தேய்பிறை அஷ்டமி அன்று இந்த தீபத்தை ஏற்றினால் கோடி கடனும் தீர்ந்து விடும்

Theipirai Ashtami Bairavar Valipadu

Theipirai Ashtami Bairavar Valipadu

கடன் பிரச்சனை என்பது அனைவருக்கும் இருக்கும். ஆனால் அந்த கடனை அடைப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் அதில் சில தடங்கல்கள் உண்டாகும். கடன் பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காக ஆன்மீக ரீதியாக பல பரிகாரங்களை செய்து வருவார்கள். அந்த வகையில் நாளை தேய்பிறை அஷ்டமி அன்று இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் உங்களுக்கு இருக்கும் கோடி கடனை தீர்க்கும் வழி பிறக்கும். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அவை எல்லாம் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். அப்படி உங்களுக்கு எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் அந்த தீபத்தை எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும், எவ்வாறு ஏற்ற வேண்டும் போன்ற விவரங்ளை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேய்பிறை அஷ்டமி பைரவர் தீப வழிபாடு:

Theipirai Ashtami Bairavar Valipadu

நாளை பங்குனி மாதத்தின் முதல் நாள் பிறக்கின்றது. இந்த நாளுடன் சேர்ந்து தேய்பிறை அஷ்டமியும் வருகிறது. இந்த நாளில் நீங்கள் காலபைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அது தீர்ந்து விடும்.

பைரவர் என்பவர் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர். அப்படி கால பைரவரை வணங்குவதற்கு உகந்த நாளாக தேய்பிறை அஷ்டமி கருதப்படுகிறது. தேய்பிறை வளர்பிறை அஷ்டமி நாளன்று பைரவருக்கு வழிபாடு செய்யும் போது தீர்க்கவே முடியாத பிரச்சனைகள் இருந்தாலும் கூட தீர்ந்து விடும்.

அஷ்டமி அன்று இந்த தவறை செய்து விடாதீர்கள்..! அதேபோல் இதை செய்தால் நன்மை உண்டாகும்..!

தீபம் ஏற்றும் இடம்:

சிவன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள கால பைரவருக்கு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்றும் முறை:

 முதலில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், பசு நெய், விளக்கெண்ணெய் போன்ற எண்ணெய்களை வாங்கி கொள்ளுங்கள். பிறகு 5 அகல் விளக்குகளை வாங்கி கொள்ளுங்கள். இந்த அகல் விளக்குகளை புதிதாகத்தான் வாங்க வேண்டும். வீட்டில் உள்ள அகல் விளக்குகளையோ கோவிலில் உள்ள விளக்குகளையோ எடுத்து தீபம் ஏற்ற கூடாது.

 ஒவ்வொரு எண்ணெயையும் ஒவ்வொரு அகல் விளக்கில் தனித்தனியாக ஊற்றி திரிநூல் போட்டு விளக்கு ஏற்றவும். ஒவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு தீக்குச்சி பயன்படுத்தி விளக்கு ஏற்ற வேண்டும். ஏற்றிய விளக்கை பைரவரை பார்த்து வைத்து வணங்க வேண்டும். 
மற்றவர்களிடம் இருந்து இந்த 3 பொருட்களை தானமாக வாங்காதீர்கள்..! கடன் சுமை அதிகரிக்கும்..!

தீபம் ஏற்றும் நேரம்:

தேய்பிறை அஷ்டமி இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.57 மணிக்கு தொடங்கி  புதன் கிழமை மதியம் 3 மணி வரையுடன் முடிகிறது. எனவே நீங்கள் நாளை புதன் கிழமை அன்று மதியம் 3 மணிக்குள் ஏற்றலாம்.

இந்த விளக்கை பைரவருக்கு ஏற்றினால் சுப காரியங்கள் நடைபெறுவதில் தடை இருந்தாலும் சரி, கடன் பிரச்சனை இருந்தாலும் சரி எல்லா கஷ்டங்களும் நீங்கி விடும். அவ்வளவு சக்தி வாய்ந்தது இந்த காலபைரவர் வழிபாடு.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்