புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும்.?

puratasi month personality in tamil

புரட்டாசி மாதம் பிறந்தவர்களின் குணங்கள்

வணக்கம் நண்பர்களே..! நீங்கள் புரட்டாசி மாதத்தில் பிறந்தீர்களா..! உங்களின் குணத்தை தெரிந்துகொள்வோம். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணமாக தான் இருப்பார்கள். மனிதர்களின் குணத்தை தெரிந்துகொள்வதற்கு பல பதிவுகள் பதிவிற்றுகிறோம். உதாரணமாக ராசிகள், பிடித்த நிறம், பிடித்த எண், உடலின் பாகங்களை வைத்தும் உங்களின் குணங்களை பதிவிற்றுகிறோம் அந்த பதிவினை பற்றி தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். இப்போது வாங்க புரட்டாசி மாதம் பிறந்தவர்களின் குணத்தை பற்றி படித்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ கன்னி ராசியின் பொது பலன்கள் மற்றும் குணங்கள்

புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்.?

புரட்டாசி மாதத்தில் உள்ளவர்கள் புத்தி கூர்மையுடன் இருப்பார்கள். இவர்களுக்கு பணத்துக்கு கஷ்ட பட மாட்டார்கள். செல்வ செழிப்போடு இருப்பார்கள்.

எந்த காரியத்தையும் தைரியமாக செய்வார்கள். மிகுந்த ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். புதிதாக ஒரு விஷயத்தை கற்று கொடுத்தால் உடனே புரிந்து கொள்வார்கள். இவர்கள் மிகுந்த ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் உழைப்பை பெரிதும் நம்புவார்கள். எவ்வளவு கஷ்டமான செயலையும் ஈசியாக முடித்து விடுவார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

இவர்களின் உழைப்பினால் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். கற்பனை திறம் அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் பேச்சு திறமையால் ஈர்த்து விடுவார்கள்.

ஒரு செயலை தொடங்குவதற்கு முன் யோசித்து தான் செயல்படுவார்கள். எடுத்தோம் முடித்தோம் என்று இருக்க மாட்டார்கள்.

உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த உணவு பிடிக்கும், பிடிக்காது என்று வரைமுறை இல்லாமல் எல்லா உணவுகளையும் சாப்பிடுவார்கள்.

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்வார்கள். இவர்களிடம் இருப்பவர்கள் தவறு செய்தால் தட்டி கேட்பார்கள். அவர்கள் மறுபடியும் தவறு செய்யாமல் பார்த்து கொள்வார்கள். நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் சொல்லை கேட்டு நடப்பார்கள்.

இவர்கள் இயற்கையை ரசிக்க கூடியவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் முழு விருப்பத்தோடு செய்வார்கள்.

பணத்தை சேமிக்கும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அறிவினால் சிறந்து விளங்குவார்கள்.

மற்றவர்கள் மனது புண்படும்படி பேச மாட்டார்கள். மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்வார்கள். இவர்களின் வீட்டில் புத்தகம் அதிகமாக இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புத்தகங்களை படித்து மனப்பாடம் செய்யாமல் அதில் உள்ள விஷயங்களை மட்டும் புரிந்து கொள்வார்கள்.

இலட்சியத்தை அடைவதற்கு போராடுவார்கள். இலட்சியம் அடையும் வரைக்கும் கடுமையாக உழைப்பார்கள். மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேச மாட்டார்கள். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்