தாலி அணிவது ஏன்.?
வணக்கம் நண்பர்களே..! திருமணத்தில் தாலி கட்டுவது என்பது அழகான நிகழ்வு. ஆனால் திருமணத்தில் தாலி கட்டுவதற்கு ஆன்மிக அடிப்படையில் பல காரணங்கள் இருந்தாலும் இந்த பதிவில் அறிவியல் காரணத்தை பற்றி தெரிந்து கொள்வோம். பெண்கள் தாலியை கட்டியிருப்பதை முன்னோர்கள் பல காரணங்கள் சொல்வார்கள். தாலி புனிதமானது, தாலியை கழட்ட கூடாது என்றேல்லாம் சொல்வார்கள். இதற்கான அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்வோம்.
பெண்கள் தாலி அணிவதற்கான அறிவியல் காரணம்:
பெண்கள் தாலியை எல்லோரும் ஒரே மாதிரி அணிய மாட்டார்கள். தாலியில் பல விதங்கள் உள்ளன. எல்லோரும் ஒரே மாதிரியான வடிவங்களை உடைய தாலியை அணிய மாட்டார்கள்.
அதாவது சிவனின் உருவம் என்றால் தாலியின் நடுவில் மூன்று கோடுகள் போட பட்டிருக்கும். அதுவே விஷ்ணுவின் உருவம் என்றால் மூன்று செங்குத்தான கோடுகள் போட பட்டிருக்கும்.
இந்துக்கள் திருமணத்தில் தான் தாலி அணியும் பழக்கம் உள்ளது. இந்த தாலியை நமது உடலோடு இருக்கும் படி தான் கட்டுவார்கள்.
தாலி உடலோடு இருப்பதால் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தை சரியாக வைத்திருக்க உதவுகிறது.
அதுவே வட இந்தியாவில் கருப்பு மணி அணிந்து தங்கத்தில் தாலி அணிந்து நெக்லஸ் போல் காணப்படும். இதில் உள்ள தங்கம் பார்வதி தேவியை குறிக்கிறது. மேலும் கருப்பு மணிகள் சிவனை குறிக்கிறது.
கருப்பு மணி என்பது கணவன், மனைவி ஒற்றுமையை பலப்படுத்துகிறது. மேலும் கணவனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
மெட்டி அணிவது எதற்காக:
பெண்கள் மூப்படையும் போது மெட்டி மாதிரி ஒரு கம்பியை போடுவார்கள். அதன் பிறகு திருமணத்தின் போது கணவன் மனைவி காலை பிடித்து மெட்டி போடுவார்கள். பெண்களுக்கு திருமத்திற்கும் முன்பும் சரி, திருமணத்திற்கும் பின்பும் சரி உடலில் பல விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். அதிலும் முக்கியமானது கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருப்பதற்காக தான் மெட்டி அணிய சொல்கிறார்கள்.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் தாலியும் சரி, மெட்டியும் சரி அதிகமாக யாரும் அணிவதில்லை. இவை அனைத்தும் உடலின் ஆரோக்கியத்திற்காக சொல்லப்பட்டவை. நீங்கள் இது நாள் வரையிலும் நமது முன்னோர்கள் அணிந்திருந்தார்கள் மற்றும் சம்பிரதாயம் என்று தானே நினைத்திருப்பீர்கள். ஒன்றை மட்டும் எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். நமது முன்னோர்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயத்திலும் கண்டிப்பாக அறிவியல் காரணம் ஒளிந்திருக்கும். உண்மையான காரணத்தை சொன்னால் யாரும் கடைபிடிக்க மாட்டீர்கள் என்று தான் சாஸ்திரம், சம்பிரதாயம் என்று சொல்லி கடைபிடிக்க சொல்கிறார்கள்.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |