நீங்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் என்றால்? இந்த தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டதால் வாழ்க்கை அமோகமாக இருக்கும் .

Advertisement

திருமண பொருத்தம்

ஹாய் மக்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக அனைவருக்குமே எண் ஜோதிடம் என்று தெரியும். திருமண வாழ்க்கையை முடிவு செய்யும் போது அனைத்து பொருத்தம் பார்ப்பதோடு முக்கியமாக எண் ஜோதிடத்தை பார்ப்பார்கள். இந்த ராசிக்கார்கள் இந்த தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்ளலாம். என்று நிறைய பொருத்தம் கொண்டு முடிவு செய்வார்கள். அந்த வரிசையில் இன்று எந்த தேதிகளில் பிறந்தவர்கள் எந்த தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் நன்மை உண்டாகும் என்று சொல்கிறார்கள். அதனை பற்றி இப்பொழுது நாம் பாப்போம்.

எந்த தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்ய வேண்டும்?

நண்பர்களே நீங்கள் 1, 10, 19, 28 போன்ற தேதியில் பிறந்திருந்தீர்கள் என்றால் நீங்கள் 3, 5, 6 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்ளலாம். இல்லையென்றால் 4, 8 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்ளலாம். முக்கியமாக 1 தேதியில் பிறந்த பெண்களை மணந்துகொள்ள வேண்டாம். அதையும்  மீறி திருமணம் செய்தால் அது உங்களுக்கு கௌரவப் பிரச்சனைகளையும் தொடர்ந்து கொடுக்கும் அதேபோல் குடும்ப பிரச்சனையும் நிகழும்.

2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்கள் சில தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் அதாவது 1, 3, 5, 6 தேதிகளில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்மை அதிலும் 7 தேதியில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை அமோகமாக இருக்கும்.  2,11,20,29 பிறந்தவர்கள் 8, 9 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்ய கூடாது.

நீங்கள் இந்த 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்களா அப்படி என்றால் 3, 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் திருமணம் செய்யலாம் அதேபோல் 2 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்ளாம் வாழ்க்கை இனிமையாக இருக்கும், 2 எண்காரர்கள் அனுசரித்து செல்வார்கள்.

4,13,22,31 போன்ற தேதிகளில் பிறந்தவர்களா நீங்கள் 1, 8 தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும், 5 அல்லது 6 ஆம் எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.  அவ்வாறு 6 தேதிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொண்டால் பொருளாதார முன்னேற்றம் அடைவீர்கள்.

நீங்கள் பிறந்த தேதி 5,14,23 இதுவா அப்படி என்றால் 5, 9, 1, 3, 6, போன்ற தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் வாழ்கை சிறப்பாக இருக்கும். 2, 6 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

6,15,24  போன்ற தேதிகளில் பிறந்தவர்கள் 6, 9 திருமணம் செய்து கொண்டால் உங்களின் வேகத்திற்கு அவர்கள் ஈடுகொடுக்க முடியும். இதில் முக்கியமானது என்றால் 1,3, 4, 5 போன்ற தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்யவேண்டாம்.

நீங்கள் பிறந்த தேதி 7,16,25 இந்த 3 தேதிகளில் இருந்தால் நீங்கள் 1, 2, 5, 6 போன்ற தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்ளலாம் நல்ல வாழ்க்கை அமையும். குறிப்பாக 1, 2 தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் நல்ல இல்லற வாழ்க்கை அமையும். முக்கியமாக 8 எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை கசந்து விடும்.

8,17,26 போன்ற தேதியில் பிறந்தவர்களுக்கு ஏற்ற தேதி 1, 4  இந்த இரண்டு தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். 2,7, 8, 9 போன்ற தேதியில் பிறந்த பெண்களை திருமணம் செய்யக்கூடாது. முக்கியமாக 9 தேதியில் பிறந்தவர்கள் உங்களை ஆள நினைப்பார்கள்.

9,18,27 போன்ற தேதியில் பிறந்தவர்கள் தாம்பத்திய வாழ்க்கை நன்றாக இருக்கும். தங்களது நட்பு எண்ணாக உள்ள 3, 5, 6, 9 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2,8 தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்காது.

 

இதை ஒரு கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்  👉 திருமண பெயர் பொருத்தம் 👍

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement