வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அம்பேத்கர் பற்றிய சுவாரஸ்யமான 10 உண்மைகள்..!

Updated On: April 12, 2024 4:36 PM
Follow Us:
Ambedkar 10 Facts in Tamil
---Advertisement---
Advertisement

Ambedkar 10 Facts in Tamil

ஹலோ நண்பர்களே..! இன்றைய பதிவின் வாயிலாக அம்பேத்கர் பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகளை தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்குமே அம்பேத்கர் பற்றி நன்றாக தெரியும். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நம் தேசத்திற்காக எல்லா வகையிலும் போராடி இருக்கிறார். நம் நாட்டு மக்களுக்காக சாதி ஒழிப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து போராடியவர். இவர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்றும் அனைவராலும் போற்றப்படுகிறார்.

இப்படி நமக்காகவும் நம் தேசத்திற்காகவும் இடைவிடாது போராடிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ஏப்ரல் மாதம் 14-ம் தேதி 1891-ம் ஆண்டு இன்றைய மத்திய பிரதேசத்தில் உள்ள மாவ் எனும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் ராம்ஜி மாலோஜி சக்பால், தாயின் பெயர் பீமாபாய் ஆகும். மேலும் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும். ஓகே வாங்க பிரண்ட்ஸ் அம்பேத்கர் பற்றிய 10 உண்மைகளை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்..!

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு

அம்பேத்கர் பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகள்: 

அம்பேத்கர் பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகள்

1. அம்பேத்கர் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தவர். அவரது பெண்கள் உரிமைகள் மசோதா பாராளுமன்றத்தில் எதிர்க்கப்பட்டபோது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

2. அம்பேத்கர் அவர்கள் 1952 மற்றும் 1954 ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை.

3. அம்பேத்கர் 1955 இல் பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தை பிரிக்க பரிந்துரைத்தார். அது 45 ஆண்டுகளுக்குப் பிறகு செய்யப்பட்டது.

4. வெளிநாட்டில் பொருளாதார முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான்.

5. அண்ணல் அம்பேத்கர் அவர்கள், 1942 ஆம் ஆண்டு நவம்பர் 27 இல், புது தில்லியில் நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் 7 -வது அமர்வில் வேலை நேரம் குறித்த பிரச்சினையைக் கொண்டு வந்தார். இதன் காரணமாக இந்தியாவில் வேலை நேரத்தை 14 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைக்க உதவினார்.

டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகள்

6. டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் இந்தியாவில் பெண் தொழிலாளர்களுக்காக பல சட்டங்களை உருவாக்கி உள்ளார். அவை,

  • சுரங்க மகப்பேறு நன்மை சட்டம்.
  • பெண் தொழிலாளர் நல நிதி.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள், தொழிலாளர் பாதுகாப்பு சட்டம்.
  • பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு நன்மை.
  • நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கீழ் வேலைகளில் பெண்களை வேலைக்கு.
  • அமர்த்துவதற்கான தடையை மீட்டெடுத்தல்.

7. 1942 ஆம் ஆண்டு டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் இந்திய புள்ளியியல் சட்டத்தை இயற்றினார்.

8. ஹில்டன் யங் கமிஷனுக்கு அம்பேத்கர் அவர்கள் முன் வைத்த யோசனைகளின் அடிப்படையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உருவாக்கப்பட்டது.

9. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரும் நீர்வள மேம்பாட்டுக்கு பங்களித்துள்ளார். தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம், ஹிராகுட் திட்டம் மற்றும் சோன் நதி பள்ளத்தாக்கு திட்டம் ஆகியவற்றை வடிவமைத்து கோடிட்டு காட்டினார் அம்பேத்கர் அவர்கள்.

10. அவர் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி தீக்ஷபூமியில் (நாக்பூர்) புத்த மதத்திற்கு மாறினார். அது தம்ம சக்ர பிரவர்தன் தின் என்று அறியப்படுகிறது.

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

மடையன் என்பது திட்டும் வார்த்தை அல்ல அதன் உண்மையான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!

Why Do Fireflies Sparkle in Tamil

மின்மினி பூச்சிகள் ஏன் மின்னுகிறது..! அதற்கு காரணம் என்ன தெரியுமா..?

poonai valarthal asthma varuma

பூனை வளர்த்தால் ஆஸ்துமா வருமா

Why not Put Kolam on the Door on Amavasya in Tamil

அமாவாசை அன்று ஏன் வாசலில் கோலம் போடக்கூடாது..? என்று தெரியுமா..?

Why Not Get Married in Margali Month in Tamil

மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது தெரியுமா.?

சொந்தத்தில் திருமணம் செய்யலாமா? செய்யக்கூடாத? முழுமையான விளக்கம் இதோ..!

Why Do We Put Kolam in Tamil

வாசலில் கோலம் போடுவதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Cochineal Lipstick

பூச்சியின் இரத்தத்தில் இருந்து லிப்ஸ்டிக் தயாரிக்கிறாங்கனு உங்களுக்கு தெரியுமா?

why do we yawn if others yawn in tamil

ஒருவருக்கு கொட்டாவி வந்தால் நமக்கும் கொட்டாவி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா..?