பெண்கள் உறங்கும் நிலையை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சுலபமாக அறியலாம்

Advertisement

Sleeping Position Reveals Personality in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம்  ஆன்மிகம் பதிவில் பெண்கள் உறங்கும் நிலையை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கண்டுபிடிக்கலாம். பொதுவாகவே ஒருவரின் முகத்தை வைத்தும், அவர்களின் பெயர்களை கொண்டும் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அறிந்திருப்போம். ஆனால் இதில் அவர்கள் உறங்கும் நிலையை வைத்து அவர்கள் கோவமுடையவரா, சந்தோசமாக இருப்பவரா என்று தெரிந்துகொள்ளப்போகிறோம்.

பொதுவாகவே பெண்கள் தூங்கும் பொழுது நேராகவும், குப்பறப்படுப்பதும், பக்கவாட்டில் படுப்பது அல்லது ஏதேனும் பொம்மைகளை கட்டிப்பிடித்து படுப்பது என்று நான்கு விதங்களில் உறங்குவார்கள், மேலும் இதில் நீங்கள் எந்த நிலையில் உறங்குபவர்கள் என்று தெரிந்துகொண்டு உங்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

உங்கள் நெற்றியை வைத்து நீங்கள் எப்படி பட்டவர்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.!

பெண்கள் தூங்கும் நிலை:

கட்டியனைத்துக் கொண்டு தூங்குவது:

கட்டியனைத்துக் கொண்டு தூங்குவது

கட்டியனைத்துக் கொண்டு தூங்கும் பெண்கள் அதாவது தலையணை, பொம்பை அல்லது பக்கத்தில் இருக்கும் நபரை கட்டியனைத்துக் கொண்டு உறங்கும் பெண்கள் நம்பிக்கை உடையவராக இருப்பார்கள்.

இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மனதில் வைத்து பேச மாட்டார்கள், அவை எதுவாக  இருந்தாலும் வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் இவர்கள் எல்லோருக்கும் நல்ல ஒரு தோழியாகவும் இருப்பார்கள்.

குப்புற தூங்குவது:

குப்புற தூங்குவது

குப்புறப்படுத்து கொண்டு தலை அணைக்கு கீழ் கைகளை அணைத்து  கொள்வதுபோல் தூங்கும் பெண்கள் இயற்கையாகவே மென்மையான குணங்களை கொண்டவராக இருப்பார்கள்.

இவர்கள் எந்த ஒரு சூழ்நிலைகளிலும் வரவேற்கும் குணங்களை கொண்டவராக இருப்பார்கள். இன்பம், துன்பம், மகிழ்ச்சி போன்ற உணர்வு ரீதியாக இவர்கள் அதிகம் தாக்கம் கொண்டவராக இருப்பார்கள்.

பக்கவாட்டில் உறங்குவது:

பக்கவாட்டில் உறங்குவது

பக்கவாட்டில் உறங்கும் பெண்கள் கடினமான நேரங்களிலும் கோவப்படாமல், அவசரப்படாமல் அதற்கான தீர்வுகளை சரிசெய்யும் நபர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எல்லா விஷயங்களிலும் வேகமாகவும், மகிழ்ச்சியான நபர்களாகவும் இருப்பார்கள்.

நேராகப்படுப்பது:

நேராகப்படுப்பது

நேராகப் உறங்கும் பெண்கள் பொதுவாகவே அமைதியானவராகவும், கூச்சம் அதிகம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தன்னை தானே உயர்த்தி பேசுவார்கள்.

இப்படி நேராக படுக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகமாகவே இருக்கும் இதுவே இவர்களின் விசேஷ குணம் என்றும் சொல்லலாம். இவர்கள் தலைமை அதிகாரியாக இருப்பார்கள், அதாவது எல்லோருக்கும் பாஸ், மேனேஜர் போன்ற பதவிகளில் இருப்பார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement