சிவபெருமானின் அவதாரங்கள்..! Lord Shiva Avatharam In Tamil..!
Sivaperuman Avatharangal / Sivan Avatharam Names In Tamil: சிவ பக்தர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் யாரும் அறிந்திடாத சிவ பெருமானின் 19 அவதாரத்தின் ரகசியங்களை என்னென்ன உள்ளது என்பதை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். வேணுமென்றே கடவுள் மனித கோலத்தில் பிறந்து மனிதர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உலகில் உள்ள அனைத்து தீமைகளையும் அழிக்க வேண்டும் என்று நினைத்தே சிவபெருமான் 19 அவதாரங்களை எடுத்தார். சிவபெருமான் எடுத்த அவதாரம் பற்றிய உண்மை ரகசியம் சிலருக்கு மட்டுமே தெரியும். சிவ பெருமான் எடுத்த ஒவ்வொரு அவதாரமும் தனி தனி சிறப்பை கொண்டுள்ளது. சிவபெருமான் எடுத்த அவதாரத்திற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மனிதர்களை தீமைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற நோக்கமே இவர் 19 அவதாரங்களையும் எடுக்க காரணமாயிற்று. சரி வாங்க நண்பர்களே இப்போது சிவன் எடுத்த 19 அவதாரத்தின்(sivan avatharangal) முக்கியத்துவம் பற்றிய முழு பதிவை படித்தறியலாம்..!
சிவன் பெயர்கள் பட்டியல்..! Sivan Names in Tamil..! |
சிவபெருமான் எடுத்த பிப்லாட் அவதாரம்:
சிவபெருமான் ஒரு துறவியின் வீட்டில் பிறந்தவர். பிப்லாட் பிறப்பதற்கு முன்பே துறவியை வீட்டை விட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாத காரணத்தால் தான் தன் தந்தை வீட்டை விட்டு சென்றதை வளரும் காலங்களில் தான் புரிந்துகொண்டார். இதனால் சனியை பிப்லாட் சபித்து தன் வின் நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார்.
சிவ பெருமானின் நந்தி அவதாரம்:
நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் வாகனமாகும். பல இடங்களில் சிவனை நந்தி வடிவத்தில் வணங்கி வருகின்றனர். நந்தியின் பாதுகாவலனாக சிவன் பார்க்கப்பட்டார்.
சிவ பெருமானின் வீரபத்ர அவதாரம்:
தட்சிணா யாகத்தில் சதிதேவி தன்னை பலி கொண்டதால் சிவபெருமான் கோபத்திற்கு ஆளானார். சிவபெருமான் தன் தலை பகுதியில் இருந்து சிறிது முடியினை எடுத்து தரையில் போட்டார். இதிலிருந்து பிறந்தவர்கள் தான் சிவன் எடுத்த வீரபத்திர அவதாரம்.
பைரவ அவதாரம்:
ஒரு நாள் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற சண்டை நிகழும் போது சிவபெருமான் இந்த பைரவ அவதாரத்தை எடுத்தார். சண்டை நிகழ்ந்த இடத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவபெருமான் துண்டித்துவிட்டார். சிவபெருமானின் மனதிற்குள் பிராமணனை கொன்ற குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது.
சிவனின் அஸ்வத்தாமா அவதாரம்:
பார்கடலை கடையும் பொழுது சிவபெருமான் கொடிய நஞ்சுடன் இருக்கும் நேரத்தில் சிவனின் தொண்டை பகுதி எரிய தொடங்கியது. அந்த சமயத்தில் சிவனின் உள்ளிருந்த விஷ்ணு புருஷ் வெளியே வந்தது. அதற்கு கடவுள் ஒரு வரத்தையும் அளித்தார். பூமியில் பிறந்து துரோணரின் மகனாக வளர்ந்து எதிர்த்து நிற்கும் சத்திரியர்களைக் கொள்வான் விஷ்ணுபுருஷ். அதனால் அஸ்வத்ஹமாவாக பிறந்தான் விஷ்ணுபுருஷ்.
சிவன் எடுத்த ஷரபா அவதாரம்:
ஷரபா வடிவத்தில் உள்ள சிவபெருமான் பாதி பறவை வடிவத்திலும், பாதி சிங்க வடிவத்திலும் இருப்பார். சிவபுராணப்படி சிங்க அவதாரமான சிங்கத்தை அடக்குவதற்காகவே சிவபெருமான் ஷரபா அவதாரத்தை எடுத்தார்.
கிரகபதி அவதாரம்:
விஸ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் அவரது மகனாக பிறந்தார் சிவபெருமான். அவருக்கு கிரகபதி என்று பெயரிட்டார் விஸ்வனார். கிரகபதிக்கு 9 வயது ஆகும் போது அவர் இறக்க போகிறார் என்று அவர் பெற்றோரிடம் நாரதர் கூறினார். மரணத்தை ஜெயித்திட காசிக்கு சென்றான் கிரகபதி. பின்பு சிவனிடம் ஆசி பெற்றதால் மரணத்தை ஜெயித்தான் கிரகபதி.
துர்வாசா அவதாரம்:
அண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடைபிடிப்பதற்கு சிவபெருமான் இந்த துர்வாசா அவதாரத்தை எடுத்தார். துர்வாசா என்பவர் கோபத்திற்கு பெயர் போன மிகப்பெரிய துறவியாவார்.
சிவபெருமானின் அனுமான் அவதாரம்:
குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவனின் ஒரு அவதாரமாகும். ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு சேவை புரிந்திடவே சிவபெருமான் இந்த அனுமான் அவதாரத்தை எடுத்தார்.
சிவனின் அவதாரம் – ரிஷப அவதாரம்:
பாற்கடல் கடைதலுக்கு பின்னர் கீழோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான். விஷ்ணு பகவான் அந்த கீழோகத்தில் ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அங்கே தங்கியிருந்த போது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் விஷ்ணு பகவானின் அனைத்து குழந்தைகளும் அசுர குணத்தை கொண்டவர்களாக இருந்தனர். காளையுடன் சண்டையிட விஷ்ணு பகவான் வந்த போது அது சிவபெருமானின் அவதாரம் என்பதை அவர் உணர்ந்து அவர் இடத்திற்கே சென்று விட்டார் விஷ்ணுபகவான்.
சிவபெருமானின் யாதிநாத் அவதாரம்:
ஒருமுறை பழங்குடியை சேர்ந்த ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனும் அவன் மனைவியும் தீவிர சிவ பக்தர்கள் ஆவார்கள். ஒரு முறை யாதிநாத் வடிவில் சிவபெருமான் அவர்களை சந்தித்தார். இரண்டு பேர் மட்டுமே இருக்க கூடிய சின்ன குடிசையில் அவர்கள் இருந்ததால், விருந்தாளியை உள்ளே தங்க வைத்து தான் வெளியே படுக்க தீர்மானித்தான். ஆனால் அன்று இரவு வன விலங்கால் கொல்லப்பட்டான். அப்போது அவர் மனைவி சாக நினைத்ததால் தனது உருவத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளுக்கு ஒரு வரத்தினை அளித்தார். அதன் படி, அவளும் அவள் கணவனும் நலத்துடன் மீண்டும் பிறப்பார்கள். அவர்களை சிவபெருமானே சேர்த்து வைப்பார்.
சிவனின் கிருஷ்ண தர்ஷன் அவதாரம்:
ஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே சிவபெருமான் இந்த கிருஷ்ண தர்ஷன் அவதாரத்தை எடுத்தார்.
விசு வரியா அவதாரம்:
அனைத்து விதமான ஆபத்துகளிலிருந்து மனிதனை காக்கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.
சிவ பெருமானின் சுரேஷ்வர் அவதாரம்:
சிவபெருமான் தன்னுடைய பக்தர்களை சோதிக்கவே இந்திரன் வடிவை ஒரு முறை எடுத்தார் சிவபெருமான். அதனால் தான் சிவபெருமானை சுரேஷ்வர் என்று அழைக்கிறோம்.
கீரத் அவதாரம்:
அர்ஜுனன் தவத்தில் இருந்த போது கீரத் அல்லது வேட்டைக்காரன் வடிவை எடுத்தார் சிவபெருமான். சிவபெருமான் அர்ஜுனனை கொலை செய்வதற்கு மூக்கா என்ற அரக்கனை அனுப்பி வைத்தார் துரியோதனன். மூக்கா காட்டுப் பன்றி போல் தன்னை மாற்றிக்கொண்டான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ஜுனனின் கவனம் ஒரு பெரிய சத்தத்தால் கலைந்தது.
அவன் கண்ணை திறந்து மூக்காவை பார்த்தான். அந்த காட்டுப்பன்றியை அர்ஜுனனும் கீரத்தும் தங்களின் அம்புகளால் வீழ்த்தினார்கள். . பின் யார் அந்த காட்டுப்பன்றியை முதலில் வீழ் த்தியது என்ற சண்டை கீரத்திற்கும் அர்ஜுனனுக்கும் பிறந்தது. கீரத் வடிவில் இருந்த சிவபெருமானை சண்டைக்கு வரச்சொல்லி சவால் விடுத்தான் அர்ஜுனன். அர்ஜுனின் வீரத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு தன்னுடைய ஆயுதத்தை பரிசளித்தார்.
சிவனின் சுண்டன் தர்கா அவதாரம்:
திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை இமாலயா விடம் பார்வதியின் கரத்தை பிடிக்க சிவபெருமான் இந்த சுண்டன் தர்கா அவதாரத்தை எடுத்தார்.
சிவன் எடுத்த பிரமச்சாரி அவதாரம்:
சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.
சிவபெருமானின் யக்சேஷ்வர் அவதாரம்:
கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகம் பாவங்களை ஒழிக்கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.
அவதுட் அவதாரம்:
சிவபெருமான் இந்திரனின் திமிரை ஒழிக்கவே இந்த அவதுட் அவதாரத்தை எடுத்தார்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |