தெற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம் | South Facing House Vastu in Tamil

Advertisement

தெற்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு நல்லது | Therku Partha Veedu Vastu in Tamil

வணக்கம் நண்பர்களே நாம் பொதுவாக ஒரு வீட்டினையோ அல்லது புதிய மனைகளையோ வாங்கும் முன்பு அந்த வீடானது சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்று முதலில் பார்த்துதான் வாங்குவோம். அதிலும் ஒரு சிலர் வீட்டினுடைய வாசல் எந்த திசையை நோக்கி அமைந்துள்ளது என்றெல்லாம் பார்ப்பார்கள். தெற்கு பார்த்த வீடு என்றாலே பலரும் அதை ஒதுக்கிவிடுவார்கள். இப்படி ஒரு சிலர் காரணம் தெரியாமலேயே ஒதுக்குவதால், தெற்கு பார்த்த வீட்டில் குடி பெயருவதற்கு பலர் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் தெற்கு பார்த்த வீட்டை ஒதுக்குவது உண்மையிலேயே சரிதானா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தெற்கு பார்த்த வீட்டில் குடிப்போக அச்சம் கொள்வது ஏன்:

மக்கள் அனைவரும் தெற்கு பார்த்து அமைந்திருக்கும் வீட்டிற்கு குடி போக பயப்பட முக்கிய காரணமாக இருப்பது, அந்த திசை எமதர்மனுக்கு உரிய திசையாக இருப்பதால் தான். இந்த காரணத்தால் தான் அனைவரும் தெற்கு திசை பார்த்த வீட்டைப் பலரும் புனிதமில்லாததாக நினைக்கிறார்கள். ஆனால் அந்த வீடு சரியான வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், எவ்வித பிரச்சனையும் இல்லை. தெற்கு பார்த்த மனைகளை ‘சிம்ம கர்ப்ப மனைகள்’ என்றும் அழைத்து வருகிறார்கள்.

உண்மை தகவல்:

பல பெரிய தொழிலதிபரின் வீடுகள், தொழிற்சாலைகள் தெற்கு திசை பார்த்தே மனைகள் அமைந்திருக்கிறது. இதற்கு காரணம் தெற்கு நோக்கிய வீடு சரியான வாஸ்து சாஸ்திரத்தில் அமைந்திருப்பது தான். தெற்கு பார்த்த மனையை ஐஸ்வர்ய மனை என்று சொல்வார்கள். ஐஸ்வர்யம் என்பது வற்றாத செல்வத்தை குறிப்பதாகும்.

தெற்கு பார்த்த வீடு எந்த ராசிக்கு நல்லது:

தெற்கு பார்த்த வீடு மனையானது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பொருந்தாது. எந்த ராசிக்காரர்களுக்கு பொருந்தும் என்றால் ரிஷபம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், தனுசு மற்றும் சிம்மராசி அன்பர்களுக்கு யோகம் நிறைந்த வீடாக இருக்கும்.

வடக்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

எது எந்த திசையில் வைத்து கட்ட வேண்டும்:

தெற்கு பார்த்த வீடு சாஸ்திரத்தில் சமையலறையை (தென்கிழக்கு, வடமேற்கு) வாஸ்து படியும், பூஜை அறையை (வடகிழக்கு, மேற்கு, கிழக்கு) வாஸ்து படியும், படுப்பதற்கான அறையை (தென்மேற்கு, தெற்கு, மேற்கு) பார்த்த வாஸ்து படியும், தண்ணீர் தொட்டியை வடகிழக்கு பாகத்திலும், கழிப்பறையை தென்கிழக்கு, வட மேற்கு இதில் கழிவுக்கோப்பை வடக்கு, தெற்கு பார்த்து அமைக்க வேண்டும்.

தெற்கு பார்த்த வீடு சாஸ்திரம்:

  1. தெற்கு வாசல் கொண்ட வீட்டில் கிணறு, குளம் போன்றவற்றை வீட்டின் தெற்கு பகுதியில் வைக்கக்கூடாது.
  2. தெற்கு பார்த்த வாசல் கொண்ட வீட்டில், மரங்களை வடகிழக்கு பகுதியில் வைக்கக்கூடாது. அதேப் போல் மாடி படிக்கட்டுகளை வடகிழக்கு பகுதியில் அமைக்கக்கூடாது.
  3. தெற்கு பார்த்த வீடு இன்னும் சிறப்பாக அமைய, வாஸ்து சாஸ்திரத்தின் படி தெற்கு பக்க சுவர், வடக்கு பக்க சுவரை விட உயரமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும்.

வாஸ்து விதிகள்:

  1. தெற்கு பார்த்த வீட்டு மனைகளில் குடி இருப்பவர்கள் மேற்கு பார்த்த வீட்டில் உள்ளவர்களிடம் சம்பந்தம் வைத்துக்கொள்ளக்கூடாது.
  2. ஏனென்றால் தெற்கு பகுதிக்கும், மேற்கு பகுதிக்கும் ஒத்துவராது என்ற காரணத்தால். தேவையற்ற மன கஷ்டங்கள் உண்டாகும்.
  3. ஜாதகம் இல்லாத ஒருவருக்கு தெற்குப் பார்த்த வாசலும் தெற்குப் பார்த்த மனைகளும் நல்ல யோகத்தை கொடுக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement