Scientific Reason For Wear Saree in Tamil
வணக்கம் இனிமையான நேயர்களே… இன்றைய பதிவில் பெண்கள் புடவை அணிவதற்கான அறிவியல் காரணம் என்ன என்பதை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். புடவை என்பது பெண்களின் பாரம்பரிய உடை ஆகும். புடவை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று நம் அனைவருக்கும் தெரியும்.
இந்த காலத்தில் எவ்வளவு விதவிதமான ஆடைகள் வந்திருந்தாலும் புடவையின் மதிப்பு குறையவே இல்லை. அந்த காலத்தில் இருந்த பெண்கள் பாவாடை தாவணி அல்லது புடவையை மட்டுமே ஆடையாக அணிந்தார்கள். அதற்கு என்ன காரணம் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசிப்பவர்களுக்கு இந்த பொதுநலம்.காம் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நகை அணிவதற்கான அறிவியல் காரணம் என்ன..? |
புடவை அணிவதற்கான அறிவியல் காரணம் என்ன..?
எத்தனை ஆடைகள் இருந்தாலும் பெண்களுக்கு அழகு சேர்ப்பது புடவை தான். இன்றைய காலம் எவ்வளவு மாறி இருந்தாலும் புடவையின் மதிப்பு மட்டும் மாறவே இல்லை. புடவை தெய்வங்களின் அடையாளமாக திகழ்கிறது.
மற்ற உடைகளை காட்டிலும் புடவை கட்டும் பெண்கள் அழகாக காட்சியளிப்பார்கள். புடவை அணிவதற்கு பின்னாள் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க .
ஒரு பெண் புடவை அணிந்தவுடன், அவளுக்கு அற்புதமான மாற்றங்கள் நிகழ்கின்றன. பெண்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தான் புடவை கட்ட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
புடவை அணிவதால் பெண்களுக்கு உடலில் சில நன்மைகள் கிடைக்கிறது. அந்த காலத்தில் வயதுக்கு வந்த பெண்கள் பாவாடை தாவணி தான் அணிவார்கள். அதேபோல திருமணம் ஆன பெண்கள் புடவை தான் அணிவார்கள்.
காரணம், பெண்களின் கருப்பை ஒரு விதமான வெப்பத்தை வெளியிடுகிறது. நாம் பாவாடை தாவணியோ அல்லது புடவையோ அணியும் போது அந்த வெப்பமானது நம் உடலில் இருந்து வெளியேறுகிறது. கருப்பை வெளியிடும் வெப்பமானது நம் உடலில் பரவாமல் வெளியேற வேண்டும் என்பதற்காக தான் புடவை மற்றும் தாவணியை பாரம்பரிய உடையாக அணியவேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.
கருப்பை வெளியிடும் வெப்பமானது வெளியேறாமல் இருந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படுகின்றன. கருப்பையில் எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதால் தான் நாம் புடவை கட்டுகிறோம்.
நாம் இந்த கால கட்டத்தில் அணியும் உடைகளான சுடிதார், ஜீன்ஸ் போன்ற ஆடைகளால் கருப்பை வெளியிடும் வெப்பம் நம் உடலிலே தங்கி விடுகிறது. இதனால் நமது உடலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதனால், முடிந்த வரை புடவையை அணியுங்கள்.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | facts |