திருமணத்தின் போது மருதாணி போடுவது ஏன்?
திருமணமட்டுமின்றி அனைத்து விசேஷங்களுக்கும் மருதாணி வைப்பது அல்லது cone (mehndi) போடுவது என்பது பழக்கமாகிவிட்டது. இது ஒரு சடங்காகவே மாறிவிட்டது. திருமணத்தில் நடக்கும் முக்கியமான விசேஷங்களில் இதுவும் ஒன்று. சொல்லப்போனால் வட இந்தியாவில் இதற்காக தனி விழாவே நடைபெறும். முதலில் மருதாணி திருவிழாவில் என்ன நடக்கும், ஏன் அனைவரும் திருமணங்களில் மருதாணி வைத்துக்கொள்வதில் ஆர்வம் கொள்கிறார்கள், அதனுடைய சிறப்பு தான் என்ன மற்றும் அதன் ரகசியமும் என்ன? வயதானவர்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான அர்த்தங்களை கூறுவார்கள், அதேபோல் மருதாணி வைப்பதற்கும் கூறியிருக்கின்றார்கள்.
திருமணங்களில் மருதாணி வைப்பது அறிவியில் பூர்வமாகவும் நல்லதா கருதப்படுகின்றது. நமது முன்னோர்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் ஒவ்வொரு அறிவியல் பூர்வமான அர்த்தங்கள் உள்ளது.
During Marriage Why We Put Henna in Tamil
திருமணத்தின் போது மருதாணி போடுவது ஏன்? என்பதற்கு பதிலாக பேச்சுவழக்கில் பெரியவர்கள் கூறுவது, மருதாணி வைப்பதினால் மணமகளின் கை எவ்வளவு அதிகமாக சிவக்கிறதோ அந்த அளவிற்கு அவள் வருங்கால கணவரை அவள் விரும்புகிறாள் என்று அர்த்தமாகும்.
அதேபோல் அந்த மணமகளின் கையில் மருதாணி நிறைய நாட்கள் இருந்தால், அவள் மாமியார் அவளை பாராட்டுவார் என்பதாகும். இதெல்லாம் அந்த காலத்திற்கு வேண்டுமானால் ஏற்றாற்போல் சொல்லலாம்.
சொந்தத்தில் திருமணம் செய்யலாமா? செய்யக்கூடாத? முழுமையான விளக்கம் இதோ..!
ஏனென்றால் இப்பொழுது, திருமணத்தில் பெண்கள் மருதாணி வைப்பதென்பது குறைந்துவிட்டது அனைவரும் மெஹந்தி தான் வைக்கிறார்கள். ஒவ்வொருவருக்கு பிடித்தமான designs-ல் அவர்கள் தங்களது கைகளை மெஹந்தி பயன்படுத்தி அழகுபடுத்திகிறார்கள்.
மணமகளின் கைகளை அலங்கரிக்கும் மெஹந்தி வடிவங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைக் குறிக்கின்றன. அதாவது, மெஹந்தி டிசைன்களில் பூக்கள், மொட்டுகள், பட்டாம்பூச்சிகள், பறவைகள், மணமகன்கள் மற்றும் மணப்பெண்கள் போன்ற நிறைய வடிவமைப்பில் போடப்படுகிறது.
- வாழ்க்கையின் கவசம்: மணமகளின் பின்கையில் போடும் டிசைன்.
- சந்தோஷம்: மலர்கள் டிசைன்
- புதிய ஆரம்பம்: மொட்டுகள்
போன்ற நிறைய விதமான விஷயங்களை குறிக்கின்றது.
குறிப்பாக மணப்பெண்ணுக்கு மருதாணி போடுவது ஏன்? (Why is henna applied in marriage?)
மருதாணி ஒரு வலிமையான மருத்துவ மூலிகையாகும், இது அதிக பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற பய உணர்வுகளை நிர்வகிக்க உதவுகிறது.
எனவே, திருமணத்திற்கு முன் மணப்பெண்ணின் கையில் மருதாணியைப் பூசுவது, மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதோடு, அவளது உடல் மற்றும் நரம்பு முடிவுகளை அமைதிப்படுத்துகிறது.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |