நவம்பரில் இருந்து இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்..! இதில் உங்கள் ராசி உள்ளதா?

Advertisement

Since November These Zodiac Signs are Lucky

ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம்.. குரு பகவான் பொதுவாக வியாழன், செல்வம் மற்றும் குழந்தை காரனாக அழைக்கப்படுகிறார். ஆக குருபகவான் யாருடை ஜாதகத்தில் சுக ஸ்தானத்தில் இருக்கிறாரோ அவள்களுடைய வாழ்வில் நிறைய விஷயங்களுக்கு நல்ல பலன்களை வாங்குவர். அதிலும் வரும் நவம்பர் 24 ஆம் தேதி, 2022 குரு மார்கியாகப் போகிறது. ஆக குரு தனது சொந்த ராசியில் நேரடியாக சஞ்சரிப்பதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தருவார். அந்த வகையில் குரு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை அளிப்பர் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்:

வரும் நவம்பர் 24 முதல் குருபகவான் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நேரடி தாக்கத்தை அளிப்பார். இதன் காரணமாக ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை வழங்குவார். வியாபாரம் செய்பவர்கள் இந்த கால கட்டத்தில் நல்ல பலன்களை பெறுவார்கள். பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க கூடும். அதாவது பதவி உயர்வு, பண வரவு, சம்பளம் உயர்வு பாராட்டுக்கள் என்று உங்களுக்கு கிடைக்க கூடும். உங்கள் நிதிநிலை வளர்ச்சிகரமாக இருக்கும். வேலை கிடைப்பதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

கடகம்:

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த கால கட்டத்தில் குருபகவான் பணம் வரவு தருவார் இதன் காரணமாக உங்கள் வருமானம் வளர்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் செய்யும் முதலீட்டில் நல்ல லாபம் பெறுவீர்கள்.நீங்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் அவற்றில் லாபம் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்த விரும்புவோருக்கு அல்லது புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு நவம்பர் 24க்கு பிறகு நல்ல நேரம் அமையும். மேலும் உங்கள் கணவன் மனைவி உறவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கன்னி:

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் நவம்பர் 24-க்கு பிறகு பணிபுரியும் நபர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வை உருவாக்கி கொடுப்பார். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். அதேபோல் உங்கள் தொழிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடையும். உங்களுக்கு இருந்து வந்த பணம் கஷ்டம் இந்த கால கட்டத்தில் நீங்கும். நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்கு முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் இந்த நேரத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம், இப்பொழுது முதலீடு செய்வதினால் நல்ல லாபத்தை பெற முடியும். மேலும் உங்கள் உடல் நலம் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் இந்த நேரத்தில் பணம் அதிகளவு சம்பாதிப்பதற்கான வழிகளை வகுத்து தருவார். ஆக உங்கள் வருமானம் வளர்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் தொழில் செய்துகொண்டிருந்தாள் அவற்றில் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்க கூடும். பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க கூடும். குறிப்பாக சம்பளம் உயர்வும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.சமூகத்தில் உங்களுக்கு மரியாதையை அதிகரிக்கும். மேலும் இந்த கால கட்டத்தில் பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement