அமாவாசை அன்று ஏன் கோலம் போடக்கூடாது..? | Why not Put Kolam on the Door on Amavasya in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அமாவாசை அன்று கோலம் போடலாமா.? போடக்கூடாதா.? என்பதையும் அதற்கான காரணத்தையும் பின்வருமாறு கொடுத்துள்ளோம். அமாவாசை அன்று கோலம் போடுவதில் பலபேருக்கு குழப்பம் இருக்கும். இப்பதிவை படித்து அந்த குழப்பத்தை போக்கி கொள்ளுங்கள்.
தினமும் அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் கோலம் போடுவது அக்காலத்திருந்து வழக்கமாக இருக்கிறது. தினமும் அதிகாலையில் வாசலில் கோலமிட்டு வழிபட்டால் தெய்வகடாச்சம் நிறைந்திருக்கும். இதனால் தான் நம் முன்னோர்கள் தினமும் கோலம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் அமாவாசை அன்று மட்டும் ஏன் வாசலில் கோலம் போடக்கூடாது..? என்று சொல்கிறார்கள். வாருங்கள், எதற்காக அப்படி சொல்கிறார்கள் என்று உண்மை காரணத்தை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
அமாவாசை அன்று ஏன் வீட்டில் கோலம் போடக்கூடாது..?
பொதுவாக நம் வீட்டு வாசலில் கோலம் போடுவது தெய்வத்தை வணங்குவதையும், மகிழ்ச்சியாக இருப்பதையும் உணர்த்துகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் இதை பின்பற்றி வந்தனர்.
அமாவாசை என்பது பித்ருக்களுக்கான நாள். அந்நாள் முழுவதும் கோலம் போடக்கூடாது. மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபடவேண்டும். தர்ப்பணம் கொடுத்து வழிபாட்டால் நம் முன்னோர்களின் தாகமும் பசியும் தீரும் என்பது சாஸ்திரம். அதனால் தான் பித்ரு தர்ப்பணம் செய்யும் போது எள்ளும் தண்ணீரும் இறைக்கிறோம்.இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ அமாவாசை நாட்கள் நேரம்
எனவே ஒவ்வொரு மனிதனும் இதனை தினமும் செய்யவிட்டாலும், அமாவாசை அன்று இறந்த நம் முன்னோர்களை வழிபட்டு தானம் தருமங்களை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லிருக்கிறார்கள்.
மறைந்த நம் முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிக்க நம் இல்லத்திற்கு வருவார்கள். அவர்களின் பசி, தாகம் தனிய எள்ளு கலந்த நீரினால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது அதை அவர்கள் ஏற்று கொண்டு நம்மை ஆசிர்வதிப்பார்கள்.
அந்நாளில் நாம் அவர்களுக்கு பிடிக்காத காரியங்களை செய்ய கூடாது. அப்படி செய்தால் தர்ப்பணம் செய்தும் எந்த பயனும் இல்லை. அந்நாளில் நாம் வாசலில் கோலம் போட்டு இருந்தால் வந்த முன்னோர்கள், இவர்கள் நமக்காக இந்நாளை ஒதுக்கவில்லை என்று நினைத்து வருத்தத்துடன் செல்வார்கள். இதுவே அம்மாவாசை அன்று வாசலில் கோலம் போடக்கூடாது என்பதற்கான காரணம் ஆகும்.அமாவாசை அன்று குழந்தை பிறந்தால் என்ன ஆகும் தெரியுமா..?
அமாவாசை அன்று தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்:
அமாவாசை அன்று வாசலில் கோலம் போடுவது, மணி அடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை எல்லாம் நம் முன்னோர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |