பெண்கள் மூக்கு குத்துவது நல்லதா.! கெட்டதா.!

Advertisement

பெண்கள் மூக்குத்தி அணிவதன்  காரணம் 

பெண்களுக்கு நகை என்பது மிகவும் பிடித்தமானது. ஆனால் பெண்கள் எந்த நகை போடாமலிருந்தாலும் அவர்களின் முகத்தில் காதில் தோடு, மூக்குத்தி இல்லாமல் இருக்காது. தோடு போடுவது ஆண்கள் பெண்கள் இருபாலரும் அணிந்துகொள்வார்கள்.

நம் முன்னோர்கள் ஒரு இரண்டு புறமும் மூக்குத்தி குத்தி கொண்டார்கள், இப்போது ஒரு புறம் கூட மூக்குத்தி அணிய மாட்டிகிறார்கள். முக்கியமாக இதில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிவதில்லை. அதனால் தான் இந்த பதிவில் பெண்கள் மூக்குத்தி அணிவதன் அறிவியல் காரணத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

பெண்கள் மூக்குத்தி அணிவதன்  காரணம்:

பெரும்பாலானவர்கள் இடது பக்கத்தில் தான் மூக்குத்தி அணிவார்கள்.  இன்னும் சிலர் ஸ்டைலுக்காக வலது பக்கம் அணிந்து கொள்வார்கள். இதற்கான காரணத்தை பற்றி கொள்வோம்.

பெண்கள் மூக்குத்தி அணிந்திருப்பவர்களை ஈசியாக வசியம் செய்ய முடியாது, அதாவது மூளையின் அலைகளை சீராகவும் மனதை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்வதற்கு உதவுகிறது. மேலும் உடல் உறுப்புகளையும் பலமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.  நெற்றி பகுதியில் நரம்புகள் மூக்கின் வழியாக வரும். அப்பொழுது நரம்பின் மீது மூக்கு குத்தி தங்கம் அணிவதால் நம் உடலில் உள்ள வெப்பத்தை குறைக்கும்.

பெண்கள் தாலி அணிவதில் ஒளிந்திருக்கும் இரகசியம் தெரியுமா

மாதவிடாய் வலி, பிரசவ வலி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. அதுவே இடது பக்கம் மூக்குத்தி அணிந்திருந்தால் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இடது பக்கம் இருக்கும் நரம்பானது நேராக கருப்பைக்கு செல்கிறது. இப்படி பல நன்மைகள் இருப்பதால் நம்முன்னோர்கள் மூக்குத்தி அணிய  வேண்டும் என்று கட்டாயம்  வைத்திருந்தார்கள். இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரிந்து கொள்வோம்.

மூக்கு குத்தினால் எவ்வாறு மூளையின் அலைகளின் மாற்றம் ஏற்படும் என்று தெரியுமா.? மூக்கு குத்தும் போது ஏதாவது சிறு தொற்று ஏற்பட்டால் கூட அவையே மூளையை பாதிக்க செய்கிறது. அதனால் தான் மூக்கு பகுதியை Danger triangle of body என்று கூறினார்கள். அதாவது அபாயகரமான முக்கோணம் என்று அழைத்தார்கள். இதனால் மூக்கில் அடிபட கூடாது, அப்படியே அடிபட்டாலும் அதனை உடனே பார்த்து விட வேண்டும் என்று கூறுவார்கள். அதனால் மூக்கு குத்தாமல் இருப்பதே நல்லது என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி அணிய வேண்டும் வலது பக்கமா.. இடது பக்கமா..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts

 

Advertisement