மண்பானையில் உள்ள தண்ணீர் மட்டும் ஏன் ஜில் என்று இருக்கிறது தெரியுமா..?

Advertisement

மண்பானை தண்ணீர் பயன்கள்

பொதுவாக நாம் தண்ணீர் குடிக்கிறோம் என்றால் செம்பில் தான் தண்ணீர் குடிப்போம் ஆனால் இப்போது தண்ணீர் குடிப்பது என்றால் வீட்டில் அனைவருக்கும் தனி தனியாக வாட்டர் பாட்டில் வைத்துக்கொண்டு அதன் மூலம் தண்ணீரை குடித்து வருகிறார்கள். ஆனால் அந்த காலத்தில் தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரம் கூட பானையாகத்தான் இருந்தது.

இதில் தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளது. அதேபோல் வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அது மண் பாத்திரங்களால் இருக்கும். இப்போது ஒரு வீட்டில் கூட பானை இல்லை. அது ஒரு வகையில் மக்களுக்கு தெரியாத பயன்களாக கூட இருக்கலாம்.

மண்பானை தண்ணீர் பயன்கள்:

அதேபோல் இப்போது மண்களால் ஆன பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அனைவரும் படையெடுத்து வருகின்றனர். ஏனென்றால் இப்போது தான் மண் பண்டங்களின் பயன்களும் அதனை பற்றி சிறப்புகளும் மக்களிடையே சேர்ந்து வருகிறது. இது சேர்வதற்கு காரணமும் ஒரு வகையில் தொழில்நுட்பம் தான் காரணம். ஏனென்றால் மக்கள் அதிகளவு நேரம் செலவழிப்பது போன் தான் அதன் வழியாக சென்றடைந்த விஷயத்தில் ஒன்று தான் இந்த மண் பண்டங்களும் உங்களுக்கும் மண்பானையில் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 மண்பானை பயன்கள் 

பிரிட்ஜ்

அதேபோல இப்போது அனைவரின் வீட்டில் கேஸ் அடுப்பு இருக்கிறதோ இல்லையோ அனைவரின் வீட்டிலும் பிரிட்ஜ் இருக்கிறது. இந்த பிரிட்ஜியில் சமைத்த பொருட்கள் சமைக்க தேவையான பொருட்கள் என அனைத்து பொருட்களையும் பிரிட்ஜியில் வைப்பார்கள். முக்கியமான தண்ணீரை வைப்பார்கள். அப்படி வைப்பது வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்து அந்த தண்ணீரை குடித்தால் உடல் குளிச்சியாக இருக்கும்.

ஆனால் ஒரு நாள் கரண்ட் இல்லையென்றால் அந்த தண்ணீர் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் பிரிட்ஜ் இல்லை ஆனால் தண்ணீர் குளிச்சியாக தான் இருந்தது அதாவது அந்த காலத்தில் பானையில் தண்ணீர் வைப்பார்கள் தெரியுமா? அதேபோல் வைத்து குடிப்பார்கள். அதற்கு எந்த கரண்ட் தேவை இல்லை ஆனால் தண்ணீர் மட்டும் குளிச்சியாக இருந்தது அதனை குடித்து வந்தார்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 அண்ணார்ந்து தண்ணீர் குடித்தால் தொப்பை போடுமா? அட கடவுளே இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

இந்த தண்ணீரை வெயில் காலத்தில் ரோட்டு ஓரங்களில் பந்தல் அமைத்து அதில் பானையில் தண்ணீர் வைப்பார்கள் அதனை வெயிலில் சென்று வருபவர்கள் குடித்துவாருவார்கள். ஏன் பானையில் வைக்கிறார்கள் தெரியுமா? அதற்கு காரணம் பானையில் தண்ணீர் வைத்தால் அந்த தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்.

மண் பானையில் தண்ணீர்

 பானையை எவ்வளவு வெயிலில் வைத்தாலும் அதில் உள்ள தண்ணீர் குளிச்சியாக இருக்கிறது ஏன் தெரியுமா? பானையில் தண்ணீர் இருந்தால் அதன் வெளிப்புறத்தில் வியர்வை ஏற்படும் அதாவது குட்டி குட்டியாக நீர் சுரக்கும். அது பானையின் ஒரு சிறிய நுண் துளைகள் வழியே தான் நீர் வெளியே வரும். இது தொடர்ந்து ஆவியாகி கொண்டு தான் இருக்கும். அதேபோல் பானையில் வெப்பநிலையும் பானையில் உள்பகுதியில் இருக்கும். அதனால் தான் பானையில் இருக்கும் தண்ணீர் குளிச்சியாகவே இருக்கிறது.  

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement