நவகிரக மந்திரம் சொன்னால் நன்மைகள் நடப்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம் | Navagraha Stotram in Tamil

Navagraham Slogam in Tamil

நவகிரகங்கள் மந்திரம் | Navagraham Slogam in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் ஆன்மிகம் பதிவில் நவகிரகங்கள் மந்திரத்தை பற்றி பார்க்க போகிறோம். சிவன் கோவில் என்றால் அதில் நவகிரங்கள் இருக்கும். அதனை நாம் வணங்கும் போது அதற்கென்று உள்ள மந்திரத்தை வாய்விட்டு சொல்லியோ அல்லது மணத்தில் சொல்லி கொண்டோ வணங்கினால் வீட்டிலில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போகும் என்பார்கள். அந்த சுலோகத்தை உங்களுக்கு தெரியாது என்றால் இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனை சொல்லி வணங்குவதால் அனைவருக்கும் நன்மை உண்டாகும்.

நவகிரக வழிபாடு முறை:

  • சிவன் கோவிலுக்கு சென்றால் எப்போதும் மிகவும் அமைதியான மனநிலை உண்டாகும். சிவன் கோவிலுக்கு மட்டும் இல்லை பொதுவாக கோவிலுக்கு சென்றால் ஒரு நிம்மதி கிடைக்கும். கோவிலுக்கு சென்று சரியாக வழிபட்டு வருகிறீர்கள் என்று நீங்கள் நினைத்து இருப்பீர்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு விதமாக வழிபாட்டு முறைகள் உள்ளது அதனை சரியாக செய்ய வேண்டும். அதில் முக்கியமாக சிவன் ஆலயத்திற்கு சென்றால் சரியான முறையில் வழிபட வேண்டும். அங்கு உள்ள நவகிரகங்களை இந்த மந்திரத்தில் தான் வணங்க வேண்டும் அதனை பார்ப்போம்.
9 நவகிரகங்கள் பற்றிய தகவல்கள்..!
  • நவக்கிரகளை வணக்கம் போதும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும். இதேபோல ராகுவையும் கேதுவையும் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள்.
  • இந்து போன்ற குழப்பத்தில் அனைவரும் கோவிலுக்கு வருகிறார்கள். ஆனால் இது போன்று நவகிரகங்களை சுற்றிவர வேண்டிய அவசியம் இல்லை.
  • ஒன்பது முறை நவகிரணங்களை சுற்றி வந்து வணங்கினால் போதும். அதுமட்டுமில்லாமல் நவகிரகங்களை எப்போதும் தொட்டு வணங்க கூடாது.
  • நவகிரகங்களை சுற்றி வரும் போது நவக்கிரக மந்திரங்களை சொல்லி வணங்கினால் நன்மை உண்டாகும். அந்த மந்திரத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.

நவகிரக மந்திரம்:

9 நவகிரகங்கள் சுற்றுலா..!

சூரிய பகவான் மந்திரம்:

சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்

சந்திர பகவான் மந்திரம்:

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் போற்றி
சந்திரா போற்றி சத்குரு போற்றி
சங்கடந் தீரப்பாய் சதுரா போற்றி

செவ்வாய் பகவான் மந்திரம்:

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு

புதன் பகவான் மந்திரம்:

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி

சுக்கிர பகவான் மந்திரம்:

சுக்கிர மூர்த்தி சுபசுகம் ஈவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

சனீஸ்வர பகவான் மந்திரம்:

சங்கடந் தீரப்பாய் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தாதா

ராகு பகவான் மந்திரம்:

அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கனியோ ரம்மியா போற்றி

கேது பகவான் மந்திரம்:

கேதுத்தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாவம் தீரப்பாய்
வாதம் வம்பு வழக்குகள் இன்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி

நவகிரக காயத்ரி மந்திரங்கள்:

 

சூரிய பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

சந்திர பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்

செவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

புதன் பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்

குரு பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்

சுக்கிர பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

சனி பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்

ராகு பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

கேது பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்