கருவில் இருக்கும் குழந்தைக்கு காது கேட்குமா?

Advertisement

Can the Unborn Child Hear During Pregnancy in Tamil

பொதுவாக கருவில் இருக்கும் குழந்தைக்காக எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வோம். தாய்மார்கள் குழந்தைக்காக என்னென் உணவுகள் எடுத்து கொள்ள வேண்டுமோ அந்தந்த உணவுகளை எடுத்து கொள்வோம். அவர்களுக்கு பெயர்களை யோசிக்க ஆரம்பித்து விடுவோம். சில தாய்மார்கள் குழந்தையிடம் பேசுவார்கள், காரணம் குழந்தைக்கு காது கேட்கும் என்ற காரணத்தினால் பேசுகிறார்கள்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு காது கேட்குமா:

கருவில் இருக்கும் காது கேட்கும் என்பதால் தாய்மார்கள் அதிகமாக கோபம் அடைய கூடாது, பதற்றம் அடைய கூடாது. நல்ல வார்த்தைகளை மட்டும் தான் பேச வேண்டும். நல்லதை மட்டும் தான் நினைக்க வேண்டும் என்ற பல கருத்துக்கள் இருக்கிறது. இதனால் தாய்மார்கள்  குழந்தையிடம் பேசி கொண்டே இருப்பார்கள். மேலும் பாடல்களை கேட்பார்கள். மன அழுத்தம் இல்லாமல் மனதை அமைதியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

குழந்தை எந்த வாரத்திலிருந்து செவித்திறன் கேட்கும்:

  • 4 முதல் 5 வாரங்களில் கருவிலுள்ள குழந்தைக்கு கண், மூக்கு, வாய், காது என உருவாகும்.
  • 18 வாரங்களில் – குழந்தைக்கு கருவிலேயே காது கேட்க ஆரம்பிக்கும்
  • 24 வாரங்களில் – குழந்தையால் அதிக சத்தத்தை கேட்க முடியாது.
  • 25-26 வாரங்களில் – கருவிலுள்ள குழந்தை வெளி குரலுக்கு தன் அசைவால் பதிலளிக்க ஆரம்பிக்கும்.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா,பெண்ணா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்

எத்தனையாவது மாதத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு காது கேட்கும்.

  • குழந்தைக்கு முதலாவதாக தாயின் ஒலி, செரிமான அமைப்பு ஒலி, இதய துடிப்பு போன்ற ஒலிகளை கேட்கும்.
  • 5 மாதத்திற்கு பிறகு தான் கருவில் இருக்கும் குழந்தைக்கு வெளியிலிருந்து வரும் சத்தத்தை கேட்க முடியும்.
  • 6 மாதங்களுக்கு பிறகு தான் கருவில் இருக்கும் குழந்தையானது சத்தத்தை கேட்டால் உதைக்க ஆரம்பிக்கிறது.

குழந்தைக்கு என்ன தான் வெளியில் வரும் சத்தங்களை கேட்டாலும் கூட தாயின் குரலை மட்டும் தான்  உணருமாம். வெளியில் இருந்து வரும் சத்தம் கேட்காதம். காரணம் கருவை சுற்றி பல அடுக்குகளும் பனிக்குட நீரும் உள்ளன. அதனால் வெளியிலிருந்து வரும் சத்தத்தை கேட்க முடியாது.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement