ராகு கேது பெயர்ச்சியில் இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இனி அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தான்..! இதுல உங்க ராசி இருக்கா..!

Advertisement

ராகு கேது பெயர்ச்சி

ஆன்மீகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு பெயர்ச்சியும் ஒவ்வொரு மாதிரியான பலன்களை அளிக்கிறது. அத்தகைய பலன்கள் யாவும் ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளுக்கும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. ஏனென்றால் ஒருவரின் பலன் என்பது ராசி, நட்சத்திரம் மற்றும் கிரக சேர்க்கை இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து தான் அமைகிறது. ஆகையால் பலன்களும் அதற்க்கு ஏற்றவாறு தான் இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் ராகு கேது பெயர்ச்சியினால் அடுத்த 5 மாதங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தினை பெறப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்துக்கொள்ள போகிறோம். எனவே இதில் உங்களுடைய ராசியும் இருக்கிறதா என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

சனியின் வக்ர பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது.. உங்க ராசி இருக்கா..

Rahu Ketu Peyarchi 2023 Palangal:

ராகு கேது தோஷம் என்பது நிறைய நபர்களுக்கு இருக்கும். இத்தகைய தோஷம் ஆனது நிறைவு அடைந்தால் மட்டுமே திருமணம் ஆகும் என்பதும் ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது.

இத்தகைய ராகு கேது பெயர்ச்சியினால் இன்னும் ஐந்து மாதங்களுக்கு அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள் யாரென்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீன ராசி:

மீனம் ராசி

 

ராசியில் கடைசி ராசியாகவும் மீன் போன்ற அமைப்பினை கொண்டதாகவும் உள்ளது தான் மீன ராசி. 2023- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு சென்றடைகிறார்.

இத்தகைய பெயர்ச்சி காரணமாக மீன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரப்போகிறது. மேலும் இதுநாள் வரையிலும் இருந்த பண கஷ்டங்கள் நீங்கி நிதிநிலை மேலோங்கி காணப்படும் மற்றும் உயர் பதவிகளும் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

கடக ராசி:

கடக ராசி

ஆன்மீகத்தில் ராகு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறுவார்கள். அதன் படி ராகு பகவான் ராசியில் 4-வது ராசியான கடக ராசிக்கு நற்பலன்களை அள்ளித் தரப்போகிறார்.

இதன் விளைவாக கடக ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பானதாக இருக்கும். மேலும் புதிதாக வாகனம் மற்றும் வீடு வாங்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது மிகவும் அவசியம் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

மேஷ ராசி:

மேஷம்

ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு சென்றாலும் கூட மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தான் தருகிறார். மேலும் மேஷ ராசிக்காரர்கள் செய்யும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுநாள் வரையிலும் காணப்படாது நல்ல வருமானம் மற்றும் லாபம் கிடைக்கும். அதற்கு விடா முயற்சி முக்கியமானதாக கருதப்படுகிறது.

மேலும் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி மரியாதை அதிகரித்து காணப்படும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

ஒரு கைப்பிடி கல் உப்பு போதும் 10 நாட்களில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement