இந்த ஆண்டு சுக்கிரன் பெயர்ச்சியினால் 4 ராசிகளுக்கு ராஜயோகம்.! இதுல உங்க ராசி இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க..

sukran peyarchi 2023

Sukran Peyarchi 2023

ஜோதிடத்தில் சுக்கிர பெயர்ச்சி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நம் வாழ்க்கையில் நடக்கும் நன்மை மற்றும் தீமை இரண்டிற்கும் சுக்கிர பெயர்ச்சி ஒரு காரணமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சுக்கிர பெயர்ச்சி ஏப்ரல் 6-ம் தேதி, காலை 10:50 AM ரிஷப ராசியில் இடம் மாறுகிறார். சுக்கிர பெயர்ச்சி எல்லா ராசிகளுக்கும் நல்ல பலன்களை கொடுத்தாலும், 4 ராசிகளுக்கு மட்டும் பணவரவை அல்லி கொடுக்க போகிறார். அது எந்தெந்த ராசிகள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

சுக்கிர பெயர்ச்சி 2023:

கும்பம்:

கும்பம்

கும்ப ராசிக்கு நான்காம் மற்றும் ஒன்பதாம் இடங்களுக்கு அதிபதியாக  சுக்கிரன் இருப்பதால் அதிர்ஷ்டமானதாக இருக்கிறது. பணியில் உங்களின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். மற்றும் பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். புதிதாக சொத்துக்கள் வாங்குவீர்கள். சேமிப்பை பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி..! இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்..!

சிம்மம்:

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த செயலையும்  புத்தி கூர்மையுடன் செயல்படுத்துவார்கள். இவர்கள் வாழ்க்கையில் யாருடைய ஆதரவையும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள். பணியில் அல்லது உங்களுக்கு வாய்ப்பு வரும்போதெல்லாம் உங்களை நிரூபித்து காட்டுவீர்கள்.

கடகம்:

கடகம்

சுக்கிரன் கடக ராசிக்காரர்களுக்கு நான்காம் மற்றும் பதினொன்றோம் வீட்டில் அதிபதியாக இருக்கிறார். நீங்கள் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணியில் உங்களின் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலும் பதவி உயர்வும், மதிப்பும் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் சொத்துக்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.

மேஷம்:

மேஷம்

சுக்கிரன் மேஷ ராசிக்காரர்களுக்கு இரண்டாவது மற்றும் பதினொன்றாவது அதிபதியாக இருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது வெற்றியில் தான் முடியும். புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பணவரவு அதிகமாக காணப்படுவதால் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள்.

கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசி எது இந்த சுக்கிரப்பெயர்ச்சி நல்ல காலம் தான்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்