நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யலாமா? செய்யக்கூடாத?
வணக்கம் நண்பர்களே.. நெருங்கிய சொத்ததில் திருமணம் செய்துகொள்ளலாமா என்று யாரிடமாவது கேட்டோம் என்றால் சிலர் சொல்லுவாங்க செய்யக்கூடாது என்று அதனால் பிறக்க போகும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்வார்கள்.
வேறு சிலர் சொல்லுவாங்க நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் ஒரு பிரச்சனையும் வராது, அவர்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தைக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வராது. ஏன் சொல்றது எங்க குடும்பத்தில் ஏற்கனவே நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்திருக்காங்க, அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இதுவரை வந்ததில்லை என்று சொல்வார்கள்.
இந்த இரண்டில் எது சரி? இல்லையென்றால் இரண்டுமே சரியா? இதுபற்றியன தகவல்களை அறிவியல்பூர்வமாக இன்றிய பதிவில் நாம் தெரிந்துகொள்வோம் வாங்க.
Consanguineous Marriage Meaning in Tamil
நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்துகொள்பதை நாம் ஆங்கிலத்தில் Consanguineous Marriage என்று சொல்வோம். அதாவது ஒரே மூதாதையர்களிடம் இருந்து வந்தவர்கள் மிக நெருங்கிய இரத்த உறவு உடையவர்களை திருமணம் செய்துகொள்வதை இது குறிக்கும்.
இரத்த உறவுகள் என்றால் பிளட் குரூப் சம்பந்தமானது இல்லை. மரபணுக்கள் சம்பந்தமுடியாது. உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருடைய மரபணுக்களுக்கும், உங்களுக்கும் எவ்வளவு நெருக்கம் இருக்கிறதோ அதனை தான் நாம் ஜெனிடிக் ரிலேசன்சிப் (Genetic Relationship) என்று சொக்கின்றோம்.
உதாரணத்திற்கு உங்கள்டஉய்ய DNA-வும் உங்கள் குழந்தையுடைய DNA-வும் 50% ஒரே மாதிரி இருக்கும். அதேபோல் உங்கள் பெற்றோருடைய DNA-வும், உங்கள் அண்ணன், அக்கா, தம்பி, தங்கையின் DNA-வும் 50% ஒரே மாதிரி இருக்கும்.
அடுத்ததாக உங்களுக்கு உங்கள் தாத்தா, பாட்டிக்கும், பெற்றோர்களுடன் உடன் பிறந்தவர்களுக்கும் அதாவது சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா போன்றவர்களுக்கும் மற்றும் உடன்பிறந்த பிள்ளைகளுக்கும் அண்ணன், அக்கா, தம்பி, தங்கை இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும். இந்த நான்கு உறவுகளுக்கும் உங்களுடைய DNA-யில் 25% ஒரே மாதிரியாக ஒற்று போகும்.
அடுத்ததாக உங்கள் கொள்ளு தாத்தா. தாத்தா அல்லது பாட்டியுடன் பிறந்தவர்கள், பெற்றோருடன் பிறந்த பிள்ளைகள். அதாவது அத்தை, மாமாவின் பிள்ளைகள், உடன் பிறந்தவர்களின் பேரப்பிள்ளைகள். இவர்களுடைய DNA-வும் உங்களுடைய DNA-வும் 12.05% ஒரே மாதிரி இருக்கும்.
இது போன்று நம் குடும்ப உறவுகளை போட்டுக்கொண்டே போனால் அவர்களுக்கும் நமக்கு உள்ள DNA மரபணு தொடர்பு எத்தனை சதவீதம் என்று தெரிந்துகொள்ளலாம்.
நம்ம தமிழ்நாட்டில் சொந்தத்தில் திருமணம் செய்வதில் இரண்டு முக்கியமான உறவுகள் உள்ளது. அவை தாய் மாமனை திருமணம் செய்வது. மற்றொன்று அத்தை அல்லது மாமா பிள்ளைகளை திருமணம் செய்வது.
இவற்றில் உங்களுக்கு உங்கள் தாய் மாமாவிற்கு 25% DNA ஒரே மாதிரி இருக்கும். அதுவே உங்களுக்கு உங்கள் அத்தை அல்லது மாமாவின் பிள்ளைக்கும் 12.5% DNA ஒரே மாதிரியாக ஒற்று போகும்.
நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் ஏற்படும் பிரச்சனை என்ன என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க?
நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்தால் ஏற்படும் பிரச்சனை என்ன என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் நாம் ஜெனிடிக்ஸ் என்றால் என்ன என்பதை பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
நம் உடலில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது DNA-க்கள் மட்டும் தான். இவை ஜீன்களாக அதாவது மரப்பணிகளாக இருக்கும். ஒவ்வொரு ஜீனும் ஒரு குறிப்பிட்ட கேரக்டரை கட்டுப்படுத்தும். உதாரணத்திற்கு நம் காணில் இருக்கும் கருவிழி எப்படி இருக்கும், நம் முடி எப்படி இருக்கு, நம் உடல் அமைப்பு எப்படி இருக்கு என்று ஒவ்வொரு விஷயங்களையும் கட்டுப்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட மரப்பணிகள் உள்ளது.
இந்த மாதிரியான 1000-ம் கணக்கான ஜீன்கள் எல்லாம் சேர்ந்து குரோமோசோன்கள் செல்லிற்குள் இருக்கும். ஒரு செல்லில் மொத்தம் 46 குரோமோசோன்கள் 23 ஜோடிகளாக இருக்கும். இதில் ஒரு ஜோடி குரோமோசோன்கள் அதாவது 23 குரோமோசோன்கள் நம் அம்மாவிடம் இருந்தும் மீதமுள்ள 23 குரோமோசோன்கள் அப்பாவிடம் இருந்தும் நமக்கு வருது. இவை தான் நம் உடலை கட்டுப்படுத்துகிறது.
இவ்வரும் நம் உடலில் ஒவ்வொரு கேரக்டர்களை கட்டுப்படுத்தும் இந்த மரபணுக்கள் நம் உடலில் இரண்டு வடிவத்தில் இருக்கும். இவற்றை நாம் Alleles என்று சொல்கின்றோம்.
அவற்றில் ஒரு காபி நம் அம்மாவிடம் இருந்தும், இன்னொரு காபி நம் அப்பாவிடம் இருந்து வருகிறது. இவற்றில் ஒரு கேரக்டர் நமக்கு வெளிப்பட வேண்டும் என்றால் அந்த ஜீனில் எந்த காபி மேல்நோக்கி (Dominant Alleles) இருக்கிறதோ அந்த கேரக்டர் தான் வெளிப்படும். மற்றொரு காபி ஒடுக்கு (Recessive Alleles) நிலையில் இருக்கிறது என்றால் அது வெளியே தெரியாது.
ஆக இரு ஜீன் Dominant-ஆக இருக்கிறதா அல்லது Recessive-ஆக இருக்கிறதா என்பதை பொறுத்து தான் அதாவது மேலோங்கி இருக்கிறதா அல்லது ஒடுக்கிய நிலையில் இருக்கிறதா என்பதை பொறுத்து தான் ஸ்டாங்கான கேரக்டர் வெளியே வெளிப்படும், வீக்கான கேரக்டர் அமுங்கிய நிலையில் இருக்கும்.
இருந்தும் இவற்றில் சிலவகையான மரபியல் நோய்கள் இருக்கிறது. அது எப்படி ஏற்படும் என்றால் இரண்டு காபி வீக்கான ஜீன்கள் அதாவது நோயை உண்டுபண்ண கூடிய வீக்கான ஜீன்கள் ஒன்றாக சேரும் போது அவை ரொம்ப ஸ்டாங்காக மாறிவிடும் அதாவது இரண்டு Recessive ஜீன்கள் சேரும் போது அது Dominant-ஆக மாறிவிடும் அப்போ அது நோயை உருவாக்கும்.
இந்த வகையான நோக்கிகளை நாம் Recessive Disorders என்று சொக்கிறோம். இந்த Recessive Disorders மரபியல் நோக்கல் தான்நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்துகொள்வதினால் அவர்களுக்கு பிறக்க கூடிய குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சனை.
உதாரணம்:
Cystic Fibrosis, Sickle Cell Anemia, Tay Sachs DIsease, Hemophilia போன்ற இரத்தம் சார்ந்த பிரச்சனைகள். மூளை வளர்ச்சி குறைபாடு, இருதய கோளாறு, நரம்பியல் நோய்கள், மெட்டபாலிக் குறைபாடுகள், பிறவி உனக்கு, நிறக்குருடு என்பதும் Colour Blindness, மாறுகண் போன்ற பார்வை பிரச்சனைகள் இதுபோல நோக்கிலும், குறைபாடுகளும், பிரச்சனைகளும் சிறிதும் பெரிதுமாக நிறைய ஏற்படலாம். இவை அனைத்தயும் Recessive Disorders என்று சொல்கிறோம்.
நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யும் போதும் சிலருக்கு பிறகும் குழந்தை மூளை வளர்ச்சி குறைபாட்டுடன் பிறப்பது ஏன்?
மூளை வளர்ச்சி குறைவான குழந்தை பிறப்பதற்கான காரணம் Phenylketonuria என்பதும் ஒரு நோய். சாதாரணமாக நாம் சாப்பிடும் புரோட்டின் நிறைந்த உணவுகளில் முட்டை, பால், சிக்கன், சோயாபீன்ஸ் இது போன்ற உணவுகளில் Phenylalanine என்பதும் அமிலம், நம் கல்லீரலில் உள்ள ஒரு Phenylalanine Hydroxylase எனப்படும் Enzyme (நொதி) Tyrosine மற்றொரு அமினோ ஆசிட் ஆக மாற்றும். இந்த Tyrosine-ன் குழந்தையுடைய மூளை வளர்ச்சிக்கு Neurotransmitter Synthesis என்பதும் மூளையுடைய எல்லா நரம்பு சிக்னலுக்கு போகக்கூடிய எல்லா செல்களுக்கும், அதனுடைய உற்பத்திக்கும் தேவை.
ஆனால் சிலருக்கு என்ன ஆகும் என்றால் கல்லீரலில் உள்ள Phenylalanine Hydroxylase (PAH) Enzyme உற்பத்தி செய்யக்கூடிய அந்த ஜீனை அந்த மரபணுவில் பிளவை ஏற்படும். அப்போது அந்த Enzyme உற்பத்தி ஆகாது.
இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடும் போது அவர்கள் உணவில் உள்ள இந்த Phenylalanine அமினோ ஆசிட்டை கல்லீரல் Tyrisine-ஆக மாற்றாது. இந்த Tyrisine இல்லாததினால் Neurotransmitter Synthesis-யின் உற்பத்தி சீராக இருக்காது. அதுமட்டும் இல்லாமல் அதிக அளவு இந்த Phenylalanine தங்கி Phenyl Pyruvic Acid என்று மற்றொரு ஆபத்தான பொருளாக மாறும்.
அவை இரத்தத்தில் அதிக அளவு கலந்து மூளைக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் அந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, எளிதாக எந்த ஒரு விஷயத்தையும் புரிந்துகொள்ள முடியாத நிலை, தலை உடலை விட மிகவும் சிறியதாக இருக்கும்.
இந்த Phenylketonuria என்பதும் மரபியல் குறைபாடு நோய் பிறவியிலேயே அந்த குழந்தைக்கு இருக்கும். இதுபோன்ற Phenylketonuria, Sickle Cell Anemia போன்ற மரபியல் பிரச்சனைகள் Genetic Mutations-னால் ஏற்படுகிறது.
சாதாரண மக்களுக்கு இதற்கான ரிஸ்க் 2.5% சதவீதம் ஆகும். அதுவே மிக நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து அதன் மூலமாக குழந்தை பிறக்குறது அல்லவா அந்த குழந்தைக்கு 5% சதவீதம் ரிஸ்க் என்பது அதிகமாக இருக்கும்.
இது ஏன் என்றால்? குறைப்பாடு உள்ள நோயை உண்டாக்கக்கூடிய ஜீன் அவர்களுடைய குடும்பத்தில் வந்துகொண்டே இருக்கும். ஆக அதே குடும்பத்தில் உள்ள இருவர் திருமணம் செய்துகொண்டார்கள் என்றால் அவர்களுடைய குழந்தைக்கு அந்த நோய் ஏற்படும்.
உதாரணம்:
ஒருவருடைய கொள்ளுப்பாட்டி மற்றும் கொள்ளுத்தாத்தா எடுத்துக்கொள்வோம்.. கொள்ளு பாட்டிக்கு ஒரு மரபியல் நோய் இருந்திருந்தால், அவர்களுக்கு பிறக்க கூடிய குழந்தைகளில் 50 சதவீதம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், 50 சதவீதம் குழந்தைகள் குறைபாடு உள்ள ஜீன்களையுடைய குழந்தைகளாகவும் இருக்கும்.
இவற்றில் ஆரோக்கியமான குழந்தைகள் எது என்று நாம் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம், ஆனால் நோய்க்கான ஜீன்கள் உடலில் இருந்து ஆனால் அந்த நோய் வெளியே தெரியவில்லை என்றால் அப்படிப்பட்ட குழந்தைகளை நாம் கண்டுபிடிக்கவே முடியாது. ஏன் என்றால் அவர்கள் வெளியே பார்க்கும் போது ஆரோக்கியமாக தான் இருப்பார்கள். இவர்களை தான் நாம் Carriers என்று சொல்வோம்.
இந்த Carriers மூலமாகத்தான் ஒரு பரம்பரையில் இருந்து அடுத்த பரம்பரைக்கு இந்த நோய்களுக்கான ஜீன்கள் கடத்தப்படுகிறது. Carriers-ஐ நாம் சாதாரணமாக வெளியில் இருந்து பார்க்கும் பொது ஆரோக்கியமாக தெரிவார்கள், அவர்களுடைய உடலில் எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது, அவர்களுக்கு எந்த ஒரு நோயும் இருக்காது.
இருப்பினும் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லி இருந்தோம் அல்லவா ஒவ்வொரு கேரக்டரையும் கட்டுப்படுத்தக்கூடிய ஜீன்கள் இரண்டு வகையில் இருக்கிறது இரண்டு Alleles-யில் இருக்கிறது என்று சொல்லி இருந்தோம்.
அது போல் தான் ஒரு நோயை உருவாக்க கூடிய இந்த ஜீன்கள் இந்த Carriers-வுடைய உடலில் இரண்டு வகையில் இருக்கும். அவற்றில் ஒரு வகை ஜீன் அவர்களுடைய அப்பாவிடம் இருந்து வந்த ஆரோக்கியமான ஜீனாக இருக்கும், இன்னொரு வகை ஜீன் அவர்களுடைய அம்மாவிடம் இருந்து வந்த நோய்வுற்ற ஜீனாக இருக்கும்.
எந்த இடத்தில் ஆரோக்கியமான ஜீன் இருக்கிறதோ அது தான் வெளிப்படும், இருப்பினும் அவர்களுடைய அம்மாவிடம் இருந்து வந்த ஜீன் வெளிப்படாது. இவர்களை தான் நாம் Carriers என்று சொல்கிறோம்.
ஒருவேளை கொள்ளு தாத்தாவுக்கும், கொள்ளு பாட்டிக்கும் பிறந்த நான்கு பிள்ளைகளில் இரண்டு பிள்ளைகள் மட்டும் Carriers என்றால். அவற்றில் ஒருவர் நம் தாத்தா என்றால் அவருக்கு ஒரு ஆரோக்கியமான ஜீனும், ஒரு நோவாய்வுற்ற ஜீனும் சேர்ந்து இருக்கும்.
நம் தாத்தா ஆரோக்கியமான ஜீன் உள்ள பட்டையை திருமணம் செய்திருந்தார் என்றால். அவர்களுக்கு பிறந்த பிள்ளைக்கு 50 சதவீதம் ஜீன் இருக்கும். அதாவது அவர்கள் Carriers-ஆகவும் இருப்பார்கள், அல்லது ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.
ஒருவேளை 50 சதவீதம் குழந்தைகளில் நம்முடைய அம்மாவிற்கு அந்த குறைபாடு உள்ள ஜீன்கள் இருந்திருந்தால், அம்மாவுடைய தம்பியும் Carriers-ஆக இருந்தார் என்றால் அவருக்கும் குறைபாடு உள்ள ஜீன் உடலில் இருக்கும். ஆனால் அந்த நோய் வெளியில் தெரியாது.
இப்போ Carriers ஆக இருக்கும் அம்மாவிற்கும், ஆரோக்கியமான அப்பாவிற்கும் பிறகும் நாம் அதாவது பெண் குழந்தை Carriers-ஆக இருந்து, அம்மாவின் தம்பியான தாய் மாமனை திருமணம் செய்யும் போது அங்கு தான் பிரச்சனை ஏற்படும்.
ஏன் என்றால் இருவருக்குமே நோய்வுற்ற ஜீன்கள் இருக்கிறது என்பதால் இவர்களுக்கு பிறக்கும் நான்கு குழந்தைகளில் கண்டிப்பாக ஒரு குழந்தை நோய் உள்ள குழந்தையாகவும், ஒரு குழந்தை ஆரோக்கியமானதாகவும், இரண்டு குழந்தைகள் Carriers ஆகவும் பிறக்கும் அதாவது நோய் உள்ள ஜீன்களை கொண்ட குழந்தைகளாக பிறக்கும்.
இவற்றில் எந்த குழந்தை எப்போது பிறகும் என்று உறுதியாக சொல்ல முடியாது அதாவது நோய் உள்ள குழந்தை முதலில் பிறக்கலாம் அல்லது கடைசியாக பிறக்கலாம். இது போன்று தான் அத்தை மற்றும் மாமாவின் பிள்ளைகளை திருமணம் செய்து கொண்டாலும் பிரச்சனை ஏற்படும்.
ஒரு குடும்பத்தில் எவ்வளவுக்கெவ்வளவு நெருக்கமான உறவு இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு DNA ஒற்றுமை அதிகமாக இருக்கும். அவர்கள் இணையும் போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நோய் உருவாவதற்கான ரிஸ்க் என்பது அதிகமாக இருக்கும்.
இதுமட்டும் இல்லாமல் மரபியல் நோய்கள் என்பது ஓன்று மட்டும் கிடையாது நிறைய வகையான மரபியல் நோய்கள் உள்ளது. நிறைய குறைபாடுகள் உள்ள ஜீன்கள் நம் உடலில் இருக்கலாம். ஆக ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறைப்பது உள்ள ஜீன்கள் உள்ளவர்களை நாம் திருமணம் செய்யும் போது அது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
ஆக இது போன்று மரபணு சார்ந்த பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் சொந்தத்திற்குள் திருமணம் செய்யாமல் இருப்பது தான் மிகவும் சிறந்தது..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் மூக்கு குத்துவது நல்லதா.! கெட்டதா.!
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |