகுந்த ஆற்றல் உடையவர்களாக இருப்பார்களாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ மேஷம் ராசிக்கார்கள் எந்த ராசிகாரர்களை திருமணம் செய்யக்கூடாது ?
மகர ராசி ஆண்கள்:
மகர ராசி ஆண்கள் இந்த செயல் நம்மால் முடியாது என்று விடமாட்டார்கள். விடா முயற்சியுடனும், புத்தி கூர்மையுடன் செயல்பட்டு வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்களாம். கஷ்டமான செயல்களையும் ஈசியாக செய்து முடித்துவிடுவார்கள். செயலின் முடிவுகளை எளிமையாக எடுத்து விடுவார்கள்.
மிதுன ராசி:
ஒரு செயலின் முடிவை ஈசியாக எடுத்து விடுவார்கள். எந்த செயலையும் தனித்துவமாக தெரியும் படி செய்வார்கள். மூளையை free -ஆ வச்சிருக்கமாட்டார்கள். எதாவது ஒன்றை சிந்தித்து கொண்டே தான் இருப்பார்கள். நகைச்சுவை உணர்வுடன் இருப்பார்கள். இவர்களின் பேச்சால் மற்றவர்களை ஈர்த்து விடுவார்கள்.
கன்னி ராசி ஆண்கள்:
கன்னி ராசி ஆண்கள் அதிகம் கேள்வி கேட்கும் திறன் உடையவர்களாக இருப்பார்கள். ஒரு பிரச்சனைக்கு முடிவு இல்லை என்றாலும் இவர்களின் புத்தி கூர்மையினால் அந்த பிரச்சனைக்கு முடிவை சொல்வார்கள். அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் ஆர்வத்தோடும், விருப்பதோடும் செய்வார்கள். மிகுந்த பொறுப்புகளுடன் இருப்பார்கள்.
கும்பம் ராசி ஆண்கள்:
கூட்டத்தில் இவர்களின் புத்தி கூர்மை தனித்துவமாக காணப்படும். பணிகளை தந்திரமாக செய்து முடிப்பார்கள். மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு நடப்பார்கள். அனைத்து விஷயங்களையும் கையாள்வதில் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து விடுவார்கள். மிகவும் தைரியமாக இருப்பார்கள். தப்பை தட்டி கேட்கும் திறன் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
விருச்சிக ராசி ஆண்கள்:
இவர்கள் செய்யும் செயல்கள் மற்றவர்களை ஆச்சிரிய பட வைக்கும். மற்றவர்களை குணத்தை ஈஸியா கணித்து விடுவார்கள். யாரும் இவர்களை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை விட மிகுந்த அறிவுடன் காணப்படுவார்கள். இவர்களின் புத்தி கூர்மையால் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து விடுவார்கள். மற்றவர்களின் குணத்தை அறிந்து செயல்படுவார்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |