ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

rishaba rasi guru peyarchi

Guru Peyarchi 2021 to 2022 in Tamil Rishabam

guru peyarchi 2021 rishabam: குரு பெயர்ச்சியானது மற்ற பெயர்ச்சிகளை போன்று இல்லாமல் மிகவும் நல்ல பலன்களை கொடுக்கக்கூடியது. இந்த வருடம் குரு பகவானின் சஞ்சார பலன்கள் 13.11.2021 சனிக்கிழமை அன்று ஆரம்பம் ஆகிறது. பொதுவாக எல்லோரும் ராசி பலன்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சிலருக்கு ஆன்மீகத்தில் உள்ளபடி எதுவும் மாறாமல் அன்றைய நாளானது கடக்கும். ஒரு சிலருக்கு மட்டும் ஆன்மீக ஜோதிடப்படி அன்றைய நாள் சற்று மாற்றம் அடையலாம். குரு பெயர்ச்சி வந்துவிட்டாலே ஒவ்வொருவருக்கும் மனதில் நம்முடைய ராசிக்கு குரு நல்ல பலனை கொடுக்க போகிறாரா? கடந்த வருடத்தை விட இந்த வருடம் வாழ்க்கை நிலையானது எப்படி இருக்கும்? முன்னேற்றம் கொடுப்பாரா இது போன்ற பல கேள்விகள் நமக்குள்ளே எழும். ஆகவே ரிஷபம் ராசி, ரிஷப லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு (குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 rishabam) இந்த குருபெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக படித்தறியலாம் வாங்க.

மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021:

ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021

guru peyarchi 2021 to 2022 in tamil rishabam: ரிஷப ராசியினருக்கு நல்ல மேன்மையான காலகட்டத்தை கொடுக்கப்போகிறது இந்த குரு பெயர்ச்சி. கடந்த வருடத்தில் குரு பெயர்ச்சியானது எந்த நல்ல பலன்களையும் ரிஷப ராசிக்காரர்கள் பெறவில்லை. ரிஷபம் என்றால் காளை மாடு அல்லது எருது என்று பொருள். இவர்களிடம் மற்றவர்கள் பேசும்போது பேச்சில் கவனத்துடன் பேச வேண்டும். ரிஷப ராசிக்காரர்கள் இவர்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அவர்களுடைய பொறுமையினை நாம் சோதித்து பார்த்துவிடக்கூடாது. ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு கோபம் வந்துவிட்டால் யார் எவரென்று பார்ககாமல் கோபமாக பேச கூடியவர்கள் ரிஷப ராசிக்காரர்கள்.

பொருளாதார நிலை: ரிஷப ராசிக்கு அதிபதியாக சுக்கிரன் இருப்பதனால் பணம், ஆடம்பரம் போன்றவைகள் தான் இவர்களிடம் பெரிதும் காணப்படும். இதுவரை நடந்த குரு பெயர்ச்சியின் போது கிடைக்காத எந்த ஒரு பலனாக இருந்தாலும் சரி இந்த குரு பெயர்ச்சியில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இது வரை உங்களுக்கு எந்த செயலில் தடங்கல் பிரச்சனைகள் இருந்து வந்ததோ தடைகள் அனைத்தும் நீங்கி நற்பலன்களை அடைய போகிறார்கள் ரிஷப ராசியினர். இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்களுடைய மனமானது மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கும். எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுவீர்கள். அதிர்ஷ்டமானது உங்களின் அருகில் இருப்பது போன்று உணர்வீர்கள்.

குடும்பம்: பல நாட்களாக சொந்தமாக வீடு கட்ட பல தடைகள் வந்த நிலையில் அந்த தடைகளானது இப்போதுநீங்கி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். புதிதாக வாகனம், மனை போன்றவைகள் வாங்க வாய்ப்பு கைக்கூடும். கணவன் மனைவி உறவுக்குள் நல்லிணக்கம் அதிகரித்து காணப்படும். ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் குடும்பத்தில் உள்ள நபரிடமோ அல்லது வெளியாட்களிடம் கூறிய வாக்கினை காப்பாற்ற வேண்டும் என்று துடிப்பவர்கள். மற்றவர்களிடம் பேசும்போது நேர்மையாகவும், நியாயம் உள்ளதாகவும் பேசுவார்கள். இவர்களிடம் பேசும்போது மிகவும் எச்சரிக்கையாக பேச வேண்டும். நாம் தெரியாமல் பேசிய வார்த்தையை கூட அலசி ஆராய்ந்து மீண்டும் நம்மிடமே வந்து கேள்வி கேட்கக்கூடியவர்கள் ரிசப ராசியினர்.

பாக்கியம்: குரு பெயர்ச்சிக்கு பிறகு வயதிற்கு ஏற்றாற்போல் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம், குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம், நல்ல வேலை இல்லாதவர்களுக்கு தொழில் வளம் சிறப்பாக அமைய குரு உங்களுக்கு துணை இருப்பார். உங்களுடைய கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல பலனும் இம்முறை உங்களுக்கு கிடைக்கும்.

தொழில்/ வியாபாரம்: குருவால் தொழில் வியாபாரம் போன்றவைகளில் லாபம் மனதிற்கு நிறைவாக கிடைக்கும். குறைவான முதலீடு செய்தவர்களுக்கு இதுவரை நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். சுருக்கமாக சொன்னால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

ஆரோக்கியம்: உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறுவதால் உடல் ஆரோக்கியத்தில் உற்சாகத்துடன் இருப்பீர்கள்.

புகழ்: தாமதம் ஆன அனைத்து விஷயங்களும் இப்போது உடனுக்குடன் நடக்கும். உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் புகழ் நிலைத்து நிற்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த தடைகள் நீங்கி வியாபாரம் சூடு பிடிக்கும். வேலை பார்ப்பவர்களும், தொழிலில் இருக்கும் பங்குதாரர்களுக்கு உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

கல்வி: வேலை இல்லாதவர்களுக்கு அவர்களுடைய படிப்பிற்கு ஏற்ற வேலை அமையும். உயர்கல்வி படிப்பதற்கான இருந்துவந்த தடைகள் அனைத்தும் நீங்கும். கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் அனைத்து ரிஷப ராசி மாணவர்களும் அரியர்ஸ்களை கிளியர் செய்வீர்கள். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். தங்கள் குழந்தைகளை விரும்பிய பள்ளியில் சேர்ப்பீர்கள்.

திருமண நிலை: திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண நிச்சயம் ஆகும். காதல் திருமணத்திற்கு வீட்டில் பெற்றோர் சம்மதம் கிடைக்கும். முதல் திருமண வாழ்க்கையில் பிரச்சனையை சந்தித்தவர்களுக்கு இரண்டாம் திருமண வாழ்க்கை நன்றாக அமையும். குழந்தைகளின் விஷயத்தில் நல்ல தகவல் வந்தடையும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 Simmam

 

பரிகாரம்: இந்த பெயர்ச்சியில் குருபகவான் தங்களுக்கு வழங்க இருக்கும் முழுமையான பலன்களை பெற உங்களின் ஜென்ம நட்சத்திர தினம் அல்லது வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு அதன் விருப்பமான உணவுகளை யானை பாகனிடம் கேட்டு உணவுகளை கொடுத்து அதன் ஆசிர்வாதத்தினை பெறுங்கள்..! குருவினுடைய அருள் உங்களுக்கு எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்