முருகனின் 108 போற்றி..!| Murugan Potri in Tamil

Murugan 108 Potri in Tamil

Murugan 108 Potri in Tamil

பெரும்பாலும் தமிழ் கடவுளான முருகனை இந்துக்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். முருகனை மனதில் நினைத்தாலே போதும் மன அமைதி கிடைக்கும். முருகனை இஷ்ட தெய்வமாக வழிபாடு பக்தர்கள் கிருத்திகை, சஷ்டி போன்ற விருத நாட்களில் மனமுருக வழிபட்டு முருகனுக்கு விருதம் இருந்து பூஜை மற்றும் ஆராதனை செய்வார்கள். அப்படி விருதம் இருக்கும் போது முருகன் 108 போற்றிகளை படிப்பது மிகவும் நல்லது. அந்த 108 போற்றி பற்றி உங்களுக்கு தெரியாது என்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். ஆம் இங்கு முருகன் 108 போற்றிகளை பதிவு செய்துள்ளோம் அவற்றை முழுமையாக படித்து. தமிழ் கடவுளான முருகனை வழிபடுங்கள். முருகனின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்க கூடும்.

அனுமன் 108 போற்றி..!

முருகன் 108 போற்றிகள்:

  1. ஓம் ஆறுமுகனே போற்றி
  2.  ஓம் ஆண்டியே போற்றி
  3.  ஓம் அரன்மகனே போற்றி
  4.  ஓம் அபிஷேகப்பிரியனே போற்ற
  5. ஓம் அழகா போற்றி
  6. ஓம் அபயா போற்றி
  7. ஓம் ஆதிமூலமே போற்றி
  8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி
  9. ஓம் இறைவனே போற்றி
  10. ஓம் இளையவனே போற்றி
  11. ஓம் இடும்பனை வென்றவா போற்ற
  12. ஓம் இடர் களைவோனே போற்றி
  13. ஓம் ஈசன் மைந்தா போற்றி
  14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி
  15. ஓம் உமையவள் மகனே போற்றி
  16. ஓம் உலக நாயகனே போற்றி
  17. ஓம் ஐயனே போற்றி
  18. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
  19. ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி
  20. ஓம் ஒப்பிலாதவனே போற்றி
  21. ஓம் ஒங்காரனே போற்றி
  22. ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி
  23.  ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி
  24.  ஓம் கருணாகரரே போற்றி
  25. ஓம் கதிர்வேலவனே போற்றி
  26. ஓம் கந்தனே போற்றி
  27. ஓம் கடம்பனே போற்றி
  28. ஓம் கவசப்பிரியனே போற்றி
  29. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
  30. ஓம் கிரிராஜனே போற்ற
  31. ஓம் கிருபாநிதியே போற்றிஓம் குகனே போற்றி
  32. ஓம் குகனே போற்றி
  33. ஓம் குமரனே போற்றி
  34. ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
  35. ஓம் குறத்தி நாதனே போற்றி
  36. ஓம் குணக்கடலே போற்றி
  37. ஓம் குருபரனே போற்றி
  38. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
  39. ஓம் சஷ்டி நாயகனே போற்றி
  40. ஓம் சரவணபவனே போற்றி
  41. ஓம் சரணாகதியே போற்றி
  42.  ஓம் சத்ரு சங்காரனே போற்றி
  43. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
  44. ஓம் சிக்கல்பதியே போற்றி
  45. ஓம் சிங்காரனே போற்றி
  46. ஓம் சுப்பிரமணியனே போற்றி
  47.  ஓம் சரபூபதியே போற்றி
  48. ஓம் சுந்தரனே போற்றி
  49. ஓம் சுகுமாரனே போற்றி
  50. ஓம் சுவாமிநாதனே போற்றி
  51. ஓம் சுகம் தருபவனே போற்றி
  52. ஓம் சூழ் ஒளியே போற்றி
  53. ஓம் சூரசம்ஹாரனே போற்றி
  54. ஓம் செல்வனே போற்றி
  55. ஓம் செந்தூர் காவலனே போற்றி
  56. ஓம் சேவல் கொடியோனே போற்றி
  57. ஓம் சேவகனே போற்றி
  58. ஓம் சேனாபதியே போற்றி
  59. ஓம் சேனைத்தலைவனே போற்றி
  60. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி
  61. ஓம் சோலையப்பனே போற்றி
  62. ஓம் ஞானியே போற்றி
  63. ஓம் ஞாயிறே போற்றி
  64. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
  65. ஓம் ஞான உபதேசியே போற்றி
  66. ஓம் தணிகாசலனே போற்றி
  67. ஓம் தயாபரனே போற்றி
  68. ஓம் தண்டாயுதாபாணியே போற்றி
  69. ஓம் தகப்பன் சுவாமியே போற்றி
  70. ஓம் திருவே போற்றி
  71. ஓம் திங்களே போற்றி
  72. ஓம் திருவருளே போற்றி
  73. ஓம் திருமலை நாதனே போற்றி
  74. ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி
  75. ஓம் துணைவா போற்றி
  76. ஓம் துரந்தரா போற்றி
  77. ஓம் தென்பரங்குன்றனே போற்றி
  78. ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
  79. ஓம் தேவாதி தேவனே போற்றி
  80. ஓம் தேவை அருள்வாய் போற்றி
  81. ஓம் தேரேறி வருவோய் போற்றி
  82. ஓம் தேசத் தெய்வமே போற்றி
  83. ஓம் நாதனே போற்றி
  84. ஓம் நிலமனே போற்றி
  85. ஓம் நீறணிந்தவனே போற்றி
  86. ஓம் பரபிரம்மமே போற்றி
  87. ஓம் பழனியாண்டவனே போற்றி
  88. ஓம் பாலகுமரனே போற்றி
  89. ஓம் பன்னிரு கையனே போற்றி
  90. ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
  91. ஓம் பிரணவமே போற்றி
  92. ஓம் போகர் நாதனே போற்றி
  93. ஓம் போற்றப்படுவோனே போற்றி
  94. ஓம் மறைநாயகனே போற்றி
  95. ஓம் மயில் வாகனனே போற்றி
  96. ஓம் மகா சேனனே போற்றி
  97. ஓம் மருத மலையானே போற்றி
  98. ஓம் மால் மருகனே போற்றி
  99. ஓம் மாவித்தையே போற்றி
  100. ஓம் முருகனே போற்றி
  101. ஓம் யோக சித்தியே போற்றி
  102. ஓம் வயலூரானே போற்றி
  103. ஓம் வள்ளி நாயகனே போற்ற
  104. ஓம் விராலிமலையானே போற்றி
  105. ஓம் வினைகளைக் களைவாய் போற்றி
  106. ஓம் விநாயகன் சோதரனே போற்றி
  107. வேலவனே போற்றி
  108. ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி

ஐயப்பன் 108 சரணம் கோஷம்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal