பெண்கள் கட்டாயம் இந்த 5 அணிகலன்ளை அணிய வேண்டும் ஏன் தெரியுமா..?

must have accessories for every woman in tamil

பெண்கள் அணிய வேண்டிய 5 அணிகலன்கள்

பெண்கள் என்றால் முதலில் பெரும்பாலானோர் சொல்வது வீட்டின் மஹாலக்ஷ்மி என்று தான். அதுபோல பெண்கள் இல்லாத வீடு வீடே இல்லை என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு மேலும் அழகு கூட்டுவதற்கு அணிகலன்கள் இருக்கிறது.  அத்தகைய பெண்கள் அணிகலன்கள் அணிவதற்கு நிறைய வகைகள் இருக்கிறது. ஆனால் அப்படி இருந்தாலும் கூட பெண்கள் கட்டாயம் அணிய வேண்டிய 5 அணிகலன்கள் மற்றும் அதற்கான பயன்கள் பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாங்க அந்த அணிகலன்கள் என்னென்ன என்பது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

பெண்கள் அணியும் அணிகலன்களும் அதன் பயன்களும்:

தோடு:

பெண்கள் தோடு

பெண்கள் அணியும் முதல் அணிகலன் தோடு தான். குழந்தை பிறந்த 1 வயதில் இருந்து இந்த தோட்டினை அணிய தொடங்குவார்கள். ஏனென்றால் காதில் தோடு அணியும் போதும் கண் மற்றும் காது நரம்புகள் இணைவதால் இது கண் பார்வையை நன்றாக இருக்க செய்கிறது மற்றும் மூளையை நன்றாக செயல்பட செய்து நியாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது.

மூக்குத்தி:

பெண்கள் மூக்கு குத்துவதால்ஏற்படும் நன்மைகள்

 

பருவம் அடைந்த பெண்கள் கட்டாயமாக மூக்குத்தி அணிய வேண்டும். ஏனென்றால் இந்த மூக்குத்தியை நாம் அணியும் நமது மூக்கில் உள்ள சிறிய புள்ளி சிறுகுடல் மற்றும் பெருங்குடலுடன் தொடர்பு கொண்டிருக்கும்.

அதனால் பெண்கள் பருவம் அடைகின்றன காலத்தில் மண்டை ஓட்டில் சில வாயுக்கள் உருவாகின்றன. இந்த வாயுக்கள் உருவாகாமல் முழுவதுமாக வெளியிற்றுவதற்கு மூக்கில் உள்ள இந்த துளை பயன் அளிக்கிறது. 

அதேபோல கர்ப்ப பையில் பெண்களுக்கு தேவைப்படும் இயக்கத்தினை அளிப்பதற்கும் மற்றும் சுவாத்திற்கும் இந்த சிறிய துளை பயன்படுகிறது. 

வளையல்:

பெண்கள் வளையல்

பெண்கள் கட்டாயமாக அணிய வேண்டிய அணிகலன்களில் வளையலும் ஒன்று. பெண்கல் வளையலை அணியும் போது நமது உடலில் வெள்ளையணு உற்பத்தியை அதிகரிக்க செய்து ஹார்மோன்கள் சரியாக சுரப்பதற்கு நன்மை அளிக்கிறது.

இந்த வளையல் வட்ட வடிவில் இருப்பதால் அதில் ஏற்படும் மின்காந்த ஆற்றல்கள் அனைத்தும் நமது கையிற்கு சென்று உள்ளங்கை நன்றாக செயல்பட செய்கிறது. இது பெண்கள் அனைத்து வேலையும் செய்வதற்கு உதவியாக இருக்கிறது.

கொலுசு அணிதல்:

கொலுசு அணிதல்

பெண்கள் காலில் கொலுசு அணிவதால் குதிங்காலில் இருக்கும் நரம்பினால் கல்லீரல், சிறுநீர் பை, மண்ணீரல், பித்தப்பை மற்றும் வயிறு போன்ற அனைத்து பகுதிகளும் சிறப்பாக செயல்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் இந்த நரம்பு மூளையும் நன்றாக செயல்பட ஊக்குவிக்கிறது. ஆகையால் பெண்கள் கட்டாயமாக கொலுசு அணிய வேண்டும்.

மெட்டி அணிவதன் பலன்:

மெட்டி அணிவதன் பலன்

திருமணம் ஆன பெண்கள் கட்டாயமாக மெட்டி அணிய வேண்டும். ஏனென்றால் மெட்டியை காலில் அணியும் போதும் காலில் உள்ள நரம்பு கர்பப்பையுடன் இணைந்து பிரசவ நேரத்தில் இது பெண்ணை நன்றாக இருக்க செய்கிறது.

இந்த மெட்டி கர்ப்ப பையில் இருக்கும் நீரின் அளவினை சரியாக இருக்க செய்கிறது.

இதையும் படியுங்கள்⇒ பெண்கள் தலையில் பூ வைப்பதற்கு காரணம் என்ன தெரியுமா.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்