துலாம் ராசிக்காரர்களுக்கு பொருத்தமான ராசிகள் எது தெரியுமா.?

Suitable zodiac sign for Libra in tamil

துலாம் ராசிக்கு பொருந்தும் ராசிகள்

வணக்கம் ஆன்மிக நண்பர்களே..! இன்றைய பதிவில் துலாம் ராசிக்காரர்களுக்கான பொருத்தமான ராசிகள் எது என்று தெரிந்து கொள்ளலாம். ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. அதில் 7 வது இடத்தில் இருப்பது தான் துலாம் ராசி. துலாம் ராசியின் அதிபதி சுக்கிர பகவானார். துலாம் ராசியில் சுவாதி, விசாகம், சித்திரை போன்ற நட்சத்திரங்கள் உள்ளது. இந்த மிதுன ராசிகர்களுக்கு பொருத்தமான ராசிக்காரர்கள் யார் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் ⇒ மிதுன ராசிக்காரர்களுக்கு பொருத்தமான ராசிக்காரர் யார்..?

துலாம் ராசிக்காரர்களுக்கு பொருத்தமான ராசிக்காரர்கள் யார்.? 

துலாம் ராசிக்காரர்கள் அனைவரிடமும் பணிவாக நடந்து கொள்வார்கள். இவர்கள் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றி கொள்ள மாட்டார்கள். அனைவரிடமும் ஒரே மாதிரயாக அன்பு செலுத்துவார்கள். இவர்கள் கூட இருப்பவர்களை அக்கறையாக பார்த்து கொள்வார்கள்.

இவர்கள் இருக்கிற வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் ரசித்தும் வாழ்வார்கள். இவர்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் வல்லவராக இருப்பார்கள். தங்களின் வாழ்க்கை துணையை அவர்களுக்கு மேலாக நினைப்பார்கள். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளின் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

திருமணம் பொருத்தம் எப்படி இருக்கும் என்று பார்த்த பிறகு தான் திருமணம் செய்வார்கள். அந்த வகையில் துலாம் ராசிக்காரர்கள் எந்த ராசிக்காரர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்றால் மேஷம் ராசிக்காரர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ராசிகளை வைத்து தெரிந்து கொள்வது போல நட்சத்திரங்களை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசியில் சித்திரை (பாதம் 3, 4) உள்ள நட்சத்திரங்கள் எந்த நட்சத்திரங்களில் உள்ளவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்  என்று பார்ப்போம்.

பெண் நட்சத்திரங்கள்:

துலாம் ராசியில் சித்திரை (பாதம் 3,4) உள்ள நட்சத்திரங்கள் கொண்ட ஆண்கள் விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம் நட்சத்திரம் உள்ள பெண்களை  திருமணம் செய்து கொள்ளலாம்.

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரம் கொண்ட ஆண்கள் அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம் நட்சத்திரம் உள்ள பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

துலாம் ராசியில் விசாகம் (பாதம் 1,2,3) நட்சத்திரம் கொண்ட ஆண்கள் சதயம், ஆயில்யம் நட்சத்திரம் உள்ள பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

ஆண் நட்சத்திரங்கள்:

துலாம் ராசியில் சித்திரை (பாதம் 3,4) உள்ள நட்சத்திரங்கள் கொண்ட பெண்கள் கார்த்திகை 1, மகம் நட்சத்திரம் உள்ள ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரம் கொண்ட பெண்கள் பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம் நட்சத்திரம் உள்ள ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

துலாம் ராசியில் விசாகம் (பாதம் 1,2,3) நட்சத்திரம் கொண்ட பெண்கள் அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4 நட்சத்திரம் உள்ள ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

இது போன்ற ஆன்மீக தகவலை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்