Mookuthi Entha Pakkam Podalam in Tamil
நமது முன்னோர்கள் காலகட்டத்தில் இருந்து பெண்களுக்கு பலவகையான கட்டுப்பாடுகள் வகுத்து வாழ்ந்தார்கள். அப்படி அவர்கள் வகுத்த பலவகையான வழிமுறைகளில் சில தான் பெண்கள் மூக்குத்தி, காலில் கொலுசு, மெட்டி, கைகளில் வளையல் போன்ற ஆபரணங்களை அணிய வேண்டும் என்பது தான். இவை அனைத்தையும் நாம் ஏதோ பெண்களின் அழகினை அதிகரித்து காட்டுவதற்காக நமது முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள் என்று நினைத்து வருகின்றோம். ஆனால் அது உண்மை இல்லை.
ஏனென்றால் பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணங்களுக்கு பின்னாலும் பலவகையான அறிவியல் மற்றும் ஆரோக்கிய ரீதியான காரணங்கள் உள்ளது. அப்படி தான் பெண்கள் மூக்குத்தி அணிவதற்கு பின்னாலும் பல அறிவியல் மற்றும் ஆரோக்கிய ரீதியான காரணங்கள் உள்ளது. இன்றைய சூழலில் ஒரு சிலருக்கு எந்த பக்கம் மூக்குத்தி அணிவது நல்ல பலனை அளிக்கும் என்பது தான். இந்த குழப்பத்திற்கான சரியான பதிலை தான் இன்றைய பதிவின் வாயிலாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த படித்து பயன் பெறுங்கள்.
திருமணத்தின் போது ஏன் கெட்டிமேளம் வாசிக்கிறார்கள் என்று தெரியுமா
மூக்குத்தி அணிவது ஏன்.?

பொதுவாக மூக்கு குத்துவது பெண்களுக்கு கூடுதல் அழகு மட்டும் சேர்க்கும் விஷயம் என பலரும் நினைத்து கொள்கின்றனர். அதனால் இன்றைய சூழலில் பல பெண்கள் மூக்குத்தி அணிவதை மறுக்கிறார்கள். ஆனால் பெண்கள் அணியும் ஒவ்வொரு அணிகலன்களுக்கு பின்னல் ஒவ்வொரு அறிவியல் காரணம் இருக்கிறது. அறிவியல் காரணத்தை சொன்னால் அதனை செய்ய மாட்டோம் என்பதால் தான் ஆன்மீக ரீதியான அர்த்தங்களை கூறி நம்முடைய முன்னோர்கள் கடைபிடிக்க கூறினார்கள்.
அப்படி செய்வதால் நமக்கு தான் பல உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். அதாவது பெண்களுடைய மூக்கில் துளையிட்டு தங்க மூக்குத்தி அணியும்போது உடல் வெப்பம் கிரகிக்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் கெட்ட வாயு வெளியேறவும் மூக்குத்தி அணிவது உதவியாக உள்ளது. மேலும் மூக்குத்தி அணியும்போது சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு தொடர்புடைய நோய்கள், பார்வையில் வரும் தொந்தரவு, நரம்பு தொடர்புடைய நோய்களையும் தடுக்க முடிகிறது.
ஒரு சிலருக்கு மூக்குத்தி அணிவதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஆனால் எந்த பக்கம் மூக்குத்தி அணிவது நல்லது என்பதில் தான் குழப்பம் ஏற்படும். அதற்கான பதிலை விரிவாக இங்கு காணலாம் வாங்க.
மூக்குத்தி எந்த பக்கம் அணிய வேண்டும்:
மூக்குத்தி அணிவதை பெரும்பாலும் அவர் அவர்களின் ஸ்டைலுக்கு ஏற்றபடி தான் அணிந்துகொள்கிறார்கள். இதிலுள்ள அறிவியல் பூர்வமான உண்மைகளை தெரிந்து கொள்வதில்லை. ஏனென்றால் பெண்கள் அணியும் ஒவ்வொரு அணிகலன்களுக்கும் பின்னல் ஒரு அறிவியல் உண்மைகள் ஒளிந்திருக்கும். அதனால் அதனை தெரிந்ததை கொண்டு ஐந்து கொள்வது நல்லது. அந்த வகையில் எந்த வகையில் மூக்குத்தி அணிந்தால் என்ன பலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் எந்த பக்கம் முக்தி அணிந்தால் நல்லதோ அந்த பக்கத்தில் அணிந்து கொள்ளுங்கள்.
பெண்கள் இடது பக்கம் மூக்கு குத்தி கொள்வதுதான் நல்லது. ஆண்களுக்கு வலப்பக்கமும், பெண்களுக்கு இடப்பக்கமும் வலுவான பகுதியாக உள்ளது. இப்படி இடப்பக்கம் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும்போது தான் அவர்களது வலது பக்க மூளை நன்றாக இயங்கும் என கூறப்படுகிறது.அதேபோல் மூக்குத்தியை இடது பக்கம் அணிந்து கொள்ளும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் நன்றாக செயல்படும். ஏனெனில் மூக்கின் இடப்பக்கதோடு தான் உடலின் பல நரம்புகளுக்கு தொடர்புள்ளது என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.
எனவே கர்ப்பிணிகள் பிரசவ நேரத்தில் குறைந்த வலியை சந்திக்கின்றனர். எளிதாக குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சில பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகளோடு அவதிபடுவர்.
அவர்கள் மூக்குத்தியை இடது பக்கம் அணிவது நல்ல பலனை அளிக்கும். அதேபோல் பெண்களுடைய மூக்கில் உள்ள மடல் பகுதியில் துவாரம் இடுவதால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் இருக்கும் கெட்ட வாயு நீங்கும்.
அதனால் வலப்பக்கம் மூக்குத்தி அணிவதை காட்டிலும் இடது பக்கம் அணிவதே மிகுந்த நல்ல பலனை அளிக்கும்.
திருமணத்தின் போது அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவது ஏன்
| மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |














