P Letter Name Charaterist in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆன்மிகம் பதிவில் P என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்டவர்கள் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்துகொள்ளலாம். பொதுவாகவே ஒருவரின் குணத்தை பற்றிய அறிவதற்கு அவர்களின் ராசி, நட்சத்திரம் இவற்றை கணித்து தான் இவர்கள் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்துகொண்டிருப்போம். ஆனால் இவர்களின் பெயர் தொடங்கும் முதல் எழுத்தை வைத்தும் இவர்கள் எப்படி பட்ட குணத்தை உடையவர்கள் என்று நம் பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
பி என்ற எழுத்தில் தொடங்கும் பெயரின் குணங்கள்:
P என்ற முதல் எழுத்தை பெயராக கொண்டவர்கள் மிகவும் பாசமாகவும், அன்பாகவும் இருப்பார்கள். பிறருடைய அன்புக்காக அதிகமாக எதிர்பார்ப்பார்கள்
இவர்களுக்கு எல்லா விஷயங்களிலும் போராடும் குணங்கள் அதிகமாக இருக்கும். இவர்கள் ஒரு எமோஷ்னல் பர்சன் என்றும் சொல்லலாம்
எந்த ஒரு விஷத்தை தொடங்கினாலும் சோர்வு அடையாமல் முயற்சிகள் அதிகமாக செய்வார்கள், ஒரு செயலை தொடங்கினாள் அதில் வெற்றி கிடைக்கும் வரை போராடி ஜெயிப்பார்கள்.
இவர்கள் ஒரு விஷயத்தை யோசிக்க ஆரமித்தார்கள் என்றால் அந்த விஷயத்தை முடிக்கும் வரை தூக்கவே மாட்டார்கள்.
அதோடு இவர்கள் எந்த ஒரு பழக்க வழக்கத்தையும் மாத்திக்கவே மாட்டார்கள், இவர்கள் நினைத்த படிதான் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்கள் நினைக்கும் விஷயங்கள் சீக்கிரமாக முடிவு பெறாது. ஆனாலும் இவர்கள் அந்த விஷத்தை விடாமல் இரண்டு, மூன்று முறையாவது முயற்சி எடுப்பார்கள்.
இவர்களை சுலபமாக யார் வேண்டுமானாலும் ஏமாத்தி விடலாம், இவர்கள் ரொம்ப வெகுளியானவராக இருப்பதால் சீக்கிரமாக ஏமாந்து விடுவார்கள். அதேபோல் இவர்கள் ஒரே மனநிலையில் தான் இருப்பார்கள், திடீர் என்று மாறமாட்டார்கள்.
இவர்களின் வாழ்க்கையை பொறுத்தவரை பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் கடந்து கொண்டுதான் வந்துகொண்டிருப்பார்கள். இவர்களுடை உடலை பற்றி கொஞ்சம் கூட கவனிக்க மாட்டார்கள்.
இவர்கள் குடும்பத்தை பொறுத்த வரை எல்லா விஷயங்களையும் விட்டு கொடுத்துதான் வாழ்வார்கள். அதேபோல் பண விஷயங்களில் இவர்களுக்கு என்று பணத்தை தனியாக எடுத்து வைத்து கொள்ளமாட்டார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு செலவுகள் செய்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இவர்களுக்கு அதிகமாக நண்பர்கள் இருப்பார்கள், நண்பர்களிடம் கூட அதிகமாக விட்டு கொடுத்துதான் போவார்கள், இவர்கள் நண்பர்களிடம் கூட அதிகமாக ஏமாந்துதான் போவார்கள்.
இவர்கள் எந்த வேலை செய்தலும் அதுக்கென்று அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார்கள், சின்சியராகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு கடவுள் பக்தி அதிகமாவே இருக்கும், கோவிலுக்கு அதிகமாக செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதோடு இவர்கள் மன அமைதிக்காக பாடல்களை அதிகமாக விரும்புவார்கள்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |