உங்கள் பூஜை அறையில் இதை மட்டும் செய்தால் போதும் செல்வம் பெருகும்..!

Advertisement

Selvam Peruga Tips in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! எவ்வளவு தான் இன்றைய காலகட்டம் மாறி இருந்தாலும் ஆன்மிகம் மட்டும் மாறாத ஒன்றாக இருக்கிறது. ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்கள் இன்றும் இருக்கிறார்கள். நாம் அனைவருமே கோவிலுக்கு செல்வோம். கோவிலில் செய்யும் பூஜைகளை நாம் வீட்டிலும் செய்து வருகின்றோம். அப்படி என்ன தான் செய்தாலும் வீட்டில் செல்வ வளம் பெருகவில்லை என்று கவலைப்படுகிறீர்களா..? அப்போ உங்கள் வீட்டு பூஜை அறையில் இப்படி செய்யுங்கள்..!

செல்வத்தை வாரி வழங்கும் குபேர ஜல தீபம் ஏற்றும் முறை மற்றும் அதன் பலன்கள்..!

செல்வ வளம் பெருக டிப்ஸ்: 

செல்வ வளம் பெருக டிப்ஸ்

குறிப்பு -1

உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பாத்திரத்தில் முதலில் சிறிதளவு பச்சரிசியை போட்டு அதனுடன் 1 ரூபாய் நாணயத்தை போட வேண்டும். பின் அதன் மேல் கல் உப்பை நிரப்ப வேண்டும்.

இதுபோல கல் உப்பு வைக்கும் பாத்திரத்தில் அரிசி மற்றும் நாணயத்தை போட்டு வைப்பதால் வீட்டில் செல்வம் குறையாமல் இருக்கும்.

குறிப்பு -2

உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு பித்தளை சொம்பு வைத்து, தண்ணீர் ஊற்றி பின் அதில் மஞ்சள் தூள், பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு மற்றும் சிறிதளவு ஜவ்வாது சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் வேப்பிலை மற்றும் உதிரிப்பூக்கள் சேர்த்து வழிபட வேண்டும்.

இந்த நீரை வாரத்திற்கு 2 முறை மாற்ற வேண்டும். இதுபோல வாசனை பொருட்களை வைத்து வழிபட்டு வருவதால் வீட்டில் கடன் பிரச்சனை நீங்கி செல்வம் பெருகும்.

செல்வ வளம் பெருக அரிசி பானையில் இந்த பொருளை மட்டும் வையுங்கள்..!

குறிப்பு -3 

பூஜை அறையில் இருக்கும் காமாட்சி விளக்கை ஏற்றும் போது அதன் அடியில் தட்டு வைத்து ஏற்றுவது வழக்கம். அப்படி வைக்கும் தட்டில் சிறிதளவு பச்சரிசி மற்றும் அதனுடன் 1 ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மேல் காமாட்சி விளக்கை ஏற்றி வழிபட வேண்டும்.

அதுபோல மஞ்சள் கலந்த அரிசியை வைத்தும் வழிபட்டு வரலாம். இப்படி வழிபட்டு வருவதால் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் தீரும்.

குறிப்பு -4

வீட்டில் விளக்கேற்றி வழிபடும் போது அதில் இருக்கும் திரியை 2 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது மிகவும் அவசியம்.

அதுபோல எந்த விளக்கு ஏற்றினாலும் அதில் சிறிதளவு பூ போட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டும். பூ இல்லாமல் விளக்கு ஏற்றி வழிபட கூடாது.

வாரத்தில் ஒரு முறையாவது நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

இதுபோன்ற முறைகளை கடைப்பிடித்து வந்தால் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ வீட்டில் செல்வம் பெருக மணி பிளான்ட் செடியை எங்கு வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement