இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் ஏன் கூடாது..?

Advertisement

Why Not To Sleep Under A Tree At Night in Tamil

பொதுநலம்.காம் பதிவின் அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அந்த கால கட்டத்தில் இருந்தே பெரியவர்கள் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் தூங்க கூடாது என்று சொல்வார்கள். அதற்கு என்ன காரணம் என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலாக இந்த பதிவு இருக்கும். அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் தூங்க கூடாது என்று சொல்வதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

மண்பானையில் உள்ள தண்ணீர் மட்டும் ஏன் ஜில் என்று இருக்கிறது தெரியுமா..?

ஏன் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் தூங்க கூடாது என்று சொல்ல காரணம் என்ன..?

அந்த காலத்தில் இருந்தே இரவு நேரங்களில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று சொன்னார்கள். அதற்கு என்ன காரணம் என்று நாம் பெரியவர்களிடம் கேட்டால், அதற்கு அவர்கள் மரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்வார்கள்.

ஆனால் நம் முன்னோர்கள் சொல்லிய இந்த கதைக்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் தேவை. நாம் சுவாசிக்கும் போது ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றோம்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு எப்படி ஆக்ஸிஜன் தேவையோ அதேபோல மரங்களும் தன்னை பாதுகாத்து கொள்ள சூரிய ஒளி, நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடை இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு, சுத்தமான காற்றாக ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

மரங்கள் விடும் ஆக்ஸிஜனை தான் நாம் சுவாசிக்கின்றோம். நாம் சுத்தமான காற்றை உள்வாங்கி, அசுத்த காற்றை வெளியிடுகின்றோம். ஆனால் மரங்கள் அசுத்த காற்றை உள்வாங்கி சுத்தமான காற்றை நமக்கு தருகிறது.

மரங்கள் 2 விதமாக மூச்சு விடுகிறது.  பகலில் அசுத்த காற்றான கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அதேபோல இரவில் ஆக்ஸிஜனை உள்வாங்கி கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.   அந்த வகையில் நாம் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் படுக்கும் போது, நமக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காது. அந்த நேரத்தில் மரங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை நாம் சுவாசிக்கும் போது மூச்சுதிணறல் ஏற்படுகிறது. 

இதன் காரணமாக தான் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். இதை நம்பாத சிலருக்காக தான் மரத்தில் பேய் இருக்கிறது என்று சொன்னார்கள். இதுவே இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் ஆகும்.

நாம் உண்ணும் உணவு முறைக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement