வீட்டை கூட்டி குப்பையை இந்த மூலையில் மட்டும் ஒதுக்கிடாதீங்க

Advertisement

குப்பை தொட்டி வாஸ்து

வீட்டை கூட்டி குப்பையை ஒதுக்காத என்று நம் வீட்டில் உள்ள முன்னோர்கள் சொல்லி கொண்டே இருப்பார்கள். குப்பைகளை ஒதுக்கி வைத்தால் வீட்டில் தரித்திரியம் உண்டாகும் என்பதனால் தான் பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் நாம் அதை கேட்பதில்லை. குப்பையை ஒதுக்குவதையே நாம் மூலையில் தான் ஒதுக்குவோம். சில மூலைகளில் மட்டும் குப்பையை ஒதுக்கினால் பணக்கஷ்டம் ஏற்படுமாம். அது எந்த மூளை என்று தெரிந்து கொளவோம்.

குப்பையை ஒதுக்க கூடாத மூலை:

தென்கிழக்கு மூலை வாஸ்து

நம் வீட்டில் பொதுவாகவே குப்பையை ஒதுக்கி வைக்க கூடாது. அப்படி ஒதுக்கி வைத்தால் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் உறவினர்கள் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும்.

நாம் வீட்டை கட்டும் போதே வாஸ்து சாஸ்திரப்படி தான் கட்டுவோம். ஒவ்வொரு அறை, கதவு, ஜன்னல் போன்றவை பார்த்து பார்த்து வைப்போம். வீட்டில் வாஸ்து பகவான் குடியிருப்பதாக ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு திசையிலும் வாஸ்து பகவான் இருக்கிறார். எந்தெந்த மூலையில் எப்படியான வாஸ்து பகவானுடைய உடல் அமைந்து இருக்கிறதோ, அதற்கு ஏற்ப நன்மைகளும் கிடைக்கும். அந்த வகையில் தென்கிழக்கு மூலையை அக்னி மூலை என்று கூறுவார்கள்.

தெற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்

தென்கிழக்கு திசையில் தான் சமையலறை அமைத்திருப்பார்கள். அப்படி அமைந்திருக்கும் சமையலறையில் பக்கத்தில் பாத்ரூம் இருக்க கூடாது. அதாவது நீரை பயன்படுத்தி செய்யும் எதுவும் அங்கு இருக்க கூடாது.

 வீட்டில் தென்கிழக்கு மூலையில் குப்பையை ஒதுக்க கூடாது. அப்டி ஒதுக்கி வைத்தால் வீட்டில் சம்பாதிக்கும் பணம் தங்காது, பணக்கஷ்டம் ஏற்படும், தொழிலில் கஷ்டம் ஏற்படும், கையில் பணம் தங்காது, அதனால் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் குப்பைகளை தென்கிழக்கு மூலையில் ஒதுக்கி வைக்காதீர்கள். இந்த திசையில் மட்டுமில்லை குப்பைகளை ஒதுக்கி வைக்காமல் உடனே அள்ளி விடுவது நல்லது.  

சமயலறையில் இந்த பொருட்கள் இருந்தால் கஷ்டம் மேல் கஷ்டம் ஏற்படும்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement