பெண்கள் தலையில் பூ வைப்பது ஏன்.? | Scientific Reason Behind Wearing Flowers in Hair
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் பெண்கள் பூ வைப்பதற்கான அறிவியல் காரணம் என்ன வென்றுதான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக பெண்களின் ஆடம்பர பொருட்களில் பூவும் ஒன்றுதான. இந்த பூக்கள் எவ்வளவு விலையாக இருந்தாலும், அதை வாங்கி தலைமுடியில் வைத்தால் தான் அவர்களின் ஆசைகள் தீரும். நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? பெண்கள் பொதுவாக தலையில் பூ வைத்தால் அழகாக இருப்பார்கள், ஆனால் இந்த பூ வைப்பதற்கு என்ன காரணம்.? என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இதனை நம் முன்னோர்கள் அறிந்து தான், இதை பாரம்பரியமாக கொண்டு வந்தனர். மேலும் பெண்கள் பூ வைப்பதற்கான அறிவியல் காரணம் என்னவென்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.
இதையும் படியுங்கள் 👇
பெண்கள் புடவை அணிவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..? |
பெண்கள் தலையில் பூ வைப்பதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா.? | Why do Girls Put Flowers in Their Hair:
பொதுவாக நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்த ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் அறிவியல் காரணம் இல்லாமல் இருக்காது, அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போவது, பெண்கள் தலைமுடியில் பூ வைப்பதால் நிகழும் நன்மைகள் என்னவென்றுதான் தெரிந்துகொள்ளப் போகின்றோம்.
இந்த உலகத்தில் மொத்தம் 38,000 கோடிக்கும் மேல் பூ வகைகள் இருக்கின்றன, அதில் குறிப்பாக பெண்கள் அதிகமாக பயன்படுத்தும் பூக்களின் அறிவியல் காரணம் என்னவென்று தெரிந்துகொள்வோம்.
தலையில் பூ வைப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்றால், பூக்களில் இருக்கும் பிராண ஆற்றல் ஆனது நம் மூளையால் ஈர்க்கப்படுகிறது. இதனால் மன அழுத்தத்தை குறைத்து, மனதில் நிம்மதியை தர செய்கின்றது. தலைகளில் பூக்களை வைப்பதினால், நம்மை சுற்றி இருப்பவர்களின் கவனத்தையும் ஈர்க்கின்றதாம். அதோடுமட்டுமின்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருவதற்கும் உதவியாக இருக்கின்றது. இதைத்தான் அறிவியல் காரணம் என்று சொல்லப்படுகிறது .
மேலும் எந்த பூவை தலையில் வைத்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் பூக்களை எப்படி வைக்கவேண்டும் என்றும் தெரிந்துகொள்வோம்.
- தலையில் ரோஜா பூவை வைப்பதினால் தலைசுற்றல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவியாக இருக்கின்றது.
- மல்லிகை பூவை தலையில் வைப்பதால், கண்களுக்கு குளிர்ச்சியும், மன அமைதியையும் மல்லிகை பூ தருகின்றது.
- பெண்கள் தலையில் செண்பக பூ வைப்பதினால், வாதம் போன்ற பிரச்சனைகள் குணமாக உதவியாக இருக்கின்றது.
- பாதிரிப்பூவை பெண்கள் தலையில் வைக்கும் பொழுது, அவர்களுக்கு காது சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் எல்லாம் தீர்வடையும்.
- செம்பருத்தி பூவை தலையில் வைத்தாலும், அல்லது அதை அரைத்து தடவினாலும், பெண்களின் முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கின்றது.
- தாழம்பூவை தலையில் வைப்பதினால் உடல் சோர்வு போன்ற பிரச்சனையை சரி செய்ய உதவியாக இருக்கின்றது.
- கனகாம்பரம் பூவை பெண்கள் தலையில் வைப்பதால், தலைவலி மற்றும் தலைபாரம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவியாக இருக்கின்றது.
இதையும் படியுங்கள் 👇
நகை அணிவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..? |
தலையில் பூ வைப்பது எப்படி.?
தலையில் பூ வைப்பது பெரிதல்ல, அதை எப்படி வைக்க வேண்டும் என்பது தான் பெரிதாகும். அதாவது பெண்கள் பூவை வைக்கும் பொழுது, உச்சம் தலையிலேயோ அல்லது கழுத்து புரடி பகுதியிலேயோ வைக்க கூடாது. அதாவது இரண்டு காதுக்கு இடையில் இருக்கும் தலை பகுதியில் வைக்க வேண்டும்.
முக்கியமாக வாசனையாக இருக்கும் பூவை, வாசனை இல்லாத பூக்களுடன் சேர்த்து வைத்தால், தலை முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதையும் படியுங்கள் 👇
ஆன்மிகத்தில் ஒளிந்திருக்கும் நமக்கே தெரியாத பல அறிவியல் காரணங்கள்.! |
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |