பூஜை தேங்காய் அழுகினால் அபசகுணமா? Spoiled Coconut During Pooja In Tamil..!

Advertisement

பூஜை தேங்காய் அழுகினால் அபசகுணமா? Spoiled Coconut During Pooja In Tamil..!

அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் பூஜைக்கு வாங்கிய தேங்காய் அழுகி இருந்தால்(spoiled coconut during pooja) நன்மையா? தீமையா? என்ற கேள்விகளுக்கு முழு விவரங்களை இன்னக்கி நாம படித்து தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..!

கோவிலில் தேங்காய் அழுகி இருந்தால் / Spoiled Coconut During Pooja:

நம் வீட்டில் எந்த ஒரு விஷேசம் நடந்தாலும் சரி அதில் முக்கிய இடம் தேங்காய்க்கு தான் இருக்கும். முக்கியமாக சாமிக்கு பூஜை செய்வதில் இருந்து சடங்கு சம்பிரதாயம் என எதுவாக இருந்தாலும் தேங்காய் உடைக்கும் பழக்கம் உண்டு.

வீட்டில் அல்லது கோவிலில் பூஜைக்கு கொடுத்த தேங்காய் அழுகிய நிலையில்(If Coconut Spoiled In Pooja In Tamil) இருந்தால் அபசகுனம் என சிலர் கூறுவார்கள். தேங்காய் உடைத்து பூஜை செய்வதை காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். முன்னோர்கள் பின்பற்றியதை நாமும் இப்பொது கடைபிடித்து வருகிறோம்.

மூன்று கண்கள்:

தேங்காயில் மூன்று கண்கள் உள்ளது. அதில் தேங்காயில் இருக்கும் முதல் கண் பிரம்மன் எனவும் , இரண்டாம் கண் லக்ஷ்மி எனவும் , மூன்றாம் கண் சிவனாக போற்றப்படுகிறது என்று கூறுகிறார்கள்.

தேங்காய் அழுகி இருந்தால் ஏற்படும் சகுனம் / If Coconut Spoiled In Tamil:

அழுகிய தேங்காய், தேங்காய் கோணலாக உடையும்போது, சிதறு தேங்காய் போடும் போது சுக்குநூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது போன்ற பலவற்றை நாம் நல்ல, தீய சகுனமாக பார்க்கிறோம்.

ஆனால் நாம் உடைக்கும் தேங்காயானது வீட்டில் உடைத்து அழுகினாலும், அல்லது கோவிலில் உடைத்து அழுகி போனாலும், அது நமக்கு மிகவும் மன கஷ்டத்தையும்,  சங்கடத்தையும் தான் அதிகமாக தருகின்றது. நாம் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் ஆன்மீகப்படி அது தவறு. சகுணப்படி பார்த்தால் தேங்காய் அழுகியிருந்தால் சரிதான்.

newகுபேர விளக்கு ஏற்றும் முறை..!

சந்தோஷம்:

வீட்டிலோ அல்லது பூஜைக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால்(Spoiled Coconut During Pooja) நல்ல அறிகுறி என்றும், உங்களை அண்டி இருக்கும் பல தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது என்றும் முன்னோர்கள் கூறுகிறார்கள்.

கொப்பரை தேங்காய்:

நீங்கள் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க அதிகமாக வாய்ப்புகள் இருக்கின்றது என்றும் கூறுகிறார்கள்.

தேங்காயில் பூ:

 

நீங்கள் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் பணம் வரவு அதிகமாக வரும், நல்ல லாபம், அதோடு எதிர்பாராத நல்ல விஷயங்கள் அனைத்தும் நடைபெறும் என சகுனம் கூறுகிறது.

அதேபோன்று தேங்காய் அழுகியிருந்தால்(If Coconut Spoiled In Pooja In Tamil) நம்மை பிடித்த தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி எல்லாம் நீங்கிவிட்டது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

தேங்காய் அழுகி இருப்பதனால் நமக்கு எந்த ஒரு தீய விளைவுகளும் ஏற்படாது என்று மனதை அமைதிப்படுத்தி கொள்ளுங்கள்.

இதுபோன்ற ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> ஆன்மீக தகவல்கள் 

 

Advertisement