திருமணத்திற்கு ஏன் ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது தெரியுமா?

Advertisement

ரஜ்ஜு பொருத்தம் விளக்கம் | Rajju Porutham in Tamil

Rajju Porutham in Tamil Language:- திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பதாக இருந்தால் பலவிதமான பொருத்தங்களை பார்க்க வேண்டியதாக இருக்கும். இருப்பினும் திருமணம் செய்வதற்கு கண்டிப்பாக பத்து பொருத்தம் பார்க்கபடுகிறது. அவற்றில் ரஜ்ஜு பொருத்தம் அவசியம் பார்க்கப்படுகிறது. ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் அந்த ஜாதகக்காரர்களுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள். ரஜ்ஜு பொருத்தம் என்பது பத்து திருமண பொருத்தங்களில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ரஜ்ஜு ஐந்து பகுதிகளாக பிரிக்கப்படுகிறது அவற்றை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன? | What is Rajju Porutham in Tamil

ரஜ்ஜு பொருத்தம் வகைகள்:-

  1. சிரசு ரஜ்ஜு (தலை)
  2. கண்ட ரஜ்ஜு (கழுத்து)
  3. உதர ரஜ்ஜு (வயிறு)
  4. ஊரு ரஜ்ஜு (தொடை)
  5. பாத ரஜ்ஜு (கால்)

சரி இந்த ஐந்து வகை ரஜ்ஜு பொருத்தங்கள் விளக்கங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

Rajju Porutham Meaning in Tamil

சிரசு ரஜ்ஜு என்றால் என்ன?

இந்த சிரசு ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ளும் ஆணிற்கு தீங்கு ஏற்படும். அதாவது திருமணம் செய்து கொள்ளும் ஆணிற்கு மரணம் ஏற்படும்.

சிரசு ரஜ்ஜு உள்ள நட்சத்திரங்கள்:

  • மிருக சீரிஷம்
  • சித்திரை
  • அவிட்டம்

கண்ட ரஜ்ஜு என்றால் என்ன?

கண்ட ரஜ்ஜு என்பது திருமணம் செய்து கொள்ளும் பெண்ணிற்கு தீங்கு ஏற்படும். அதாவது மாங்கல்யம் அணியக்கூடிய கழுத்து கொண்ட பெண்களுக்கு மரணம் ஏற்படும்.

கண்ட ரஜ்ஜு நட்சத்திரங்கள்:

  • ரோகிணி
  • அஸ்தம்
  • திருவோணம்
  • திருவாதிரை
  • சுவாதி
  • சதயம்

உதர ரஜ்ஜு என்றால் என்ன?

வயிறு ரஜ்ஜு இருப்பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும். இதனை புத்திர தோஷம் என்று சொல்வார்கள் குழந்தை பாக்கியம் கிடைக்காது.

ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்..!

உதர ரஜ்ஜு உள்ள நட்சத்திரங்கள்:

  • கார்த்திகை
  • புனர்பூசம்
  • உத்திரம்
  • விசாகம்
  • உத்திராடம்
  • பூரட்டாதி

ஊரு ரஜ்ஜு என்றால் என்ன?

தொடை ரஜ்ஜு இல்லாவிட்டால் அவர்களது வீட்டில் பணம் நஷ்டம் ஏற்படும், செல்வங்கள் மட்டுமல்லாமல் சேமித்த சொத்துக்கள் அனைத்தையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

ஊரு ரஜ்ஜு உள்ள நட்சத்திரங்கள்:-

  • பரணி
  • பூசம்
  • பூரம்
  • அனுஷம்
  • பூராடம்
  • உத்திரட்டாதி

பாத ரஜ்ஜு என்றால் என்ன?

பாத ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் ஒருவர் இருக்கும் இடத்திற்கே ஆபத்து ஏற்படும். அதாவது பிரிவு ஏற்படும் அல்லது சன்னியாசம் செல்வார்கள்.

பாத ரஜ்ஜு உள்ள நட்சத்திரங்கள்:

  • அசுவினி
  • ஆயில்யம்
  • மகம்
  • கேட்டை
  • மூலம்
  • ரேவதி

ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி?

இந்த ரஜ்ஜு பொருத்தம் என்பது திருமணம் செய்வதற்கு மிகவும் அவசியமான பொருத்தமாகும். திருமணம் செய்ய இருக்கும் ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் வெவ்வேறு ரஜ்ஜுவாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் திருமணம் செய்ய இருக்கும் மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம். இதை மிக எளிதாக சொல்ல வேண்டும் என்றால் ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.

முக்கிய திருமண பொருத்தம்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement